• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மழைத்துளி 24

ஒரு கோப்பை காபியும்... சில கேள்விகளும் ☕

ஞாயிற்றுக்கிழமை காலை...
முந்தின இரவில் பெய்த மழையால் ஊரே குளிர்ந்து இருந்தது.

வீட்டில் வழக்கத்தை விட அமைதி.

பள்ளி இல்லை.

ஆபீஸ் இல்லை.

அவசரமும் இல்லை.

ஹ்ருதயா மெதுவாக படிக்கட்டில் இறங்கி வந்தாள்.

வீடு முழுக்க ஒரு வாசனை.

தேங்காய்ப்பால்...

வறுத்த கடலை...

சூடான ஆப்பம்...

கூடவே ஒரு மெல்லிசை காற்றில் கதை பேசியது.
---

"என்ன வாசனை இது? யார் இவ்ளோ காலைல கிச்சன் லா பாடிட்டு இருக்கிறது"
என்று தனக்குத்தானே முணுமுணுத்தாள்.

கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அங்க...

பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே
ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது
என்று எப்ரோன் கட்டிக்கொண்டு சூர்யா பாடிக்கொண்டு சமையலில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.

அவளை பார்த்து விட்டு
"என்ன?"

என்று அவன் சிரித்தான்.


"நீங்க..."

"நான்?"

"குக் பண்றீங்களா?"

"இல்ல."

"அப்போ?"

"இந்தபக்கமா போனா ஃபேக்டரி ku ஷார்ட் ரூட்டு அதா வந்தேன்னு சொன்னா.

ஹ்ருதயா சிரித்துவிட்டாள்.

"என்ன கிண்டலா Very funny."

கிச்சன் முழுக்க வெதுவெதுப்பான நீராவி.

அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலியில் தேங்காய் எண்ணெய் லேசாக சூடாகிக் கொண்டிருந்தது.

சூர்யா ஒரு கைல மரக்கரண்டி.

மற்றொரு கைல தேங்காய் பால்.
"நீங்க எப்பதுல இருந்து குக் பண்றீங்க..."
"சின்னதுல இருந்து"
"ஓ சூப்பர்.. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்..."
" ஆப்பம் காய்கறி ஸ்டூ "
"எப்டி பண்றது சொல்லுங்க"

முதல
சிறிது தேங்காய் எண்ணெயில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கணும்.

அதன் வாசனை கிச்சன் முழுக்க பரவியது.

பிறகு...

நீளமாக நறுக்கிய வெங்காயம்.

பச்சை மிளகாய்.

இஞ்சி.

கருவேப்பிலை. சேர்த்து
அவற்றை மெதுவாக வதக்கினான்.

வெங்காயம் பொன்னிறமாகாமல்...

கண்ணாடி போல மாறும் வரை மட்டும்.
அதற்குள்...

வேகவைத்த உருளைக்கிழங்கு.

கேரட்.

பட்டாணி.

அவற்றை சேர்த்து மெதுவாக கிளறினான்.

இறுதியாக...

கெட்டியான முதல் தேங்காய் பாலும்...

மெல்லிய இரண்டாம் தேங்காய் பாலும் சேர்த்தான்.

"கொதிக்க விடக்கூடாது.".
"ஏன்?"


"ஸ்டூ கொதிச்சா டேஸ்ட் மாறிடும்."

அவன் மீண்டும் பாத்திரத்தை கவனித்தான்.

"சில விஷயங்கள்
"அவசரப்படுத்தாம இருந்தா தான் நல்லா வரும்.

அந்த வரி ஸ்டூ க்காக சொன்னானா...

வாழ்க்கைக்காக சொன்னானா...

ஹ்ருதயாவுக்கு புரியவில்லை.

மற்றொரு அடுப்பில்...

ஆப்பம் சட்டி.

ஒரு கரண்டி மாவை ஊற்றி...

சட்டியை லேசாக சுற்றினான்.

விளிம்புகள் மெல்லிய லேஸ் போல.

நடுவில் வெண்ணிற மென்மை.

மூடியை மூடி சில நிமிடங்கள் காத்திருந்தான்.
மூடியை திறந்ததும்...

பால் நிறத்தில் வெந்து வந்த ஆப்பம்.

அதன் நீராவி மேலே எழுந்தது.

"வாவ்..."

என்று ஹ்ருதயா தெரியாம சொல்லிவிட்டாள்.

சூர்யா திரும்பி சிரித்தான்.

"என்ன?"

"நீங்க இவ்வளவு நல்லா குக் பண்ணுவீங்கன்னு நினைக்கல."

"எனக்கும் தெரியாது.

"என்ன?"

"பிடிச்சவங்களுக்கு பிடிச்சத பிடிச்சு சமைக்கும் போது நல்லாதா வரும்."
ஒரு நொடி...

இருவரின் பார்வையும் சந்தித்தது.


கிச்சன் முழுக்க ஆப்பம் ஸ்டூ தேங்காய்ப்பால், ஏலக்காய் வாசனை தான்.

ஆனா...

ஹ்ருதயாவின் இதயம் ஏனோ வேறொரு காரணத்துக்காக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. ❤️
அந்த நேரம் பாட்டி உள்ளே வந்தார்.

"இவன் மாதத்துக்கு ஒரு தடவை இப்படித்தான்."

"ஏன்?"

"மனசுக்கு பிடிச்சவங்களுக்கு சமைச்சு கொடுக்கணும்னு தோணுமாம்."

"பாட்டி..." என்று சூர்யா . வெட்கி சிரித்தான்.

பாட்டி சிரித்துக்கொண்டு வெளியே போய்விட்டார்.

ஏனோ...

ஹ்ருதயாவின் இதயம் ஒரு துடிப்பை தவறவிட்டது.

அவள் உடனே வேறு பக்கம் திரும்பினாள்.

"ஏதாச்சும் உதவி வேணுமா"

"ம்ம். எல்லாம் கொண்டு போய் வை "


"சரி செஃப்."
சூர்யா சிரித்தான்.

காலை உணவு முடிந்த பிறகு...

காவ்யா புத்தகங்களோடு ஹ்ருதயாவை தேடி வந்தாள்.

"அக்கா..."

"ஹம்?"

"ஒரு டவுட்."

"ஒரே ஒரு டவுட் தானா?"

"இப்போதைக்கு."

இருவரும் சிரித்தார்கள்.

சில நேரம்...

Maths. Physics. Chemistry."
" இப்போ எதுல டவுட்"

"கணக்கு தா "

ஒவ்வொன்றாக ஹ்ருதயா விளக்கிக் கொண்டிருந்தாள்.
சில பல நேரம் ஓடியது முடிக்க

காவ்யா புக்கை மூடினாள்.

"அக்கா..."

"என்ன?"
"நீ டீச்சரா இருந்திருக்கணும்."

"ஏன்?"

"நல்லா சொல்லி கொடுக்குறீங்க"

அந்த வார்த்தை கேட்டதும்...

ஹ்ருதயா சிரித்தாள்.

ஆனா...

ஏனோ மனசுக்குள் ஒரு வெறுமை.

"நான் இதுக்கு முன்னாடி எப்படி இருந்திருப்பேன்?"

அந்த கேள்வி மீண்டும் வந்தது.


மதிய வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் தங்கள் வேலையில் இருந்தார்கள்.

கிச்சன் மட்டும் அமைதியாக இருந்தது.

கிச்சனில் யாரும் இல்லை.

கோல்ட் காபி குடிக்க நினைத்து கப் எடுக்க ஹ்ருதயா கேபினட்டை திறந்தாள்.

அங்க...

பல காபி மக்ஸ் ☕ பல நிறங்கள் பல அளவில் சிறியது முதல் பெரியது வரை.

அதுக்குள்...

ஒரு மக்.
வெள்ளை நிறம்.
அதில் கருப்பு மையில் எழுதப்பட்டிருந்தது:

"Dreams do come true."

அதை எடுத்தாள்.

அந்த எழுத்துகளை விரலால் வருடினாள்.

ஒரு நொடி...

மழை.

சாப்பிடும் இடம்

கண்ணாடி ஜன்னலில் வழியும் தண்ணீர்.

அதே மக். அதை இறுக்கி பிடித்திருந்த வலிய கரம்

அவள் சிரிக்கிறாள்.

எதிரே யாரோ.

முகம் தெரியவில்லை.

ஆனா ஒரு ஆண் குரல்.

மிகவும் பரிச்சயமான குரல்.

"அதான் சொன்னேன்ல...

Dreams do come true." என சொன்னது

"ஹ்ருதயா..."

திடீரென ஒரு குரல்.

அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.

சூர்யாவின் அம்மா.

"என்ன மா?"

"ஒன்னுமில்ல..."


ஆனா அவள் பார்வை இன்னும் அந்த மக் மேல் தான்.

"இந்த மக்..."

"ஹம்?"

"யாரோடது?"

அந்த நேரம் உள்ளே வந்த அனிருத் உடனே சொன்னான்.

"அது அண்ணாக்கு—"

"அனிருத்."

சூர்யாவின் அம்மா அவனைப் பார்த்தார்.

"என்னம்மா?"

"நீ போய் பாட்டி கடைக்கு போகணும்னு சொன்னாங்க கூட போய்ட்டு வா ."

"என்னாச்சு,நான் என்ன தப்பு சொன்னேன்?"

"போ."

அனிருத் புரியாமல் வெளியே சென்றான்.

ஹ்ருதயா அமைதியாக நின்றாள்.

ஏதோ ஒன்று...

அவளுக்கு சொல்லப்படாமல் மறைக்கப்படுவது போல.
" நீ என்னமா இந்த நேரத்தில் இங்க "

" அது ஒண்ணுமில்ல அத்த, கோல்ட் காபி குடிக்கலாம்னு "

" ஓ சரி சரி.. அதெல்லாம் பண்ணுவியா எனக்கும் கொஞ்சம் குடு நானும் எப்படி இருக்கு பாக்கிறேன் "

"சரிங்க அத்த"

ஃப்ரிட்ஜில் இருந்த ஒரு பாட்டில் குளிர்ந்த பாலை எடுத்தாள்.
ஒரு ஜாரில் எடுத்தாள்.

