Harini Vinoth
Writer
மூன்றாவது நாள் காலை…
ICU-வின் வெளிச்சம் சற்று மென்மையாக இருந்தது.
ஹ்ருதயா கண்களைத் திறந்தபோது, இந்த முறை அவள் பார்வை படபடத்து விடவில்லை.
ஒரு நொடி…
அவள் நேராக சூர்யாவை பார்த்தாள்.
அந்த பார்வை இன்னும் அறிமுகமில்லாதது தான்…
ஆனா முழுக்க அந்நியமா இல்லை.
“நீங்க…”
அவள் குரல் மெதுவா உடைந்தது.
அந்த ஒரு வார்த்தைக்காக…
மூன்று மாதங்களாக காத்திருந்தவன்,
ஒரு நொடி மூச்சே எடுக்க மறந்தான்.
“நான்…”
என்ன சொல்லணும்னு அவனுக்கே தெரியல.
*“நான் உன் வாழ்க்கை…”*ன்னு சொல்லணுமா?
அல்லது…
*“நான் யாருமில்லை…”*ன்னு சொல்லணுமா?
அவன் ஒரு நொடி கண்களை மூடினான்.
பின்னாடி திறந்து
“நான்… சூர்யா.”
அவள் சற்றே தலையசைத்தாள் சரி என்பதாய்.
அந்த பெயர் அவளுக்கு எந்த உணர்ச்சியும் தரல.
ஆனா…
அவள் மறுக்கவும் இல்ல.
“நான் இங்க… எவ்வளவு நாளா இருக்கேன்?”
“மூன்று மாதம்…”
அவள் கண்கள் பெருசா திறந்தது. இத்தனை நாட்கள் என்பது அவளுக்கே அதிர்ச்சியா இருந்தது.
“அப்போ… நான்…?”
அவள் கேள்வி முடிக்க முடியாமல் நிற்க.
சூர்யா மெதுவா சொன்னான்—
“ஒரு விபத்து…”
அவன் முழு உண்மையை சொல்லல.
அவன் காதலை சொல்லல.
அவள் யார்னு சொல்லல.
ஏன்னா…
அவள் நினைவில்லாத உலகத்துல,
அவன் அவளுக்கு உண்மையை திணிக்க விரும்பல.
அந்த நாளிலிருந்து…
அவர்களுக்குள் ஒரு புதிய தொடக்கம் ஆரம்பிச்சது.
அறிமுகம் இல்லாத இரண்டு பேர்…
ஹ்ருதயா இப்போ அவனை சிறிது கவனிக்க ஆரம்பிச்சிருந்தாள்.
அவன் பேசுற விதம்…
அவன் அவளை கையாளும் விதம். அவள் கையை பிடிக்குற நேரம்…
அவன் சின்ன சின்ன விஷயங்கள்ல பார்த்து பார்த்து கவனிக்குறது…
இவை எல்லாமே…
“இவனுக்கு நான் இவ்வளவு முக்கியமா”ன்னு யோசிக்க சொல்ல ஆரம்பிச்சா .
ஒரு மாலை…
“சூர்யா…”
முதல் முறை அவள் தானாக அவனை அழைக்கும்
அந்த குரலில்… ஒரு நொடி அவன் இதயம் நின்று துடித்தது..
இன்னும் அவள் குரல் அந்நியமாக தான் ஒலித்தது.
“எனக்கு ஏன்… உங்கிட்ட பேசுறப்போ எனக்கு பாதுகாப்பா உணரமுடியுது ?”
அந்த கேள்வி…
அவனோட நெஞ்சை நொறுக்கியும்…
அதே நேரம் சரியும் செய்தது.
அவன் சிரிக்க முயற்சி பண்ணினான்.
அவள் சின்னதா சிரிச்சா.
அப்போ நீங்க?” அவள் விடவில்லை...
சூர்யா ஒரு நொடி அவளை பார்த்தான்.
“நான்…
நீங்க நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறவன்.”
அந்த இரவு…
ஹ்ருதயா தூங்க முடியாமல் இருந்தாள்.
அவள் கண்களை மூடினாலே…
சில மங்கலான காட்சிகள் தோன்றின.
ஒரு சிரிப்பு…
ஜீப் சத்தம்…
அருவியின் கொட்டும் சத்தம்...
யாரோ கை பிடித்து நீரில் மூழ்கியது...
பல்வேறு குரலுக்கு நடுவே ஒரு குரல் அவளை மீண்டு வர செய்தது.
ஆனா அந்த முகம் தெளிவா வரல.
அவள் திடீர்னு கண் திறந்தாள்.
இதயம் வேகமா துடிச்சது.
“யாரு அது…?” என அலறி எழுந்த போது
அந்த நிமிஷம்…
அவள் பார்வை சூர்யா மேல் விழுந்தது.
அவன் அவள் அருகே தூங்காம அமர்ந்திருந்தான்.
அவன் பதட்டத்துடன் என்ன தயா.. என்ன பண்ணுது இரு டாக்டர் வர சொல்றேன் என எழ
அந்த முகம்…
அவளுக்கு அந்த மங்கலான நினைவுகளோட அசைந்தடியது
ஆனா…
அவள் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி—
“என் நினைவுல இருக்குறவன்…
இவரா இல்ல வேற யாரா?”
அடுத்த நாள்…
கார்த்தி ஹாஸ்பிடலுக்கு வந்தான்.
ஹ்ருதயாவை பார்த்ததும் அவன் சிரிச்சான்.
“ஹை…”
அவள் சற்றே தயக்கத்தோட—
“ஹை…”
கார்த்தி சூர்யாவை ஒரு நொடி பார்த்தான்.
அவன் கண்களில் இன்னும் அந்த வலி இருந்தது.
ஆனா…
அதுக்குள்ளே ஒரு அமைதியும் இருந்தது.
ஏன்னா…
அவன் காதல் இப்போ எதிர்பார்ப்பை கடந்து போயிருந்தது.
மாலை…
ஹ்ருதயா மெதுவா சொன்னாள்—
“சூர்யா…”
“ஹம்?”
“நான்…மறந்தது எல்லாம் திரும்ப வருமா?”
அந்த கேள்வி…
அவன் வலியை மறைக்கல.
அவன் மெதுவா சொன்னான்—
“வரலாம்…
வராமலும் இருக்கலாம்…”
அவள் அமைதியா அவனை பார்த்தாள்.
“அப்போ…
நீங்க என்ன பண்ணுவீங்க?”
சூர்யா ஒரு நொடி சிரிச்சான்.
அந்த சிரிப்புல வலி இருந்தது…
ஆனா உறுதியும் இருந்தது.
“நான்…
மீண்டும் அறிமுகம் ஆகுறேன்.”
அந்த ஒரு வரி…
ஹ்ருதயாவின் உள்ளத்துக்குள் ஏதோ ஒரு தொடுதிரை.
அவள் தெரியாம சிரிச்சா.
“அப்படின்னா…
நம்மல மொத முறை பாத்துக்குற மாதிரியா?”
“ஆமாம்…”
அவன் கையை அவள் அருகே வைத்தான்.
“ஹாய்… நான் சூர்யா.”
அவள் சிரிச்சுக்கிட்டு…
அந்த கையை மெதுவா பிடிச்சா.
“ஹாய்… நான் ஹ்ருதயா.”
அந்த நொடி…
மூன்று மாதங்களாக நின்றிருந்த அவனின் காதல் இதயம் …
மீண்டும் ஓட தொடங்கியது.
ஆனா இந்த முறை—
நினைவோட இல்ல…
உணர்வோட.