• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-விமர்சன அலசல்

அன்பானவர்களுக்கு,

ஒரு இனிய செய்தி.

கடந்து 28 வருடங்களாக நான் எழுதுகிறேன். கண்ணில் கண்டதை, மனத்தைத் தொட்டதை எல்லாம் கவிதைகளாக எழுத்து வடிவம் பெறும்.

திருமணத்திற்கு முன் என் கணவரைச் சந்தித்த போது நான் பேசிய கவிதை வீடியோ அனுப்பினேன். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பேச்சு மொழி மட்டுமே தமிழ் அவருக்கு.

ஒன்றும் புரியவில்லை என பதில் அனுப்பினார். 'நீ ஒரு கருத்தை சொல்ல வருகிறாய் ஆனால் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமானால் எளிமையாக்கு' என சொல்லிக் கொண்டிருப்பார்.

அதுவரை இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு படைப்புக்குப் பின் பிறர் தரும் கருத்துகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் முக்கியமானது.

எங்கோ அன்றாட வாழ்வில் தமிழை காதுகளில் கேட்க முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எழுத்துக்களால் உங்களுடன் பேச ஒரு வாய்ப்பாகத் தான் இத்தளத்தை கருதுகிறேன்.

வால்வெள்ளி ஓவியத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவு மகிழ்விக்கிறது என்னை மிக மிக.

இந்த நாவல் முடியுற்ற பிறகு, ஒரு சின்ன விமர்சன அலசல் வைத்துக் கொள்வோமா?

ஹானஸ்ட் ரிவ்யூ, உண்மைத்தன்மை உடனான விமர்சனம்; அதில் நிறையும் இருக்கலாம், அட போமா ஒன்னும் புரியல...அப்படின்னும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். எழுதறீங்களா?

சிறந்த விமர்சனப் படைப்பு மூன்றுக்கு ஒரு பரிசு உண்டு.
என்ன பரிசு கொடுக்கலாம்??

நம் சரண்யாவின் 'ஸ்டோரிஸ் ஹட் ஆப்' சந்தா இரண்டு மாதங்களுக்கு மூன்று பேருக்கும் கொடுக்கலாமே!

எழுதுவீங்களா?

ஏன் இது எனக்கு முக்கியமானது?
உங்கள் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த வெகுவாக உதவும். உதவுங்களேன்.

கதை முடிவடைந்தவுடன், இந்தத் திரியிலேயே உங்கள் விமர்சனங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.

மனம் நிறைந்த நன்றியும் அன்பும்,

சாந்தி உடையப்பன்.
 
Last edited:
இப்போ உங்கள் முறை... நேரம் ஒதுக்கி விமர்சியுங்கள்,
என் எழுத்தை மேம்படுத்த உதவுங்கள் காத்திருக்கிறேன்!

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன். :love: :love: ❤️
 
எழுதிவிட்டு போய்விடுவதில் மட்டும் என் மனம் நிறைவு கண்டிடாது. உங்கள் கருத்துக்களும் வேண்டும். என்ன நீங்கள் உணர்ந்தீர்கள், ஏதாவது கற்க இருந்ததா? இப்படி நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களது மேலான விமர்சனங்களைத் இத்திரியில் பதிவிட இறுதி நாள் மார்ச் ஆறாம் தேதி. 06-03-2026.

செய்யுங்கள் காத்திருக்கிறேன்.UFUFUF
 
ஆழ்ந்த எழுத்து , அழகான கதை. அதிரையனை போன்ற ஆளுமைகள் எங்கோ உருவாகி வாழ்ந்து கொண்டு அரண்யாக்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள். பிள்ளைப் பேற்றை கொண்டாட்டமாக, பயமாக, எதிர்பார்ப்பாக பார்த்து பழகியதிற்கு மத்தியில் ஒரு நடைமுறை எதார்த்தமாக வேறு விதத்தில் காட்டியது பெருஞ்சிறப்பு. கல்வியின் பெருமைகளை எவ்வளவுதான் உறக்க கூறினாலும் பலபேருக்கு அது ஒரு எட்டாக்கணி என்பது நிதர்சனமான உண்மை. முதல் அத்தியாயத்தில் எழுந்து நின்று சமுதாய நடைமுறையை எதிர்த்து நின்ற வீரமங்கைக்கும், சத்தமின்றி அவள் கனவுகளை நிஜமாக்கித்தந்த அப்ரண்டிஸ் அதிரையனுக்கும் தனது பேத்தியின் நல்வாழ்விற்கு போற்கொடி தூக்கிய தத்துப் பாட்டிக்கும், மற்றும் அழகான கதையை நமக்களித்த சகோதரி சாந்திக்கு உள்ளம் நிறைந்த அன்புகளும் வாழ்த்துக்களும். எங்கும் நிறைந்து போதல் மிக அருமையான ஒரு சொல்லாடல். அரண்யா என்னும் வால்வெள்ளி அதிரையன் என்ற சூரியனுக்கு அருகில் பலபல ஒளிக்கற்றைகளை வீசி அழகான ஓவியம் படைத்துள்ளது.
 
ஆரம்பித்து வைத்ததற்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி
:)
 
மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. திருமதி ஜெயந்தி அவர்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட விமர்சனம் இது:

சாந்தி சகோ எழுதிய வால்வெள்ளி ஓவியம் படித்தேன்.அப்பா என்ன ஒரு எழுத்துநடை ,வார்த்தைகளின் வசிகரம் கதை கொண்டு செல்லும் முறை இவர்முதல் கதை எழுதியவர் என்றால் நம்ப முடியலை. ஒரு கிராமமே படிப்பின் அவசியத்தை அசால்டாக நினைப்பதுடன் மத அடிப்படையில் வாழும் நிலையில் இருக்கும் இடத்தில் ஒரு மனித கடவுளாக மாறி அந்த கிராமத்தையே தன் வசம் கொண்டுவந்த நம் நாயகன் அதிரையன். எத்தனை பெரியார்கள் இந்த பூமிக்கு வந்தாலும் பெண்களுக்கு நடக்கும் சில மன வேதனையும் வலிகளும், அடக்குமுறையும் குறைய போவதில்லை. ஆனால் அதி மாதிரி அபூர்வமான மனிதர்களால் இந்த பூமியில் தர்மங்கள் காக்கப்படுகிறது. சாந்தி சகோ ஒரு பெண்ணின் தலையெழுத்தே படிப்பால் உயரும் என்பதையும், பெண்ணின் வாழ்வு முறையையும் அழகாக தன் எழுத்தால் வடித்திருக்கிறார். இதில் வரும் பல கதாப்பாத்திரங்கள் நம் மனதை வருடினாலும் பியூட்டி பாட்டி மனதில் நங்கூரமாய் நிறைந்துவிட்டார் . இந்த உலகில் அவர் ராசாத்திதான் அதி படிப்பு படித்த மேதாவி கியூட்டிக்கு. நண்பன் வீட்டுக்கு வந்த இடத்தில் ஒரு பெண். தன் மேற்படிப்புக்கு உறவையும்,கிராமத்தைமையும் எதிர்த்து போராடுவதையும் அவளின் ஆதங்கத்தையும் , துணிச்சலையும் பார்த்து வியந்த அதிரையன், அவளின் மேல் காதல் மலர்ந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் யாரையும் காயப்படுத்தாமல் தன் தாய் வளர்ப்பை நிலை நிறுத்திய தங்க பிள்ளை. தன் மனையாளுக்கே தெரியாமல் அவளை சிறை மீட்டு சிறகை விறிக்கவிட்டு சாதித்தான் நம் நாயகன். திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணுக்கு தன் கணவனால் கிடைக்கும் சுதந்திரமும் , லட்சிய பாதையில் போவதற்கான வழி முறையும் கிடைத்துவிட்டால் வாழ்வில் பெண் தன் குடும்பம்,வாக்கப்பட்ட இடம் என்று அணத்திலும் கௌரவத்தை நிலை நாட்டிவிடுவாள் என்பதற்கு அரணயாவே சான்று. நம் நாயகன் தன் பொண்ணுவை தன் கரங்களுக்குள் வைத்தே அவளை சாதிக்க வைத்து இன்ப சாரலில் நனைந்தான் என்றால் மிகையல்ல. எனக்கு மட்டுமே என் பொண்ணு என்ற பொசஸிவ் கூட அழகுதான். காமத்தை கூட அழகாக வறைமுறை படுத்தி கையான்ட நம் ஆர்த்தருக்கு சல்யூட். நிறைய இடத்தில் இதயம் கனக்க செய்தார் நம் சாந்தி சகோ. பெண்ணுக்கு ஒரு பொண்ணு வேண்டும் என்று நம்நாயகன் எதிர் பார்ப்பிலும் சரி , அவர் பொண்ணு சாதித்து மேடை ஏறும்போதும் சரி ஒரு பிறப்பே பிறந்துவிட்டார் அதிரையன். தன் மணையாளின் உறவுகளையும் தன்போல் வசிகரித்து தங்கமான மாப்பிள்ளை என்று பெயர்பெற்று தன் மனையாளை தன் இதயத்தில் பூட்டிய நம் நாயகனைப் பார்த்து ஆண்கள் மாற முயற்சித்தால் சாந்தி சகோக்கு கிடைத்த மனி மகுடம் அல்லவா, அடுத்த பிறவி என்றால் நான் அதிரையனாக பிறக்க ஈசன் வழிமொழியட்டும் . நிறைய எழுத ஆசைதான். இந்த கதை வழியாக நீங்கள் தடம்பதித்தாலும் இன்னும் பல ,பல கதைகளை ஆராதிக்க ஆவலுடன் என்றென்றும் நாங்கள் சாந்தி சகோ.....

WhatsApp Image 2026-02-28 at 4.41.20 PM.webp
 
அன்பானவர்களுக்கு,

ஒரு இனிய செய்தி.

கடந்து 28 வருடங்களாக நான் எழுதுகிறேன். கண்ணில் கண்டதை, மனத்தைத் தொட்டதை எல்லாம் கவிதைகளாக எழுத்து வடிவம் பெறும்.

திருமணத்திற்கு முன் என் கணவரைச் சந்தித்த போது நான் பேசிய கவிதை வீடியோ அனுப்பினேன். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பேச்சு மொழி மட்டுமே தமிழ் அவருக்கு.

ஒன்றும் புரியவில்லை என பதில் அனுப்பினார். 'நீ ஒரு கருத்தை சொல்ல வருகிறாய் ஆனால் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமானால் எளிமையாக்கு' என சொல்லிக் கொண்டிருப்பார்.

அதுவரை இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு படைப்புக்குப் பின் பிறர் தரும் கருத்துகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் முக்கியமானது.

எங்கோ அன்றாட வாழ்வில் தமிழை காதுகளில் கேட்க முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எழுத்துக்களால் உங்களுடன் பேச ஒரு வாய்ப்பாகத் தான் இத்தளத்தை கருதுகிறேன்.

வால்வெள்ளி ஓவியத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவு மகிழ்விக்கிறது என்னை மிக மிக.

இந்த நாவல் முடியுற்ற பிறகு, ஒரு சின்ன விமர்சன அலசல் வைத்துக் கொள்வோமா?

ஹானஸ்ட் ரிவ்யூ, உண்மைத்தன்மை உடனான விமர்சனம்; அதில் நிறையும் இருக்கலாம், அட போமா ஒன்னும் புரியல...அப்படின்னும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். எழுதறீங்களா?

சிறந்த விமர்சனப் படைப்பு மூன்றுக்கு ஒரு பரிசு உண்டு.
என்ன பரிசு கொடுக்கலாம்??

நம் சரண்யாவின் 'ஸ்டோரிஸ் ஹட் ஆப்' சந்தா இரண்டு மாதங்களுக்கு மூன்று பேருக்கும் கொடுக்கலாமே!

எழுதுவீங்களா?

ஏன் இது எனக்கு முக்கியமானது?
உங்கள் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த வெகுவாக உதவும். உதவுங்களேன்.

கதை முடிவடைந்தவுடன், இந்தத் திரியிலேயே உங்கள் விமர்சனங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.

மனம் நிறைந்த நன்றியும் அன்பும்,

சாந்தி உடையப்பன்.
முழுமையான ஒரு feelgood கதை... முதலில் இப்படி ஒரு கதை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏

தணிச்சலான நாயகி.. ஊரே கூடியிருக்கும்போது தனது கருத்தில் ஸ்திரமாக நிற்கும் பாங்கு சிறப்பு. அவரை தாங்கும் அப்பத்தா ❣️ . இப்படி‌ஒரு துணை கிடைத்தால் வாழ்வே சொர்க்கம் தான். நாயகியை encourage செய்து உச்சத்திற்கு கொண்டு சென்றது.. அவளை தாங்கி அரவணைத்து, சொந்தங்களையும் அரவணைத்து... மிக இனிமையான கதை.

தினமும் காலை எழுந்தவுடன் படித்துவிட்டு தான் மற்ற வேலைகள் எல்லாம்.. அந்தளவிற்கு எதிர்பார்க்க வைத்தது.

நீங்கள் மேலும் மேலும் நிறைய கதைகள் எங்களுக்காக எழுதுங்கள்.. எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

மிக்க நன்றி சாந்தி மேம்... நிறைய‌ நிறைய அன்புகள் வாழ்த்துக்கள் உங்களுக்கு 👏👏👏👏👏
 
Back
Top
Developed and maintained by – Akeshya