அங்காள்
SH Crystal Member
இருள் சூழ்ந்த வெறுமை கண்டேன்
வெளிச்சத்திற்கான தேடலில்
கருமேகம் போல் துன்பங்கள்
என்னைச் சுற்றி வளைக்க
இடிகள் போல் வலிகள் இடிக்க
கனமழை போல் கஷ்டம் பொழிந்தது !
சோர்ந்து போனேன் சோகத்தின் சூழ்ச்சியால்
பொங்கி எழுந்தன என்னுள் கேள்விகள்
கனவுகள் என்றும் காயங்களா ?
முயற்சி வெறும் வலிகளா ?
தேடல் தருவது துக்கங்களா ?
விதைகள் இருப்பது வீழ்வதற்கா ?
முக்கடலைத் தேடினேன்
மூழ்கி எழுந்தால்
மோட்சம் கிடைக்கு மென்று ...
மூழ்கிப் போன என்னை உலுக்கி எழுப்ப
பரிதியின் கதிரால் விழித்துக் கொண்டேன் !
காயங்கள் பாடங்களாக
வலிகள் வேதங்களாக
மாணவனானேன் வாழ்க்கை
என் ஆசானான போது !
கேள்விக்கான பதிலைப் பெற்றேன்
விரிவுபெற்ற என் பார்வையால் !
விதைகள் வீழ்வது துயரத்தால் அல்ல
மரமாக விதைக்கப் பெற்று
காட்டை உருவாக்குவதற்கென்று !
கற்பிக்க வாழ்க்கை தயாராக
கற்றுக்கொள்ள நான் தயாரானேன் !
முட்டாள் மனமே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?
தேர்வு முடிந்த பிறகு கற்றேன்
வீழ்வது விதைக்கப் படுவதற்கே என்று !!!
வெளிச்சத்திற்கான தேடலில்
கருமேகம் போல் துன்பங்கள்
என்னைச் சுற்றி வளைக்க
இடிகள் போல் வலிகள் இடிக்க
கனமழை போல் கஷ்டம் பொழிந்தது !
சோர்ந்து போனேன் சோகத்தின் சூழ்ச்சியால்
பொங்கி எழுந்தன என்னுள் கேள்விகள்
கனவுகள் என்றும் காயங்களா ?
முயற்சி வெறும் வலிகளா ?
தேடல் தருவது துக்கங்களா ?
விதைகள் இருப்பது வீழ்வதற்கா ?
முக்கடலைத் தேடினேன்
மூழ்கி எழுந்தால்
மோட்சம் கிடைக்கு மென்று ...
மூழ்கிப் போன என்னை உலுக்கி எழுப்ப
பரிதியின் கதிரால் விழித்துக் கொண்டேன் !
காயங்கள் பாடங்களாக
வலிகள் வேதங்களாக
மாணவனானேன் வாழ்க்கை
என் ஆசானான போது !
கேள்விக்கான பதிலைப் பெற்றேன்
விரிவுபெற்ற என் பார்வையால் !
விதைகள் வீழ்வது துயரத்தால் அல்ல
மரமாக விதைக்கப் பெற்று
காட்டை உருவாக்குவதற்கென்று !
கற்பிக்க வாழ்க்கை தயாராக
கற்றுக்கொள்ள நான் தயாரானேன் !
முட்டாள் மனமே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?
தேர்வு முடிந்த பிறகு கற்றேன்
வீழ்வது விதைக்கப் படுவதற்கே என்று !!!