• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-1

பேருலகு என்பதின்
பிறிதோர் சொல்லானர்கள்
பேணி வளர்த்து
பேரீகை செய்தவர்கள்

இறைமை இவ்வுலகில்
இருப்பதற்கான சான்றிவர்கள்
அன்பு சூழ் பேருலகில்
அத்தனையும் ஆனவர்கள்

எந்த வரையறைக்குள்ளும்
வைத்து விட முடியாதவர்கள்
என் வயிறு நிறைந்து
தன் பசியைக் கடப்பவர்கள்

அவர்களின் சதை மடியை
சிதைமடி கொள்ள
சித்திர மடியில் தானோ
சிரம் கவிழ்த்துக் கொள்ள வேண்டும்?
இல்லாது போனபின்
இருப்பதெல்லாம் அவர்களாகிறது!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-1 (1)
தலையல் மொழி-1 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya