• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தனிமை தனித்தன்மையே !

அங்காள்

SH Crystal Member
இருளைக் காணாமல் வளர்ந்தேன்
சூரியனின் கதிர்களால் !

நட்சத்திரமாக ஜொலித்தேன்
நிலாவின் வெளிச்சத்தால் !

வரம் தந்து மகிழ்ந்தேன்
வழி கேட்டு வருவோர்க்கு!

ஏமாற்றம் முற்கள் போல குத்தின
ஒவ்வொரு முறை நம்பிக்கைப் பூ
என் உறவுகள் மீது மலர்ந்த போது !

பலமுறை பூக்களை இழந்தேன்
அந்த உயிரற்ற உறவுகளுக்காக!

நம்பிக்கை மீண்டும் மலர்ந்து
இம்முறை பூக்களில் அல்ல
என் வேர்களில்
என் விழுதுகளில்
தனித்து நிற்கும் ஆலமரமாக !

தனிமையே!
உன்னை நாடியவர்களுக்கு
நீ கிடைக்கவில்லை
உன்னை நாடியே உயர
எவரும் விரும்புவதில்லை
உன்னை நான் தேடி வருகிறேன்
உறுதியாய் நான் தனித்து நிற்க !

தனிமரமாய் நிமிர்ந்து நிற்கிறேன்
என் வேர்களை விதைகளாக்க !!!
 

Attachments

  • 11.webp
    11.webp
    346.5 KB · Views: 0
Back
Top
Developed and maintained by – Akeshya