• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-விமர்சன அலசல்

தோழமைகளுக்கு வணக்கம்,

இப்பொழுது உங்கள் முறை, நீங்கள் எழுதுங்கள் நான் படிக்கிறேன்.

இக்கதையின் நிறை குறை என உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள். அது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

இந்நாவலை உள்வாங்கி நீங்கள் எழுதப்போகும் கருத்துக்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

மனதைத் தொட்ட இரண்டு விமர்சனத்திற்கு ஐநூறு ரூபாய் மதிப்பு கொண்ட அமேசான் பரிசுக் கூப்பன் அனுப்பி வைக்கப்படும்.

வெளிநாடு வாழ் வாசகராக இருந்தால், அவர்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

காத்திருக்கிறேன்.

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
 
Neega eludhura story la ella romba informative irukkum like padichale theriyum oru novel eludha avlo effort podu irukega, personally ennaku namma history pudikum like raja kalathu ella solli irudheega, history, medicine la psychology, geography, ella solli irukeega ,ella perspective la irundhu cover panni irundhega, unga story la mostly oru funny paati character varum adhu ennaku pudikum (compared to other novel unga ella novel um alagana love novel ,vulgarity illama irundhadhu main ah anti hero nu name la hero panradhu correct nu defend panni justify pannala heroine ah loosu mari kattama avaluku feelings ,self respect irukku nu avan thirumba vandhu 5 yrs wait pannadhu ennaku kk dha) heroine side mattum illama hero oda perspective la yum story padichadhu naala hero mela avlo kovam varla last ah, but adhuku munnadi konjam , story la vara mari green flag la future la varuvana nu therla enga paapom last ah neega solra some information ah innum konjam fun ah interesting kondu pona nalla irukkum, vera genre edhavadhu try pannuvegala?
 
அன்புள்ள நவீனா,

முதல் முறை உங்கள் கருத்துகளைப் படிப்பதில் ஆனந்தம் எனக்கு ❤️ ❤️

மிக்க மகிழ்ச்சி தங்களின் விமர்சன மடல் கண்டு. மிகவும் வெளிப்படையான உங்கள் கருத்துக்களை நான் அன்போடு வரவேற்கிறேன்.

உண்மைதான், நான் என்னை புதுப்பித்துக் கொள்ளாமல் ஒரு கதையை தகவல்களோடு எழுத இயலாது. பொதுவாகவே நான் அதிகம் படிக்கும் பழக்கம் உள்ளவள், இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆராய்ச்சி செய்கின்ற தொழில் செய்பவள் படிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். அப்படி படிப்பதை, நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு எழுத்தாளருக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நம் எழுத்துக்கள் பிறரை சிந்திக்க வைக்க வேண்டும். அப்படி சிந்திக்க வைக்க முடியுமா என்று நான் எடுத்த முயற்சி தான் நாவலாக உருமாறுகிறது.

பாட்டி தாத்தன்கள் நிறைந்த சமூகத்தில் பிறந்து அவர்களால் வளர்க்கப்பட்டு இன்று அவர்களின் தடையங்களை வெற்றிடத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் இந்த கலக்கல் பாட்டிகள்.

ஆன்ட்டி ஹீரோ கான்செப்டில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு ஹீரோ எப்படி கொடுமை செய்து பெண்மையைத் தாழ்த்தி நடந்து கொள்ள முடியும்? ஏனோ என்னால் ஏற்க இயலாது.

என் ஹீரோக்களுக்கு சில கோட்பாடுகள் உண்டு. அதன்படியே நான் வடிவமைக்கிறேன். கதாநாயகிகள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும், சுயமரியாதை நிறைந்தவர்களாக இருக்க வேண்டும், நிமிர்வோடு சமூகத்தை எதிர்நோக்க வேண்டும் என்பது நான் போட்டுக் கொண்ட விதிகள். அது எல்லா கதைமாந்தர்களிடமும் வெளிப்படுவது மாதிரி முடிந்தளவு முயற்சி செய்கிறேன்.

வேற Genre எழுதுவேனா? நல்ல கேள்வி. சமூக அக்கறை உள்ள நாவல்கள் எழுதுவது மட்டுமே என் நோக்கம். என் கவிதை வட்டத்தில் கூட அப்படித்தான் எழுதி வருகிறேன். நடைமுறைக்கு ஒவ்வாத பேன்டசி வகை கதைகளோ அல்லது ஹாரர் வகை கதைகளோ எழுதுவதில் தப்பில்லை. ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

என் கதைகள் ஏதாவது ஒரு செய்தியை படிப்பவர் மனதில் நட்டுவிட வேண்டும். அது தான் என் குறிக்கோள். அது தான் என் எழுத்துப் பணிக்கான சன்மானம்.

மிக்க நன்றி சகோதரி.

அடுத்த கதை கைக்கொள்ளும் பொற்சுடர் ஆரம்பித்தாகிவிட்டது.

இணைந்திருங்கள் என அன்போடு வேண்டுகிறேன்.

அன்பும் நன்றியும்,

சாந்தி உடையப்பன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya