• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-அறிமுகம்

தோழமைகளுக்கு வணக்கம்,

நித்திலம் என்பது நாம் அறிந்ததே பரிசுத்தமான முத்து.

இக்கதையின் நாயகி நித்திலா அத்தகைய பரிசுத்தம் நிறைந்தவள்.

தன் வாழ்க்கையில் பார்க்கக் கூடாத புரட்டக் கூடாத பக்கங்களைப் பார்த்துப் புரட்டியவள்.

வாழ்க்கை விளிம்பு நிலைக்கு அவளைத் தள்ளினாலும், விழுந்து எழுந்து தனக்கென ஒரு பாதையையும் பாணியையும் வகுத்துக் கொண்டவள். அதனால் பேரொளியாய் பெருகி புவி நிறைத்தவள்.

ஆதேஸ் மந்திரம் கேள்விப்பட்டிருப்போம், நம் ஆன்மா பரமாத்மாவிற்கு அளிக்கும் வணக்கம் தான் இந்த மந்திரத்தின் சாராம்சம். நாயகன் ஆதேஷ் சேரமான் தன் ஆன்மாவுக்கு இணையான நித்திலாவை எப்படி அவள் துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து போற்றிக் கொள்கிறான் என்பது தான் கதை.

இந்நாவல் ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்சனையை அலச இருக்கிறது.

இணைந்திருங்கள் என் கைகளை கெட்டியாக கோர்த்துக் கொண்டு ❤️ ❤️ ❤️

அன்பும் நன்றியும், :love::love::love:
சாந்தி உடையப்பன்



ChatGPT Image Apr 22, 2026, 09_59_45 AM.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya