• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

Re-run story selection

நீங்கள் ஆரம்பத்தில் பெண்மையில் எழுதிய கதைகள் லிஸ்ட் எங்கே
 
அன்புத் தோழமைகளே!!!
வரும் திங்கள்(14July2025) முதல் ஏதேனும் ஒரு கதையை ரீ-ரன் செய்யப் போகிறேன்.. அது எந்த கதை என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. இதுவரை நான் 22 கதைகளை எழுதி இருக்கிறேன்.. நீங்கள் தேர்வு செய்ய, எனது கதைகளில் இருந்து ஏழு கதைகளின் பெயரையும், அதன் கதை சுருக்கத்தையும் தருகிறேன். உங்கள் விருப்பத்தை கூறுங்கள்.. எந்த கதை அதிக வாக்கை பெறுகிறதோ அதை ரீ-ரன் செய்வேன்.

1. “விட்டாலும் விலகாதே!” –> Professor – Student Love story
2019 ல் “Ladys wings” என்ற தளத்தில் “super writer contest 2019” ல் மூன்றாவது பரிசு பெற்ற கதை. பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளைச் சுற்றியே கதை சுழலும்.. உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் திவ்யாவின் சேட்டையால் ஆசிரியர்கள் அவளை கண்டாலே அலற, புதிதாக வரும் பேராசிரியர் ஹரீஷ் அவளை சுலபமாக கையாளுகிறான். அவன் மீது திவ்யா காதல் வயப்பட, முதலில் அவளது காதலை மறுப்பவன், தன் காதலை அவளிடம் சொல்லும் போது அவள் இவனை விட்டு விலக நினைக்கிறாள்.. அதன் பிறகு ஹரீஷ் திவ்யாவை தன்னை மட்டுமன்றி அவளது உறவுகளிடம் இருந்தும் விலக விடாமல் எப்படி இணைக்கிறான் என்பதை பற்றிய கலகலப்பான கதை தான் “விட்டாலும் விலகாதே!!”

2. “மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!” – கலகலப்பான குடும்ப காதல் கதை.
நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட சுட்டித்தனம் நிறைந்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணான செந்தமிழினி நம் கதையின் நாயகி. அவள் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
பாறை என இறுகிப் போன
அத்வைத்தின் மனதினுள் நேசப்பூவை மலரச் செய்து, அவன் வாழ்வில் எப்படி காதல் எனும் மகரந்தத்தை மணம் வீசச் செய்கிறாள் என்பதே இக்கதை. குடும்ப அரசியலுக்கு பஞ்சமில்லாத போதிலும் இக்கதை கண்டிப்பாக உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்..

3. “புல்லாங்குழலே! பூங்குழலே!” - நவீன ராஜா கதை. (மாறவர்மசிம்மன் - மீனாட்சி)
சோழர்களைப் பற்றிய கதைகளையே அதிகம் படித்து இருப்பீர்கள்.. ஒரு மாற்றத்திற்கு திருநெல்வேலியை தலைநகரமாக கொண்ட தென்காசி பாண்டியர்களின் வம்சா வழி வந்தவர்களின் காவியம் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை இக்கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.. ராஜாங்கத்தில் இருக்கும் ஆளுமை, விசுவாசம், நட்பு, காதல், பாசம், வஞ்சம், சூழ்ச்சி, தந்திரம், துரோகம் என்று அனைத்தையும் எதிர்பாரா திருப்பங்களுடன் இக்கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

4. “தழல் பட்சியவள் பைரவி!” – crime கலந்த குடும்ப கதை.
ஆளுமை நிறைந்த நாயகியை மையப்படுத்திய விறுவிறுப்பான கதை. சிறு வயதில் நிகழ்ந்த, வாழ்வை புரட்டிப் போடக் கூடிய சம்பவத்தில் துவண்டு விழாமல் (ஃபீனிக்ஸ் பறவை)தழல் பட்சியைப் போல் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு எழுச்சியுடன் மீண்ட கெத்தான அதிரடியான காவல்துறை துணை ஆணையர்(ACP) தான் நம் நாயகி பைரவி. கயவர்களை அழிக்கும் தழுலும் அவளே!
அக்னிப் பறவையான பைரவியை உயிராக நேசிக்கும் நாயகன்
ருத்ரேஷ்வர் எப்படி தனது காதலை மீட்டெடுக்கிறான் என்பதையும், பைரவியின் நுணுக்கமான புலன் விசாரணையையும் இணைத்து கூறவதே இக்கதை.

5. “எமபுர மாயமும் அபயனும்!” - வட்டார வழக்கில் நான் எழுதிய முதல் முறை
காதலும், நகைச்சுவையும் சற்றே திகில் கலந்த கிராமிய மணம் வீசும் கதை. சுட்டித்தனமும் குறும்பும் நிறைந்த அறிவாளியான அமிர்தவள்ளி, நம் கதையின் நாயகி மட்டுமில்லை, மங்கலபுரம் கிராமத்தின் நாயகியும் அவளே! 'மங்கலபுரம்' என்ற அழகான பெயர் 'எமபுரம்' என்று உருமாறிய காரணம் என்ன? அதன் மர்மம் தான் என்ன? இக்கிராமத்திற்கு நாயகன் அபய்தேவ் எதேர்ச்சையாக தான் வருகிறானா! இல்லை அவனது வருகையில் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா? எமபுர மாயத்தில் சிக்கிக் கொள்கிறானா! இல்லை நாயகியிடத்தில் அவன் மனம் சிக்கிக் கொள்கிறதா? இல்லை இரண்டிலும் சிக்கி, வெல்கிறானா? என்பதை எல்லாம் பற்றி கூறும் கதை தான் இது.

6. “அரளிப்பூ ஆராதணை!” –> professor – professor love story.
நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட, எதையுமே வித்தியாசமாகச் சிந்தித்து செயல்படும் இசை பித்தனான விகிர்தன் தான், இந்தக் கதையின் நாயகன். அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது.
அரளிப்பூ என்றாலும் அதற்கும் மண(ன)ம் உண்டு என்று ஆராதனை செய்யும் விகிர்தனின் உன்னத காதலையும், இளமையில் தவறு செய்து திருந்தி இருக்கும் நாயகியைப் பற்றியும் சொல்லும் கதை இது.

7. “அத்தம் நீக்கி சித்தம் நிறைத்தாய்!” – கலகலப்பான காதல் கதை.
“tamilnovelwriters.com” 2023ல் நடத்திய ‘கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை-PhaseI’ போட்டியில் வெற்றி பெற்ற கதை. இது நகைச்சுவை நிறைந்த குடும்ப காதல் கதை. பாலை போன்ற வறண்ட கடின வாழ்வை மேற்கொள்ளும் நாயகனின் வாழ்வில் காதல் எனும் மகரந்தத்தை தூவி அவனது வாழ்வை வசந்தமயமாய் மாற்றும் நாயகியின் காதலைப் பற்றிய கதை.

உங்கள் விருப்பத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
From 1 can do rerun
 
நீங்கள் ஆரம்பத்தில் பெண்மையில் எழுதிய கதைகள் லிஸ்ட் எங்கே
@amirthababu
இந்த லிஸ்ட் முடித்த பிறகு அவற்றை ரீ-ரன் செய்றேன் க்கா
-கோம்ஸ்.
 
1
 
Back
Top
Developed and maintained by – Akeshya