• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

:-) Happy News :-)

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!

😊 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊

மகிழ்ச்சியான செய்தியுடன் வந்திருக்கிறேன்.... இந்த ஆண்டில் எனது பதிப்பகத்தில் புதிதாக ஒரு எழுத்தாளர் சேர்ந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மாதத்தின் இறுதியில் எனது "Ammu Publication"யில் வெளிவர இருக்கும் இரண்டு நேரடி புத்தகங்கள் இதோ:


1. உள்ளமெங்கும் உன் மணமே! – கோமதி அருண்

2. கனல் பொழியும் மேகம் – புவனா மாதேஷ்


கதை கரு:

1. உள்ளமெங்கும் உன் மணமே!
இது இரு பெண்களின் ஆழமான காதலை எடுத்து கூறும் கதை. விதியும் சதியும் சேர்ந்து ஒரு காதலை பிரிக்க, அதன் பிறகு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை பற்றியும், மனதின் ரணத்தினால் திருமணத்தை வெறுக்கும் ஆணின் மனதில் காதலை மலர செய்யும் பெண்ணின் காதலை பற்றியும் எனது பாணியில் நகைசுவையும் எதிர்பாரா திருப்பங்களுடனும் எழுதி இருக்கிறேன்.

2. கனல் பொழியும் மேகம் - மேகங்கள் ஒன்று திரண்டால் மழை மேகங்களாக மாறுமாமே? இங்கும் இரண்டு மேகங்கள் ஒன்றிணைக்கின்றன... அது மழை மேகங்களாக மாறுமா? இல்லை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி இடி மின்னலை உருவாக்குமா? என்பதை தான் இக்கதையில் எனது பாணியில் எழுதி இருக்கேன்...

புத்தகங்களை வாங்கி, படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து எங்களையும் மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
வாழ்த்துக்கள் கோம்ஸ். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா.
 
வாழ்த்துக்கள் கோம்ஸ்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
Back
Top
Developed and maintained by – Akeshya