• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

அப்பா

அங்காள்

SH Crystal Member
உயிர்பெற்று எழுந்தேன்
அன்புக்குரியவரால்

அடையாளம் பெற்றேன் அவர் பெயரின்
முதல் எழுத்தால்

விதைத்தார் ஒழுக்கம் என்ற விதையை
என்னுள்

ஒளி வீசினார் எனது‌ தூய்மையற்றவற்றை
வீசி எறிய

வடிவம் பெற்றேன் அவரது
கூர்மையான உளியால்

வழி காட்டினார் என் வாழ்க்கையை
நான் தேடிக்கொள்ள

நன்றி கூற வார்த்தையில்லை
எனினும்
எழுதினேன் ஒரு கவிதை

என் வாழ்க்கை பேராசிரியருக்காக !
 

Attachments

  • 27.webp
    27.webp
    57.9 KB · Views: 0
Back
Top
Developed and maintained by – Akeshya