• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நான் யார்?!

சிரமிகுந்து வழிகின்ற பெருந்திரள் ஞானமா
சீழில்லா வரைவாழும் சிறப்பிற் யாக்கையா

இயங்குகாரணியாய் இருக்கின்ற ஆன்மாவா?
திருமாமனையாள் திருவடி ஈர்ப்பா

காலப்பசிக்குணவாகும் நிலையற்ற யௌவனமா
மூச்சு அவயங்கள் முடிந்து உள்வாழும் உளதையா (காற்று)

இயற்-வேதியலின் அலகுப் பொருட்கூறு அணுவா
உயிரியல் கோட்பாடுகள் உணர்த்துகின்ற உயிரணுவா

எண்ணங்களைக் கோத்து எட்டிவிழும் கூற்றா
ஐம்புலன்கள் அருளித்தரும் பற்பல உணர்ச்சியா

கர்ணவழி கண்டமதியால் கைசேர்ந்த புண்ணியமா
அறிந்தோ அறியாமையிலோ ஆக்கிய பாவமா

இருக்கின்றேனென்றால் இருக்கின்ற நான்'யார்?!
இல்லாதுபோனால் இல்லாத நான் யார்?!

அன்பும் நன்றியும்
-சாந்தி உடையப்பன்
#கவிதை
 
Back
Top
Developed and maintained by – Akeshya