சாந்தி உடையப்பன்
Writer
நீலவானத்தின் நீண்டு பரந்த கால்கள்
எல்லைகள் தாண்டி எழுந்து கடக்க
கடவுச்சீட்டுகள் கையில் கொள்வதில்லை
நித்திலத்தில்
நீக்கமற நிறைந்த பரிசுத்தம்
எந்த மனித மனத்திலும்
என்றும் வாழ்ந்து போன
வழித்தடங்களில்லை
வெண்மேகம் குழுவாய் கூடி
ஓதிக் கொள்ளும் வேதத்தால்
ஓங்கி ஒழுகும் மழை
சாதி பார்த்து
சட்டை நனைப்பதில்லை
குறுமணலை கொட்டிக் கொண்டு
படுக்கை கட்டும் கடற்பரப்பு
ஏழ்மையான எந்த மடிக்குமட்டும்
பள்ளம் பறிப்பதில்லை
இறை வடித்த விதியெதற்கும்
இருக்கவில்லை வேற்றுமை
கரைபடிந்த மனிதமனம் தவிர!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-4 (1)
மையல் நவில் மதுரமே-4 (2)
எல்லைகள் தாண்டி எழுந்து கடக்க
கடவுச்சீட்டுகள் கையில் கொள்வதில்லை
நித்திலத்தில்
நீக்கமற நிறைந்த பரிசுத்தம்
எந்த மனித மனத்திலும்
என்றும் வாழ்ந்து போன
வழித்தடங்களில்லை
வெண்மேகம் குழுவாய் கூடி
ஓதிக் கொள்ளும் வேதத்தால்
ஓங்கி ஒழுகும் மழை
சாதி பார்த்து
சட்டை நனைப்பதில்லை
குறுமணலை கொட்டிக் கொண்டு
படுக்கை கட்டும் கடற்பரப்பு
ஏழ்மையான எந்த மடிக்குமட்டும்
பள்ளம் பறிப்பதில்லை
இறை வடித்த விதியெதற்கும்
இருக்கவில்லை வேற்றுமை
கரைபடிந்த மனிதமனம் தவிர!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-4 (1)
மையல் நவில் மதுரமே-4 (2)
Last edited: