Harini Vinoth
Writer
மாலை நேரம்...
கம்பத்தின் மலைகள் மீது சூரியன் தங்க நிறத்தைப் பரப்பிக் கொண்டிருந்தான்.
"ரெடியா-a?"
என்று சூர்யா கேட்டான்.
வாசலில் ஏற்கனவே காத்திருந்த ஹ்ருதயா உடனே எழுந்து நின்றாள்.
"போகலாமா?"
அவளோட குரலில் இருந்த ஆர்வத்தை பார்த்து சூர்யாவுக்கு சிரிப்பு வந்தது.
கார் மெதுவாக சாலையில் இறங்கியது.
இருபுறமும் திராட்சைத் தோட்டங்கள்.
சில இடங்களில் ஏலக்காய் செடிகள்.
ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த ஹ்ருதயா திடீரென்று கேட்டாள்.
"சூர்யா..."
"ஹம்?"
"நான் முன்னாடி ரொம்ப பேசுவேனா?"
அவன் ஒரு நொடி சிரித்தான்.
"ஏன் கேக்கற?"
"இப்போ நான் ரொம்ப கேள்வி கேக்குற மாதிரி feel ஆகுது."
"இல்ல."
"அப்போ?"
"முன்னாடி இதைவிட அதிகமா கேள்வி கேப்ப."
"ஹேய்!"
இருவரும் சிரித்தார்கள்.
சில நிமிடங்களில்...
அவர்கள் ஒரு பெரிய நர்சரி முன் வந்து நின்றார்கள்.
வாசல் முழுக்க மலர்கள்.
வண்ண வண்ண ரோஜாக்கள்.
Bougainvillea.
Orchids.
Jasmine.
ஹ்ருதயாவின் கண்கள் குழந்தை மாதிரி பிரகாசித்தன.
"வாவ்..."
அவள் உள்ளே நுழைந்தவுடன்...
அங்கே இருந்த வயதான உரிமையாளர் அவளைப் பார்த்து ஒரு நொடி நின்றார்.
"அம்மா..."
என்று அவர் சொல்லிவிட்டு திடீரென்று அமைதியானார்.
ஹ்ருதயா குழப்பமாக பார்த்தாள்.
சூர்யா உடனே சிரித்தான்.
"எப்படி இருக்கீங்க அண்ணா?"
"நல்லா இருக்கேன் தம்பி."
அவர் விஷயத்தை மாற்றிவிட்டார்.
ஆனா...
அவர் கண்களில் இருந்த அந்த அறிமுகத்தை ஹ்ருதயா கவனித்து விட்டாள்.
அவள் ஒவ்வொரு செடியையும் ரசித்தபடி நடந்தாள்.
சட்டென்று...
இரண்டு நிறங்கள் கலந்த ஒரு ரோஜா அவள் பார்வையை ஈர்த்தது.
"சூர்யா!"
"என்ன?"
"இதை பாருங்க..."
சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த ரோஜா.
"அழகா இல்ல?"
"ஆமாம்."
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
அந்த நேரம் nursery owner சிரித்தார்.
"உங்களுக்கு எப்பவுமே இந்த மாதிரி mixed colour roses தான் பிடிக்கும் மா."
ஹ்ருதயா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
"எனக்கா?"
"ஆமாம்..."
அவர் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார்.
சூர்யா மெதுவாக சிரித்தான்.
"பாட்டி சொன்னாங்க இல்ல?"
"ஹம்..."
ஆனா ஏனோ...
அந்த வார்த்தை அவள் மனதில் பதிந்தது.
சில நேரம் கழித்து...
அவள் ஒரு அழகான இளஞ்சிவப்பு வெள்ளை கலந்த செடியை தேர்ந்தெடுத்தாள்.
"இது வாங்கலாமா?"
"வாங்கலாம்."
"இருங்க இன்னும் கொஞ்சம் செடி வாங்கிட்டு போலாம்" என மேலும் பல ஒற்றை நிற ரோஜா செடிகள் கொண்டுவந்தாள்.
"அவ்ளோதானா, கிளம்பலாமா"
பில் கவுண்டருக்கு வந்தார்கள்.
ஹ்ருதயா பணம் எடுக்க முயல.
"நானே பே பண்றேன்."என
சூர்யா கார்டு நீட்டினான்.
"ஏன்?"
"கிஃப்ட்."
"இன்னைக்கு என் பிறந்தநாள் இல்லையே?"
சூர்யா தோளை குலுக்கியான்.
"பரிசு குடுக்க பர்த்டே வேணுமா என்ன?"
சிறு தோல் குலுக்களுடன் ஹ்ருதயா அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.
ஏனோ...
இதயம் லேசாக துடித்தது.
திரும்பும் வழியில்...
கார் மலைப்பாதையை கடந்து சென்றுகொண்டிருந்தது.
"சூர்யா..."
"ஹம்?"
"எனக்கு நினைவுகள் திரும்ப வரலன்னா..."
அவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.
"நான் பழைய ஹ்ருதயாவா திரும்ப முடியாதா?"
சில நொடிகள் அமைதி.
பிறகு சூர்யா மெதுவாக சொன்னான்.
"ஒரு புத்தகத்துல படிச்சேன்..."
"என்ன?"
கடல் அலைகள் வந்து எடுத்துச் சென்ற
உன் காலடி சுவடுகள் தேவையில்லை!
மலையருவிகள் விட்டு சென்ற
உன் வலையோசையும் தேவையில்லை!
உன் வாசம் எடுத்து வந்து என்
ஜன்னல் தட்டும் மழைசரலும்
இனி தேவையில்லை!
நீ சிந்திய புன்னகை மட்டும் போதும்,
உன் நினைவுகலோடு வாழும்...
என் மனதிற்கு...!
அவன் சாலையை பார்த்தபடியே தொடர்ந்தான்.
"வாவ் "
உங்க வரிகளில் இருக்கும் ஏக்கத்தைஎன்னாலே உணர முடிகிறது...
ஆனா ஏன் என்று எனக்கே தெரியல...
இந்த வரிகள் கேட்டாலே என் இதயம் ஏனோ நின்று துடிக்குது..
என் மனசு என்ன தேடிக்கிட்டு இருக்குனு எனக்கே புரியல.....
அவளை பார்த்து மென்புன்னகை சிந்திய சூர்யா
"பழைய ஹ்ருதயா திரும்பணும்னு அவசியமில்லை."
"அப்போ?"
"இப்போ இருக்குற ஹ்ருதயாவும் நல்லாதான் இருக்கா."
அந்த வார்த்தை...
அவள் உள்ளத்தில் ஏதோ ஒன்றை வருடியது.
வீட்டுக்கு வந்ததும்...
பாட்டி வாங்கிய ரோஜா செடியைப் பார்த்து மகிழ்ந்தார்.
"இத எங்க நட்றது?"
ஹ்ருதயா சுற்றி பார்த்தாள்.
பிறகு தெரியாம சொன்னாள்.
---
"பின்னாடி இருக்க தோட்டத்தில ரைட் சைட் மகிழம் மரம் பக்கத்தில் இருக்க இடத்துல."
ஒரு நொடி...
அங்கே இருந்த அனைவரும் அமைதியாகிவிட்டார்கள்.
ஹ்ருதயாவுக்கு காரணம் புரியவில்லை.
"என்னாச்சு ஏன் எல்லாரும் அமைதி ஆகிறீங்க... நா தப்பா சொல்லிட்டேனா "
ஆனா...
சூர்யாவின் முகத்தில் மெதுவான ஒரு சிரிப்பு மலர்ந்தது.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அங்கேயே நடலாம்."
அவளுக்கே தெரியாமல்...
அவள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் எல்லாம்...
அவனை நோக்கி இருந்தன.
அவள் அந்த செடியை பார்த்துக்கொண்டே சொன்னாள்.
"விசித்திரமா இருக்கு..."
"என்ன மா?"
என்று பாட்டி கேட்டார்.
"இந்த மாதிரி ரோஜா செடிகள் எனக்கு ரொம்ப பிடிக்குதுன்னு எல்லாரும் சொல்றாங்க...
ஆனா அதை வாங்கினதே எனக்கு ஞாபகம் இல்ல."
சில நொடிகள் அமைதி.
சூர்யா அருகில் மண்ணை நிரப்பிக்கொண்டிருந்தான்.
அவன் தலை நிமிராமல் மெதுவாக சொன்னான்.
"சில விஷயங்கள் நினைவுல இல்லன்னாலும்...
நம்மள விட்டு போகாது."
ஹ்ருதயா அவனைப் பார்த்தாள்.
அவன் அந்த ரோஜா செடியை நேராக நிறுத்தியபடி தொடர்ந்தான்.
"மலருக்கு அதை யார் நட்டாங்கன்னு தெரியாது...
ஆனா அது பூக்குறத நிறுத்தாது."
காற்று மெதுவாக வீசியது.
"அதே மாதிரி தான் சில உணர்வுகளும்...
சில விருப்பங்களும்."
ஹ்ருதயா அந்த வார்த்தைகளை அமைதியாக கேட்டாள்.
ஏனோ...
அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் குறைந்தது.
"அப்படின்னா...
நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு பயப்பட வேண்டாமா?"
சூர்யா இந்த முறை அவளை நேராக பார்த்தான்.
"மறந்தது நினைவுகலா இருக்கலாம்...
நீ யாருன்றது இல்ல."