• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மழைத்துளி 21

"திறக்கட்டுமா...?"

ஹ்ருதயாவின் கேள்வி காற்றில் மிதந்தது.
சூர்யாவின் பார்வை அந்த மரப்பெட்டியின் மீது விழுந்தது.

ஒரு நொடி...

அவன் முகத்தில் தோன்றிய பதற்றத்தை ஹ்ருதயா கவனித்துவிட்டாள்.

"அதுல என்ன இருக்கு?"
என்று அவள் மீண்டும் கேட்டாள்.
சூர்யா மெதுவாக சிரித்தான்.

"பழைய பொருட்கள்..."
"அவ்வளவுதானா?"
"ஹம்..."
அவள் கண்களை சுருக்கினாள்.

"நீங்க பொய் சொல்லும்போது தெரியும்."
"உனக்கு எப்படி தெரியும்?"
"தெரியல..."
அவள் தோளைக் குலுக்கியாள்.
"ஆனா தெரியும்."
அந்த பதில் சூர்யாவை ஒரு நொடி அமைதியாக்கியது.
நினைவுகள் இல்லையென்றாலும்...
அவள் இன்னும் அவளாகத்தான் இருந்தாள்.
"லேட் ஆகிடுச்சு..."
என்று சூர்யா பேச்சை மாற்றினான்.
"ஹ்ம்ம் "
"போய் தூங்கு."
ஹ்ருதயா சற்று ஏமாற்றத்தோடு அந்த பெட்டியைப் பார்த்தாள்.
பிறகு அவனைப் பார்த்து,
"ஒருநாள் நான் அதை திறப்பேன்."
என்று சிரித்தாள்.
"அதுக்குள்ள என்ன இருக்கு?"
என்று மீண்டும் கேட்டாள்.
"சீக்ரெட்."
"அப்போ நான் கண்டுபிடிப்பேன்."
"பார்க்கலாம்."

அந்த இரவு...
ஹ்ருதயா தன் அறைக்குச் சென்றாலும்,
அந்த மரப்பெட்டி பற்றிய நினைவு மட்டும் அவள் மனசிலிருந்து போகவில்லை.

மறுநாள் காலை...

கீழே ஹாலில் அனைவரும் காலை உணவுக்காக கூடியிருந்தார்கள்.
அனிருத் ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஹ்ருதயா வந்ததும்,
"குட் மார்னிங் மெமரி குயின்!"
என்று கத்தினான்.
"அனிருத்!"
என்று சூர்யா முறைத்தான்.
"என்னன்னா?"
அவன் சிரித்தான்.

"நேத்து ராத்திரி யாரோ அண்ணன் ரூமுக்கு ரூம் டூர் போனதா நியூஸ்ல போட்டாங்க நீங்க அத பாத்தீங்களா " ஹ்ருதயா தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்.

அது கிட்டத்தட்ட தவறி விழுந்தது.
"உனக்கு எப்படி தெரியும்?"
"இந்த வீட்டுல சிபிஐ நான்தான்."

அனைவரும் சிரித்தார்கள்.
சூர்யா மட்டும் கண்களை மூடிக் கொண்டான்.
"அனிருத்..."
சூர்யாவின் அம்மா எச்சரித்தார்.
"சரி சரி..."
என்று வாயை மூடிக்கொண்டான்.
ஆனா அடுத்த நிமிடமே.
"ஆக்சுவலா..."
என மீண்டும் அவன் ஆரம்பித்தான்.
"அண்ணன் ரூமுக்கு இதுக்கு முன்னாடி" என ஆரம்பிக்க
"ANIRUDH!"
இந்த முறை சூர்யாவும் அப்பாவும் சேர்ந்து கத்தினார்கள்.
அனிருத் வாயை மூடிக்கொண்டான்.

ஆனா ஹ்ருதயா சந்தேகமாக பார்த்தாள்.

"முன்னாடி என்ன?"
"ஒன்னுமில்ல..."
என்று சூர்யா உடனே சொன்னான்.
"நிச்சயமா?"
"நிச்சயமா."
அவள் அமைதியாக இருந்தாலும்...
மனசுக்குள் கேள்விகள் பெருக ஆரம்பித்திருந்தன.
மதியம்...
கர்த்திக் வீட்டுக்கு வந்தான்.
"ஹாய்!"
என்று ஹ்ருதயா சிரித்தாள்.
"ஹாய் madam."
"Madam-aa?"
"ஆமா ஆமா"
"நான்?"
"ஆமாம் நீ."
"ஒன்னுமில்ல."
அனிருத் பக்கத்தில் இருந்து மெதுவாக,
"பொறாமை..."
என்று முணுமுணுத்தான்.

சூர்யா அவனைப் பார்த்த பார்வையில்,
அனிருத் உடனே எழுந்து வேறு இடத்துக்கு ஓடினான்.

மாலை...
சூர்யா ஃபேக்ட்ரிக்கு செல்ல தயாரானான்.
மூன்று மாதங்களாக அவன் முழுமையாக வேலை பார்க்கவில்லை.
"நீங்க வெளிய போறீங்களா?"
என்று ஹ்ருதயா கேட்டாள்.
"ஆமா. ஃபேக்டரிக்கு."
"ஓ..."
அவள் முகம் சற்று மாறியது.
"என்னாச்சு?"
"ஒன்னுமில்ல."
ஆனால் அந்த ஒன்னுமில்ல இல்லையில் பல பொதிந்து இருந்தன.

அவன் காலை முதல் அவள் அருகே இருந்தான்.
இப்போ திடீரென கிளம்பப் போகிறான்.
அவனோட இருப்பை எதிர்பார்க்கிறாள் .. ஏன் என அவளுக்கு புரியவில்லை.
அதை சூர்யா கவனித்தான்.
"ரெண்டு மணி நேரத்துல வந்துடுவேன்."
அவள் உடனே தலை தூக்கிப் பார்த்தாள்.
"நான் கேட்கவே இல்லயே."
"ஆனா தெரியும்."
அந்த பதிலைக் கேட்டதும்,
அவள் சிரித்தாள்.

சூர்யா வெளியே சென்றதும்...
ஹ்ருதயா பால்கனியில் நின்று அவன் காரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
கார் தெருவை விட்டு மறையும் வரை.
அதை கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவின் அம்மா மெதுவாக சிரித்தார்.
"நினைவு வரலன்னாலும்..."
என்று ஹ்ருதயாவின் அம்மாவிடம் சொன்னார்.
"இதயம் அவனை மறக்கல போல."
மேலே...
பால்கனியில் நின்றிருந்த ஹ்ருதயாவுக்கு மட்டும்,
தன்னுடைய இதயம் ஏன் இவ்வளவு அமைதியில்லாமல் இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை...


தொடரும்... ❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya