படிக்க படிக்க தாங்கவே முடியலை. கெட்டழியறவனுங்க செஞ்சுட்டு போறதுக்கு பலி சில பல உயிர்கள், இருப்பவர்களுக்கு உணர்வு மரத்த வாழ்வு , குடும்பமே சிதறிப்போனது தான்.
வலி தான். தாங்க முடியாதது தான். ஆனால் மீனாள் இன்னும் கொஞ்சம் உறுதியாக இருந்து பிழைத்திருக்கலாமே, வாழ்ந்திருக்கலாமே. டாக்டர்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? தனியாரிடம் சென்று மனதையும், உடலையும் பேணிக்கொள்வதன் அவசியத்தை சொல்லி வற்புறுத்தியிருக்கலாம், அரசினர் மருத்துவமனையில் நீண்டநாள் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தால். ஆனால் மீனாள் படும் துயர் படிக்க அவனுங்களை சித்ரவதை செய்து கொன்றிருக்க வேண்டுமென தோன்றுகிறது. செய்ததை உணரும் முன்னமே போய்ட்டானுங்க.