• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-20

அன்றங்கே ஒரு வீடிருந்ததே
வீடு நிறைய உறவிருந்ததே
உறவிலெல்லாம் உயிரிருந்ததே
உயிரும் குளிர்ந்திட அன்பிருந்ததே

நுங்கு பகிர தயங்கவில்லையே
இளநீர் வெட்ட சோர்வில்லையே
பனம்பழமோ தனம் பலமோ
தந்திடத்தான் பயந்ததில்லையே

வறுமை இருந்தும் வருத்தமில்லையே
வக்கில் வாய்தா வந்ததில்லையே
சொத்தும் ஆசையும் சேர்ந்ததே இங்கு
சொந்தம் எல்லாம் செரித்துப் போனதே

அன்றங்கே ஒரு வீடிருந்ததே
வீடு நிறைய உறவிருந்ததே
உறவிலெல்லாம் உயிரிருந்ததே
உயிரும் குளிர்ந்திட அன்பிருந்ததே

அவ்வீட்டைக் கண்டவருண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அவ்வீட்டும் களைந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் :love::love::love:
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-20 (1)
தலையல் மொழி-20 (2)
 
ப்பா கவிதை செய்
அன்று பணமும் பகட்டும் அதிகமின்றி பாசமும் நேசமும் குவிந்து கிடந்தது இன்று பணமும் பகட்டும் மிக நேசத்திற்கு பஞ்சம்

நரசிம்மருக்கு சிவகாமியை ஜோடி சேர்க்க சொந்தங்கள் ஒன்று கூடட்டும்
 
ப்பா கவிதை செய்
அன்று பணமும் பகட்டும் அதிகமின்றி பாசமும் நேசமும் குவிந்து கிடந்தது இன்று பணமும் பகட்டும் மிக நேசத்திற்கு பஞ்சம்

நரசிம்மருக்கு சிவகாமியை ஜோடி சேர்க்க சொந்தங்கள் ஒன்று கூடட்டும்
🙏 🙏
 
Back
Top
Developed and maintained by – Akeshya