சாந்தி உடையப்பன்
Writer
தெருவெல்லாம் வடம் பிடித்து
தேரிழுத்த திருவிழாக்கள்
உறவெல்லாம் வாசலில் குவிந்து
உண்டு களித்த காலங்கள்
ஊரெல்லாம் வீதியில் அமர்ந்து
படமோட்டி ரசித்த காட்சிகள்
பால்நிலா வானில் படுத்துறங்க
பாட்டியைத் தேடிய கணங்கள்
ஐந்தறிவு உயிர்கள் எல்லாம்
இரத்த சொந்தங்களான சுகங்கள்
பசுமரத்தாணியாய் அனைத்தும்
பதிந்து கிடக்கு மனமெங்கும்
எளிமை வாழ்க்கையில்
ஏகாந்தம் வழிந்து சிறந்தது!!
நாடுநாடாக நகர்ந்து செல்லும்
இன்றைய பொழுதுகளில்
வசதியும் வளமும் நிறைந்து கிடக்கு
வாழ்க்கை?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-4 (1)
தலையல் மொழி-4 (2)
தேரிழுத்த திருவிழாக்கள்
உறவெல்லாம் வாசலில் குவிந்து
உண்டு களித்த காலங்கள்
ஊரெல்லாம் வீதியில் அமர்ந்து
படமோட்டி ரசித்த காட்சிகள்
பால்நிலா வானில் படுத்துறங்க
பாட்டியைத் தேடிய கணங்கள்
ஐந்தறிவு உயிர்கள் எல்லாம்
இரத்த சொந்தங்களான சுகங்கள்
பசுமரத்தாணியாய் அனைத்தும்
பதிந்து கிடக்கு மனமெங்கும்
எளிமை வாழ்க்கையில்
ஏகாந்தம் வழிந்து சிறந்தது!!
நாடுநாடாக நகர்ந்து செல்லும்
இன்றைய பொழுதுகளில்
வசதியும் வளமும் நிறைந்து கிடக்கு
வாழ்க்கை?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-4 (1)
தலையல் மொழி-4 (2)