Harini Vinoth
Writer
அரை மணி நேரம் கழித்து...
கார் ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.
ஹ்ருதயா ஆச்சரியமாக பார்த்தாள்.
"வாவ்..."
அந்த வீடு அவள் பார்வைக்கு புதிது.
ஆனா...
ஏனோ மனதுக்கு அந்நியமா தோணல.
---
வாசலிலேயே இரண்டு குடும்பத்தினரும் காத்திருந்தார்கள்.
ஆரத்தி...
சிரிப்பு...
சந்தோஷம்...
ஒரு திருமண வீட்டைப் போல இருந்தது.
"அம்மா..."
என்று ஹ்ருதயா சிரித்தபடி உள்ளே நுழைந்தாள்.
சூர்யாவோட பாட்டி தாத்தா திருஷ்டி கழித்து தலையில் கை வைத்து இனி எந்த தீங்கும் வராம நல்லா இருக்கணும் என சொல்லி ஆசிர்வாதம் பண்ணாங்க.
சில நேரம் கழித்து...
அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஹ்ருதயாவின் பார்வை அடிக்கடி படிக்கட்டின் மீது விழுந்தது.
மேல்மாடி...
நீண்ட வழித்தடம்...
முடிவில் ஒரு அறை.
அவளுக்கே தெரியாமல் அவள் பார்வை அங்கேயே நின்றது.
அதை கவனித்தவன்...
அவளே பேசட்டும் என அமைதி காத்தான் .
"சூர்யா"
"என்ன?"
"அந்த ரூம் யாரோடது?"
"என்னோடது."
"ஓ..."
அவள் தலையசைத்தாள்.
ஏனோ...
அந்த அறையைப்
பார்க்க வேண்டும் போல இருந்தது.
இரவு...
எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.
ஹ்ருதயாவுக்கு கொஞ்சம் தூக்கம் வரவில்லை.
பறவை அதன் கூடு சேர்ந்த நிம்மதி போல அவளும் நிம்மதி கொண்டாலோ என்னவோ, மருந்தின் உதவியுடன் தூங்கி கழித்த இரவுகள். இப்போது தூங்கா இரவாகி போனது.
அவள் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்.
வீடு முழுக்க அமைதி.
அவள் கால்கள் தன்னிச்சையாக மேல்மாடிக்கு நகர்ந்தது..
ஒரு படி...
இன்னொரு படி...
நேராக அந்த அறை வரை.
கதவு முழுக்க மூடப்படவில்லை.
சற்று திறந்திருந்தது.
உள்ளே...
பால்கனி கதவு அருகே நின்று கொண்டிருந்தான் சூர்யா.
குளிர் காற்று அவன் முகத்தில் பட்டுக்கொண்டிருந்தது.
அவன் திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனால்...
கதவின் அருகே நின்றிருப்பது யாரென்று தெரிந்தது.
"தூக்கம் வரலையா?"
அவன் கேட்டான்.
ஹ்ருதயா ஆச்சரியப்பட்டாள்.
"நான் வந்தது எப்படி தெரியும்?"
சூர்யா மெதுவாக சிரித்தான்.
"தெரியும்..."
அவள் மெதுவாக அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறை...
அவனை மாதிரியே இருந்தது.
அமைதியானது.
ஒழுங்கானது.
ஆனா...
அவளுடைய பார்வையை ஒரு விஷயம் ஈர்த்தது.
மேஜை மேல் இருந்த ஒரு சிறிய மரப்பெட்டி.
அதை பார்த்த நொடி...
இதயம் ஏனோ வேகமாக துடித்தது...
"அதை திறக்கலாமா?"
அவள் கேட்டாள்.
சூர்யாவின் முகம் சற்று மாறியது.
ஏனென்றால்...
அந்த பெட்டிக்குள் இருந்தது...
ஹ்ருதயாவை நினைத்து அவன் சேமித்து வைத்த ஒவ்வொரு சிறிய
நினைவும்.
ஒரு நொடி...
இருவரின் பார்வையும் சந்தித்தது.
"திறக்கலாமா...?"
என்று மெதுவாக கேட்டாள் ஹ்ருதயா.
சூர்யாவின் இதயம் வேகமாக துடித்தது.
ஏனென்றால்...
அந்த பெட்டி திறந்தால்,
சில உண்மைகள் வெளியில் வர ஆரம்பிக்கும்...
தொடரும்...