• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உயராத உயரம்

அங்காள்

SH Crystal Member
தனித்து நின்றேன்
சுயநலம் என்றனர்
கும்பலோடு கலந்தேன்
திறமை யற்றவள் என்றனர்

பேசிப் பழகினேன்
வாயாடி என்றனர்
மௌனம் காத்தேன்
தந்திரம் என்றனர்

தவறுகளை தண்டித்தேன்
அராஜகம் என்றனர்
பணிவுடன் கூறினேன்
கோழை என்றனர்

மதித்து நடந்தேன்
ஜால்ரா என்றனர்
குரல் கொடுத்தேன்
திமிர் என்றனர்

பாதுகாப்போடு இருந்தேன்
பயந்தவள் என்றனர்
துணிவோடு செயல்பட்டேன்
அகம்பாவம் என்றனர்

சுயமரியாதை காத்தேன்
ஆணவம் என்றனர்
விட்டுக் கொடுத்தேன்
தூக்கி எறிந்தனர்

உயர்வான மனித இனத்தின்
உயராத உயரம் கண்டேன் !!!
 

Attachments

  • 17.webp
    17.webp
    80.7 KB · Views: 0
Back
Top
Developed and maintained by – Akeshya