சாந்தி உடையப்பன்
Writer
விரல்கள் பிரித்து
கன்னக்கதுப்புகள் பற்றி
சிப்பி இதழ் குவித்து
சிந்துகிறாய் முத்தங்கள்;
பூமிப்பரப்பில் பூக்களாகி
மென்வாசம் போர்த்திக்கொள்கிறேன்!
என்னிலிருந்த இவ்வேகாந்தம் வழிந்து
எதிர்ப்பட்ட மரங்களில்
விரல் பிணைந்திணைகிறது!
விருட்சங்கள் விழுங்கியதைப்
பிராணவாயுகள் பிடிங்கிப்பிடுங்கிப்
பரிணமிக்கின்றன வாசம் பொருத்தி!
வாயுவில் வார்க்கப்பட்டதை
வாரிச்சுருட்டிய பனிப்பொழில்கள்
வைத்துக்கொள்கின்ற தன் குளிருடம்பில்!
உறைபனிக்குள் உறங்கியதை
சிவந்தநிறக் கோள்வடிவன்
சிறைபிடிக்கிறான் தன் கதிர்பிரித்து!
ஞாயிறுவில் மிளிர்ந்ததை
ஊகித்தறிந்த கார்முகில்கள்
களவாடின தன் வெண்பொதிக்குள்!
மேகத்தில் முகிழ்ந்ததை
நிரப்பிக்கட்டிய நீர்த்தலைவன்
திவலைகளாய்த் தூற்றுகிறான்!
இதழ் ஒற்றல் ஒன்றின்
இத்துணை மகிமையை
இப்போது தான் அறிகிறேன்!
மறுமுறையும்
மலரிதழ்களால் ஒன்று தா
பூமிப்பந்தில் உருண்டு பிரண்டு
பிரபஞ்சப் பெருவெளித் தாண்டிப்
போய் வரட்டும்!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-22 (1)
தலையல் மொழி-22 (2)
கன்னக்கதுப்புகள் பற்றி
சிப்பி இதழ் குவித்து
சிந்துகிறாய் முத்தங்கள்;
பூமிப்பரப்பில் பூக்களாகி
மென்வாசம் போர்த்திக்கொள்கிறேன்!
என்னிலிருந்த இவ்வேகாந்தம் வழிந்து
எதிர்ப்பட்ட மரங்களில்
விரல் பிணைந்திணைகிறது!
விருட்சங்கள் விழுங்கியதைப்
பிராணவாயுகள் பிடிங்கிப்பிடுங்கிப்
பரிணமிக்கின்றன வாசம் பொருத்தி!
வாயுவில் வார்க்கப்பட்டதை
வாரிச்சுருட்டிய பனிப்பொழில்கள்
வைத்துக்கொள்கின்ற தன் குளிருடம்பில்!
உறைபனிக்குள் உறங்கியதை
சிவந்தநிறக் கோள்வடிவன்
சிறைபிடிக்கிறான் தன் கதிர்பிரித்து!
ஞாயிறுவில் மிளிர்ந்ததை
ஊகித்தறிந்த கார்முகில்கள்
களவாடின தன் வெண்பொதிக்குள்!
மேகத்தில் முகிழ்ந்ததை
நிரப்பிக்கட்டிய நீர்த்தலைவன்
திவலைகளாய்த் தூற்றுகிறான்!
இதழ் ஒற்றல் ஒன்றின்
இத்துணை மகிமையை
இப்போது தான் அறிகிறேன்!
மறுமுறையும்
மலரிதழ்களால் ஒன்று தா
பூமிப்பந்தில் உருண்டு பிரண்டு
பிரபஞ்சப் பெருவெளித் தாண்டிப்
போய் வரட்டும்!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-22 (1)
தலையல் மொழி-22 (2)