Harini Vinoth
Writer
கம்பம்...
அதிகாலை 5.30.
இரவு மழை பெய்ததாலோ என்னவோ, காற்று சில்லென்று இருந்தது.
தோட்டத்தில் இருந்த மல்லிகை வாசனை, திறந்த ஜன்னல் வழியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது.
ஹ்ருதயா மெதுவாக கண் திறந்தாள்.
ஒரு நொடி...
அவள் எங்கே இருக்கிறாள் என்று புரியவில்லை.
பிறகு மெதுவாக நினைவு வந்தது.
கம்பம்...
சூர்யா வீடு...
அனைவரும்...
அவள் அறையை சுற்றிப் பார்த்தாள்.
புதுசான அறைதான்.
ஆனா...
ஏனோ பயமா இல்லை.
கீழே இருந்து பாத்திர சத்தம் கேட்டது.
யாரோ சிரிக்கும் சத்தம்.
யாரோ பேசும் சத்தம்.
ஒரு வீட்டின் காலை உயிர் பெறும் சத்தங்கள்.
நேற்று மருத்துவமனையிலிருந்து வந்தது நினைவுக்கு வந்தது.
அவள் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே சென்றாள்.
வெளியே...
பச்சை மலைகள்.
காலை பனி.
திராட்சைத் தோட்டங்கள்.
தொலைவில் வேலைக்கு செல்லும் ஆட்கள்.
அந்த காட்சியை பார்த்தபடியே நின்றாள்.
"அழகா இருக்கு..."
என்று அவளுக்கே தெரியாமல் சொல்லிவிட்டாள்.
"ஆமா ரொம்ப அழகுதானே?"
பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தாள்.
கதவு அருகே காவ்யா நின்றிருந்தாள்.
கையில் இரண்டு coffee mugs.
"Good morning!"
"Good morning..."
காவ்யா ஒரு mug-ஐ அவளிடம் நீட்டினாள்.
"Coffee?"
"Thanks."
இருவரும் ஜன்னல் அருகே நின்றபடி coffee குடித்தார்கள்.
"அக்கா..."
"ஹம்?"
"உனக்கு கம்பம் பிடிச்சிருக்கா?"
ஹ்ருதயா வெளியே பார்த்தாள்.
"ஹ்ம்ம் ரொம்ப அமைதியா இருக்கு."
"அதான்."
காவ்யா சிரித்தாள்.
"நான் Chennai-ல college போனாலும் இரண்டு நாள்ல லீவ் விட்டா வீட்டுக்கு ஓடி வந்துடுவேன்."
சில நிமிடங்கள் கழித்து...
கீழே இருந்து பாட்டியின் குரல்.
"பசங்களா சாப்ட வாங்க காலை உணவு ரெடி!"
"வாங்க அக்கா பாட்டி கூப்பிட்டாங்க.. சாப்ட போலாம்"
என்று காவ்யா அவளை அழைக்க..
"நீ போ காவ்யா.. நா தயாராகிட்டு வரேன்.".
கீழே சமையலறையில்
சூர்யாவின் அம்மாவும் ஹ்ருதயாவின் அம்மாவும் சேர்ந்து காலை உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
பாட்டி தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்.
தாத்தா செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.
அனிருத் இன்னும் தூக்கக் கலக்கத்தோடு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
"டேய்... முகம் கழுவிட்டு வந்தியா?"
பாட்டி கேட்டார்.
"பாட்டி... சண்டே நா லீவ் பாட்டி.. ஏன் இப்படி காலைலேயே எழுப்புற?"
"அப்போ இன்னும் கழுவல."
அனைவரும் சிரித்தார்கள்.
அந்த நேரம்...
சூர்யா வெளியிலிருந்து உள்ளே வந்தான்.
காலை நடைப்பயிற்சி முடித்து வந்திருந்தான்.
வெள்ளை டி ஷர்ட் ட்ராக் பாண்ட் சகிதம்
நெற்றியில் வியர்வை வழிய...
ஹ்ருதயாவின் பார்வை ஒரு நொடி அவன் மேல் நின்றது.
பிறகு அவளே திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.
ஏனோ...
அவன் வந்ததும் வீடு இன்னும் உயிரோட்டமாக ஆன மாதிரி தோன்றியது.
"Good morning."
என்று சூர்யா சொன்னான்.
"Morning."
அவளும் பதில் சொன்னாள்.
"சரி எல்லாரும் வாங்க."
என்று சூர்யாவின் அம்மா அழைத்தார்.
சாப்பாட்டு மேஜை மேல்...
இடியாப்பம்.
வெஜிடபிள் ஸ்டூவ் .
தேங்காய் பால்.
அதைப் பார்த்த ஹ்ருதயாவின் கண்கள் பிரகாசித்தது.
"வாவ்..."
"பிடிக்குமா மா?"
என்று சூர்யாவின் அம்மா கேட்டார்.
"ரொம்ப பிடிக்கும்..."
என்று அவள் உடனே சொன்னாள்.
ஒரு நொடி...
அங்கே இருந்த பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
"என்ன?"
என்று ஹ்ருதயா கேட்டாள்.
"ஒன்னுமில்ல."
அவள் அம்மா சிரித்தார்.
"முன்னாடியும் இதுதான் உனக்கு ஃபேவரைட்."
ஹ்ருதயா அமைதியாகிப் போனாள்.
நினைவுகள் இல்லை.
ஆனால்...
விருப்பங்கள் மாறவில்லை.
காலை உணவுக்குப் பிறகு...
பாட்டி தோட்டத்துக்கு சென்றார்.
ஹ்ருதயாவும் அவருடன் சென்றாள்.
வீட்டின் பின்புறம்...
மல்லிகை...
ரோஜா...
கனகாம்பரம்...
துளசி...
சின்ன காய்கறித் தோட்டம்...
எல்லாமே பச்சை பசேல் என காட்சியளித்தது.
காலை பனித்துளிகள் இன்னும் இலைகளில் ஒட்டிக்கொண்டிருந்தன.
ஹ்ருதயா சுற்றிப் பார்த்தபடியே நடந்தாள்.
"பாட்டி..."
"ஹம்?"
"நான் இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கேனா?"
பாட்டி மெதுவாக சிரித்தார்.
"இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து நீ உன்னோட பாதி நேரம் இந்த தோட்டத்துல தான் இருப்ப."
"நிஜமாவா?"
"ஆமாடா..."
பாட்டி ஒரு மூலையை காட்டினார்.
"அங்க பாரு...
அந்த சிவப்பும் கருப்பும் கலந்த ரோஜா செடி..."
ஹ்ருதயா திரும்பிப் பார்த்தாள்.
உண்மையிலேயே வித்தியாசமான நிறம்.
"அத நீ நர்சரில இருந்து வாங்கிட்டு வந்து நட்டது."
பாட்டி அடுத்த செடியை காட்டினார்.
"அந்த வெள்ளை-பிங்க் கலர் ரோஜாவும் நீ தான்."
"இதுவும்?"
"இதுவும்."
பிறகு சிரித்தபடி இன்னொரு செடியை காட்டினார்.
"அந்த மஞ்சள்-பிங்க் கலந்தது கல்கத்தா ரோஜா."
"வாவ்..."
"அதோ அந்த மஞ்சள்-ஆரஞ்சு கலர்ல இருக்குறது...
'வைல்ட் ரோஸ்'ன்னு வாங்கிட்டு வந்த."
"நான் இவ்வளவு செடிகள் வாங்குவேனா?"
"ஒவ்வொரு தடவையும்."
பாட்டி சிரித்தார்.
"உனக்கு இரண்டு கலர் கலந்த ரோஜா ரொம்ப இஷ்டம்.
எங்கே புதுசா ரோஜா பாத்தாலும் வாங்கிட்டு வந்துடுவ."
ஹ்ருதயா அந்த செடிகளை பார்த்துக்கொண்டே நின்றாள்.
ஏனோ...
அந்த மலர்களை பார்த்ததும் மனசு லேசா ஆனது.
"ரொம்ப அழகா இருக்கு பாட்டி."
சில நொடிகள் அமைதியாக நின்றவள் திடீரென்று கேட்டாள்.
"இப்போ அந்த nursery எங்க இருக்கு?"
"ஏன்?"
"எனக்கு போய் பாக்கணும் போல இருக்கு."
பாட்டி முகம் மலர்ந்தது.
"அதுக்கென்ன?
சூர்யா free-ஆ இருக்கும்போது கூட்டிட்டு போக சொல்லுறேன்."
"ஓகே பாட்டி!"
"Thank you பாட்டி!"
சின்ன குழந்தை போல சிரித்தபடி அவள் வீட்டுக்குள் ஓடினாள்.
மதியம்...
சூர்யா office கிளம்ப தயாராக இருந்தான்.
காரின் சாவியை எடுத்துக்கொண்டிருந்தபோது,
பாட்டி அவனை அழைத்தார்.
"சூர்யா..."
"சொல்லுங்க பாட்டி."
"ஹ்ருதயாவை nursery கூட்டிட்டு போ."
அவன் புரியாமல் பார்த்தான்.
"Nursery-aa?"
"ஆமாம்.
காலை முழுக்க செடிகளோட பேசிட்டு இருந்தா."
சூர்யாவின் முகத்தில் தானாக சிரிப்பு வந்தது.
"சரி."
"இன்னிக்கி evening கூட்டிட்டு போறேன்."
பாட்டி திருப்தியாக தலையசைத்தார்.
மாலை...
சூரியன் மலைக்குப் பின்னால் மறைய ஆரம்பித்திருந்தான்.
"Ready-aa?"
என்று சூர்யா கேட்டான்.
ஹ்ருதயா உடனே வெளியே வந்தாள்.
"போலாமா?"
"இவ்வளவு eager-aa?"
"ஆமாம்."
அவள் குழந்தை மாதிரி சிரித்தாள்.
சில நிமிடங்களில்...
கார் கம்பம் சாலைகளை கடந்து சென்றுகொண்டிருந்தது.
இருபுறமும் பசுமை.
திராட்சைத் தோட்டங்கள்.
தென்னை மரங்கள்.
தொலைவில் மேகத்தைத் தொட்ட மலைகள்.
ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த ஹ்ருதயா மெதுவாக சொன்னாள்:
"இந்த road-ல நான் முன்னாடி வந்திருக்கேன்னு தோணுது."
சூர்யாவின் கை steering-ல் ஒரு நொடி நின்றது.
"இருக்கலாம்."
என்று மட்டும் சொன்னான்.
ஏனென்றால்...
இந்த nursery-க்கு அவளை முதலில் கூட்டிக்கொண்டு வந்ததும்...
அவன்தான்.
சில நினைவுகள்...
அவளுக்கு மறந்திருக்கலாம்.
ஆனா...
அந்த பாதைகள் இன்னும் அவளை நினைவில் வைத்திருந்தன.
தொடரும்...

Attachments
Last edited: