• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே- கதை அறிமுகம்

தோழமைகளுக்கு வணக்கம்,

கைக்கொள்ளும் பொற்சுடரே நாவலுக்கு நீங்கள் தந்த ஊக்கமும் அன்பும் என்னில் நிறைகிறது.

இப்போ நமது வழக்கமான கதைத் தளத்திற்குத் திரும்புகிறேன்.

அடுத்து என்ன...என்ன..என்ன...என யோசிக்கும் போது

ஆங்..இந்தப் பிரச்சினையை நாம் பேச வேண்டுமே என்று பல நாட்களாக யோசித்து, சரி இப்போ எழுதிவிடலாம் என முடிவு செய்து இருக்கிறேன்.

எழுதுகோலோடே எழுந்தருளிய கலியுகக் கர்ணன்
நம் பாரதி நமக்காக பேசிய சுதந்திரம் என்பது வேறு. இன்றைய சூழலில் சுவாசிக்கப்படும் சுதந்திரம் என்பது வேறு. ஒரு எல்லை கடந்து அந்த சுதந்திரம் பயணித்தால் என்னவாகும் என்பதுதான் கதையின் கரு.

வழக்கம் போல ஒரு சமூகப் பிரச்சினையை நம் பாணியில் அலசுவோம்.

கதை நாயகன்: ரிஷி நந்தன்
கதை நாயகி: மதுரயாழி

ஒரு வாரம் போகட்டும், ஆரம்பிக்கிறேன்.

அன்பும் நன்றியும். ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏
சாந்தி உடையப்பன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya