Crazy Queen
Writer
Episode 1.1 — “மயங்கிய நினைவு”
புதுச்சேரி கரைமோதும் அலைகளுக்கு அந்த காலை ஒரு தனி ஒலி இருந்தது. குளிர் காற்று முகத்தைக் கடிக்கும்போது, நிரஞ்சனா தன் சட்டை காலரை உயர்த்திக்கிட்டு கடற்கரையை கடந்து பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றாள். அவள் கையில் ஒரு குவியல் ஆவணங்கள். முகத்தில் கவனம். நடையில் கம்பீரம்.
அவள் அழகு பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஸ்டைலான பெண். போன்டோல் முடியில் ரிப்பன் இருந்தாலும் நவீன தோற்றம் தானே. ஆனாலும் வீட்டுக்குள் சுடிதார், டாப்ஸ் மற்றும் பாட்டியாலா பேன்ட். பாரம்பரியம் அவளுக்கு உடை அல்ல. மரியாதை.
அலுவலகத்து கதவு திறந்ததும் கணினி click click சத்தம். எல்லோரும் தங்கள் பணியில். நிரஞ்சனா உட்கார்ந்தவுடன் அருகே வந்தவள் யாழினி, அவள் நெருங்கிய தோழி. இரண்டு பேருக்கும் மொழி அதே, உளறலும் அதே.
“அது என்ன நிரு, மீனம்பாக்கத்தில் இருந்து சீக்காரம ? வழியில் போக்குவரத்து நெரிசல் இல்லையா?”
நிரஞ்சனா சிறு சிரிப்புடன்: “காற்று ரொம்ப நல்லா இருந்தது. போக்குவரத்து நெரிசல் இருந்தா நான் தாமதமாக வந்து இருக்கா மாட்டேனா?”
யாழினி சிரித்தாள். இருவரும் நண்பர்கள் வட்டம். adults jokes க்கு பிரபலங்கள்.
நிரஞ்சனா தனது பேக்கிலிருந்து சில வெற்று புகைப்படங்களையும், printouts ம் எடுத்தாள். அந்த படங்களில் புதுச்சேரி ஒருங்கிணைப்பு நிதி திட்டத்தின் சாலைகளின் before-after நிலை. கோடிட்ட கோடில்லாமல் தார் உரிந்து மெலிந்த படியில்தான் தெரிந்தது.
அவள் கண்களை நெருக்கியாள். “இதில்தான் மீசை நாயும் குழம்பும்.”
யாழினி புரியாமல்: “ஏன்?”
“திட்டத்தில் காகிதத்தில் முப்பது லட்சம்.செயல்படுத்துவதில் பாதிப்பு. கால் பகுதி மட்டும் தாரம். மீதி கமிஷன். இதெல்லாம் எனக்கு தெரியும். ஆதாரம் தேவை.”
யாழினி தலை ஆட்டினாள். “சரி. இந்த angle மேல editor பேசணும்.”
அந்த நேரம் மொபைல் மணி. திரையில் ‘திரிஷா’.
நிரஞ்சனா call எடுத்தாள்.
“என்ன டி?”
அந்த பக்கம் கல்லூரி மருத்துவத்துறையின் கொந்தளிப்பு சத்தம். திரிஷா பரபரப்பாக: “அக்கா இன்று தடயவியல் பேராசிரியர்சொன்னாரு. சாலையில் ஆட்டோ மோதி இறந்தவர்கள் சில சமயம் அதிர்ச்சி ஆ இருந்தா நினைவாற்றல் மங்கல் ஆகுமே. நம்ம வழக்கு பயனுள்ளதாக இருக்கும் நினைச்சேன்.”
நிரஞ்சனா புன்னகைத்தாள். “சரிங்க. வீட்டுக்கு வந்த பிறகுதான் பார்ப்போம். அம்மாவிடம் சொல்லாதே.”
“அவங்க தேர்வு முடிவு கேட்டா?”
“அமைதி ஆ முடிஞ்சுடு.”
அழைப்பு முடிந்தது. யாழினி புரியாமல் பார்த்தாள்.
“உன் தங்கை தான் நம்ம எதிர்கால உதவியாளர்.”
நிரஞ்சனா சிறு பெருமையுடன்: “அவ்ளளோ நிலையான. அம்மாவோ jolly character and friendly behaviors. நம்ம வீட்டுல நானும் திரிஷாவும் தான் அரை போலீஸ் அரை நிருபர்.”
அதற்குள் Editor ரவிகுமார் உள்ளே வந்தார். வயது ஐம்பத்து இரண்டு. கூர்மையான ஆன கண்கள். நாற்பதுகளிலேயே பத்திரிகை உலகை ரசித்தவர்.
“நிரஞ்சனா, நீ கொடுத்த குடிமை ஒப்பந்தம்கோப்பு னு பார்க்கிறேன். Political wing involvement இருக்குன்னு எனக்கு தகவல். நீ over act பண்ணக்கூடாது.”
நிரஞ்சனா சிரித்தாள்: “over அல்ல sir. proper. நம்மிடம் தவறு நடக்குது. யாரும் பார்க்கல.”
Editor சற்று soft. “சரி. but any risk means tell me. காரணம்… உன் வீட்டுக்கு நான் எப்பவும் respect. உன் amma என் பள்ளி mate.”
நிரஞ்சனா ஆச்சரியமும் நகைப்பும் கலந்த முகம். “சரி sir.”
Editor வெளியே சென்றார். யாழினி விளையாட்டாக: “அமாளுக்கு இங்க எல்லா contact ம் இருக்கே.”
நிரஞ்சனா சிரித்தாள்: “வாழ்க்கை நாற்பது நாடகம். நம்ம வீட்டில் நாங்க இரண்டே நடிகை.”
அந்த மாலை அலுவலகம் இருந்து கடற்கரை பக்கமாக நடை. அப்போது அவன் வந்தான். நிரஞ்சனா கவனிக்காம. ஆனால் யாழினி பார்த்தாள்.
“அவனுக்கு பெயர் ஆதவன். ரியல் எஸ்டேட் பக்கம். பொதுவான நண்பர்கள் சந்திக்கிறோம். சாதாரண நபர். அதிகமே இல்ல.”
நிரஞ்சனா சாதாரணமாக: “எனக்கு என்ன?”
யாழினி கண்ணை இறுக்கி: “அட, நீயே பார்த்தியா? கடந்த மாதம் நீ சொன்ன ஞாபகம் இருக்கா? அந்த நபர் அவங்களா இருக்கலாமே.”
அந்த வார்த்தைக்கு ஒரு மின்னல் போல நினைவு.
ஃப்ளாஷ்பேக் — மூன்று வருடங்களுக்கு முன்:-
தேசிய நெடுஞ்சாலையில் இரவு. மழை. இருளில் ஒரு ஆட்டோ விபத்துக்கு உள்ளாகி இருந்தது. மக்கள் கூடி. யாரோ ஓடிச்சென்று ஓட்டுனர்னை தூக்கி நிறுத்தினான். நாயகிக்கு அப்போது வழியே. நிரஞ்சனா ரயில் முன்பதிவுகாக பயணித்தாள். கூட்டத்திலே ஒரு முகம். அமைதி ஆன உதவி. குறைவான வாக்கு.
“ஆம்புலன்ஸ் அழைப்பு. துடிப்பு மெதுவாக. இங்கே அழுத்தவும்.” என்று சொல்லும் குரல்.
அவள் அந்த ஓட்டுனர்க்கு தன்னால் தெரிந்த அளவுக்கு கை உதவி.
அந்த முகம் — ஆதவன்.
ஆனால்ஆம்புலன்ஸ் எடுத்த பின்னர் முகங்கள் பிரிந்து சென்றன.
அவளுக்கு அந்த ஞாபகம் இருக்கிறது.
அவனுக்கு அதிர்ச்சி + மழை = மங்கலான காட்சி..
நிரஞ்சனா மனசுக்குள்: “அது அவனாக இருக்கா?”
யாழினி: “நான் சொன்னா நம்ப மாட்ட. நீ நேரடியாக கேளு.
நிரஞ்சனா: “வேண்டாம். அது வாழ்க்கை. இப்ப வேலை.”
ஃப்ளாஷ்பேக் முடிந்தது.
அந்த இரவே வீட்டில்…
மதுமதி அம்மா சமையலறையில் வேகவைத்த அரிசி. பாரம்பரிய வீடு மாதிரி.
“நிரு, தங்கை வந்தாச்சு. உங்களுக்கு சமைச்சு இருக்கேன் கோழிகறி குழம்பு மற்றும் சாதம்.”
நிரஞ்சனா tops and bottom மாற்றிக்கிட்டு சமையலறைக்கு.
திரிஷா வாய் நிறைய காய்கறி: “அக்கா தடயவியல் குறிப்பு போட்டாச்சு. நான் சொன்னதை மறந்துடாதே.”
மதுமதி ஆர்வம்: “என்ன அது?”
நிரஞ்சனா ஒரே சிரிப்பு: “அவள் மருத்துவ ஆய்வு பற்றிதான் பேசுறாங்க.”
மதுமதி கண்டிப்பான அம்மா: “இங்க விசாரணை இல்ல. உனக்கு படிப்பு மட்டும் தான்.”
திரிஷா உள்ளுக்குள் குறும்பு.: “அம்மா, அக்கா தான் நிருபர்.மாநில அமைச்சர்களை சோதித்துப் பார்ப்பாங்க.”
அம்மா கேள்வி பார்வை. நிரஞ்சனா உடனே மேஜை எழுந்து தங்கை கோபமாக பார்த்தனர்.
நிரஞ்சனா கோபமாக அவளா பார்த்தாள். வாய் மூடியது.”
சாப்பாடு முடிந்ததும் அறைக்குள்…
திரிஷா கையில் மடிக்கணினி. படங்களைத் திறக்கவும். முன்-பின் சாலை சுருக்கம்.
அவள் சொன்னாள்: “ஏன் சாலை விபத்து எனக்கு முக்கியம் தெரிகிறது. இந்த சாலை தரப் பிரச்சினைக்கான மறைமுகக் காரணம். நீ அரசியல் பக்கம் பாத்துட்டே இருக்கிற. நான் மருத்துவ காரணம் பக்கம் சொல்றேன்.”
நிரஞ்சனா கவனமாக: “இது பெரிய விஷயம். சாலை டெண்டர் ஊழல் செய்திகள் வரனும். ஆனால் அமைச்சர் முகத்தில் குத்தினால் வழக்கு. நம்மிடம் ஆதாரம் வேண்டும்.”
திரிஷா: “ஆதாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
அந்த நேரம் அழைப்பு மணி அழைக்கப்பட்டது. யாழினி வந்து இருந்தாள்.
“அடடா நீ வந்துட்டியா?”
யாழினி தாள்களை விட்டாள். “குடிமை டெண்டர் பட்டியல். பெயர் பார்த்தியா?”
நிரஞ்சனா தாள்களை எடுத்து பார்த்தார். ஒப்பந்ததாரர் பெயர் சரவணன்.
அவன் up to date. social image clean. ஆளும் கட்சியுடன் வலுவான தொடர்பு. வெளியில் welfare programs donor. உள்ளே கமிஷன் பாதை.
யாழினி: “இதுக்கு மேல ஸ்பான்சர் செய்யும் நம்பிக்கை ஒன்றும் இருக்கு.”
திரிஷா பின்: “அக்கா நம்பிக்கை ஆ? அது சந்தேகம். ஏனென்றால்தொண்டு அறக்கட்டளைகள் பணப் பாதை பண்ணுற பொதுவான பாதை.”
நிரஞ்சனா பெருமையாக பார்த்தாள். “நான் சொல்லலானே. என் தங்கை எதிர்கால துப்பறியும் நபர்.”
அவர்கள் மூவரும் அமைதி.
அந்த ஆவணத்தின் ஒரு மூலையில் sponsor பெயர்:
“ஆதவன் Infra & Welfare Group”
அம்சம்.
அதிர்ச்சி.
அமைதி.
நிரஞ்சனா மனசுக்குள்: இந்த பெயர் எப்படி இங்க?
யாழினி சொன்னாள்: “அவன் நேரடியாக சம்பந்தப்படவில்லை. ஆனாலும் ஸ்பான்சர் சங்கிலி அவன் குழுவில் இருக்கிறது.”
திரிஷா: “அவன் அந்த விபத்து சம்பவம் கொண்ட சாலை நீளத்தின் ஆதாரம் ஆக இருக்கலாமா?”
நிரஞ்சனா அமைதியாக.
அவள் மனதில் மூன்று கேள்வி:
- அவன் தெரிந்தோ தெரியாமலோ ஸ்பான்சர் இருக்கிறாரா??
- அவன் நினைவில் அந்த விபத்து மறந்ததா?
- இந்த உண்மை எனக்கு என்ன செய்ய சொல்லுது?
இது காதல் அல்ல.
இது நட்பு அல்ல.
இது சந்தேகம்.
மரியாதை.
மற்றும் ஒரு கடமை.
அந்த இரவின் இறுதியில் நிரஞ்சனா டைரி எழுதினாள்:
“ஒரு நாள் அரசியல், ஊழல், மருத்துவம், சட்டம், மக்கள் — எல்லாம் ஒன்றாக நம்ம கண் முன்னால் வரப்போகுது. எனக்கு பயமில்லை. ஆனால் உண்மை இலகுவல்ல.”
அவள் பேனா வைத்தாள். விளக்கு அணைத்தாள்.
இருட்டில் அவள் மனமொழி:
“ஆதவன்… நீ இம்மாதிரி நினைவாற்றல் மங்கல் உள்ள மனிதனா? அல்லது அமைதியான மனிதன் ? தெரிந்துகொள்ளணும்.”