முதலில்...

சில ஐஸ் க்யூப் ,குளிர்ந்த பால்.

ஒரு ஸ்பூன் இன்ஸ்டன் காபிதூள்
சிறிது நாட்டுசர்கரை

பிறகு...

ஃப்ரிட்ஜில் இருந்த வெண்ணிலா ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் சேர்த்தாள்.
மிக்சர் ஓடும் சத்தம் கிச்சன் முழுக்க கேட்டது.

சில விநாடிகள் கழித்து...

நுரை பொங்கிய கோல்ட் காபி தயார்.

உயரமான மக்கில் ஊற்றினாள்.

இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?"

அந்த கேள்வியில்...

ஹ்ருதயா ஒரு நொடி அமைதியானாள்.

"தெரியல..."

மக்கை பார்த்துக்கொண்டே மெதுவாக சிரித்தாள்.

"ஆனா... இதுக்கு எவ்வளவு அளவு போடனும்னு தெரியல, ஆனா கை அதுவா அளவா போட்டுசு

அதான் டாக்டர் சொன்னாரே...

மறந்தது எல்லாம் வாழ்க்கை இல்ல.
சில விஷயங்கள் மனசுலயும் கையிலயும் தங்கிடும்."

ஹ்ருதயா மக்-ஐ பார்த்தாள்.
ஏனோ...
இந்த கோல்ட் காபிகும்...
தனக்கும்...
ஏதோ பழைய தொடர்பு இருப்பது போல தோன்றியது.

அந்த நேரம் மேலே இருந்து இறங்கி வந்த சூர்யாவிடம் ஒரு மக் நீட்ட
பார்த்ததும் புருவத்தை உயர்த்தினான்.

"கோல்ட் காபி யா

"ஆமாம்."

"ஐஸ்கிரீம் கூட போட்ட மாதிரி
இருக்கு?"

ஹ்ருதயா அதிர்ச்சியாக பார்த்தாள்.

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

சூர்யா சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

"கெஸ் பண்ணேன்."

ஆனா...

அது கெஸ் இல்லை.
ஃபேக்டரில அவள் எப்போதும் அவனுக்காக இதே மாதிரி கோல்ட் காபி செய்து கொடுத்ததை அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. ❤️

மாலை...

வானம் மேகமூட்டமாக இருந்தது.

ஹ்ருதயா பின் தோட்டத்துக்கு வந்தாள்.

அங்க...

சூர்யா மட்டும் நின்றிருந்தான்.


கையில் அதே மக்.

அவள் நின்ற இடத்திலிருந்து தெளிவாக தெரிந்தது. அதில் எழுதி இருந்த எழுத்துக்கள்....

அவளுடைய புருவம் சுருங்கியது.

"சூர்யா..."

அவன் திரும்பினான்.

"ஹம்?"

"இந்த மக் ?"

"ஆமா இந்த மக்"

அவனும் அவளை போல பேசி நிறுத்த

ஒரு நொடி...

"இது உங்களுக்கு ரொம்ப முக்கியமானதா "

அவன் மக்-ஐ பார்த்தான்.

பிறகு மெதுவாக சிரித்தான்.

"கொஞ்சம்.

"ஏன்?"

காற்று மெதுவாக வீசியது.

சூர்யா செடிகளை பார்த்தபடி சொன்னான்.


"ரொம்ப வேண்டியவங்க குடுத்த கிஃப்ட்...


ஹ்ருதயா அமைதியாக கேட்டாள்.

" ரொம்ப வேண்ட பட்டவங்களோ

"ஆமா... யாரு கொடுத்தாங்கன்னு பொறுத்து தானே அது ஸ்பெசல் ஆகும்."

அவள் அவனை பார்த்தாள்.

"யாரு கொடுத்தது?"

சூர்யா சிரித்தான்.

"அது பெரிய கதை."

"சொல்லுங்க."

"ஒருநாள் சொல்றேன்."

அவன் மீண்டும் காஃபி குடித்தான்.

ஆனா...

அந்த பதில் ஹ்ருதயாவுக்கு போதவில்லை.

அந்த மக்...

அந்த வார்த்தைகள்...

அந்த ஃப்ளாஷ்...

இதெல்லாம் எதையோ சொல்ல முயற்சித்தது.
ஆனால்...

அவளால் இன்னும் முழுதாக உணர முடியவில்லை.

அதே நேரம்...

சூர்யா மனதில் ஒரே கேள்வி.


"ஒருநாள்... அந்த மக்-ஐ நீதான் எனக்கு கொடுத்ததுன்னு உனக்கே ஞாபகம் வருமா, தயா?"


தொடரும்... ❤️☕🌹
 
Back
Top
Developed and maintained by – Akeshya