சாந்தி உடையப்பன்
Writer
காற்றில் கலந்து போன அப்பாவிற்கு என் திருமணத்தன்று இந்நாளில் பதினைந்து வருங்களுக்கு முன் எழுதியது 


ஆயிரம் பேர்கூட
அரங்கத்தில் இருக்கலாம்
ஆக்கிய வெற்றிடம்
அப்பா நீ
ஆக்கிய வெற்றிடம்
நிரம்பிடக் கூடுமா?
வடிக்கப் பிறந்தவளைப்
படிக்க வைத்துவிட்டால்
'பறந்து' போவேனோ எனப்
பயந்து பயந்து
பரிசீலித்து வந்தாயே....
அதை மறந்து போனதென்ன?
நீ 'பறந்து' போனதென்ன?
கல்வியின் கூட்டுக்குள்
கால் பரப்பி நின்றுகொண்டு
நீள அகலங்களை
நான் நிறைய வாசிக்கலாம்;
தேசம் பல கடந்து
தேடிப் பொருள் கொண்டு
உயிர் வாசம் முழுமைக்கும்
வசதிகள் செய்யலாம்;
என் உழைப்பிலிருந்து
'ஒரு பைசா' கூட
உனக்குத் தர வகையில்லை
உன் உள்ளப் பெருமையை
உணர்ந்து கொள்ள வழியில்லை!
செயற்கைக் காலுமுண்டு
செலவழிக்கத் தெம்புமுண்டு
செயற்கைக் காலுமுண்டு உன்னில்
செய்தமகள் நானுமுண்டு
பொருத்திக் கொள்வதற்கு
பொருத்தி வாருவாயா.....?
கால் பொருத்திக் கொள்வதற்கு
உயிர் பொருத்தி வாருவாயா...?!
என் மணக்கோலம் பார்க்க
மனப்பால் பருகினாயே...
மணவறைக்கு வந்துவிட்ட
மகளைப் பார்க்க
மனம் வரவில்லையா?
நீ மன்றம் வரவில்லையா?
அறுசுவை உணவு
அமிழ்ந்திருக்கு அவையில்..
'அல்வா' கூட
அமர்ந்திருக்கு இலையில்!
'இனிப்பு நீர்' என
உனை இருத்தமாட்டேன்பா
'இனிப்பு நீர்' என
இனி
உனை இருத்தமாட்டேன்பா
சுவைத்துப் பார்த்துச்
சொல்லிட வாப்பா!
ஆடை உடுத்தும் போதெல்லாம்
ஆலோசனை சொல்வாயே...
அலங்காரம் செய்யச் சொல்லி
அடிக்கடி வைவாயே....
சிருங்காரித்து நானிருக்கேன்
சிக்கிரம் பார்க்கவா!
'தாரை வார்க்கத்'
தந்தையில்லை என்பது...
ஊர் கூடி இழுக்கின்ற
தேரில் தொலைந்துபோன
விக்ரகம் மாதிரி
வெறுமையாய் இருக்குதப்பா...
வேதனையை மென்றுகொண்டு
வெளியில் சிரிக்கிறேன்பா!
உன் கம்பிரக் குரலில்லாது
கலைகட்டவில்லையப்பா
இங்கு கலைகட்டவில்லையப்பா;
கண்ணீப்பூக்களோடு
காலங்கள் செல்லுதப்பா.
ஒவ்வொரு முகத்தோடும்
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா
என் விழிகளை
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா...
ஏதாவது ஒரு உருவில்
நீ வந்திருப்பாய்யென
ஒவ்வொரு முகத்தோடும்
என் விழிகளை
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா...
அவையோருக்கு மத்தியில்
அமர்ந்திருக்கிறாயோ?
இல்லை....
மணமேடையில் மகள் பார்த்து
முகம்...
மலர்ந்திருக்கிறாயோ?
வருவோரை வரவேற்க
வாசலில் வசிக்கிறாயோ?
இல்லை....
பசித்தோரை கவனிக்கப்
பந்தியில்
பரிமாறல் செய்கிறாயோ?
எங்கேபா இருக்கிறாய்....?
ஒரே ஒரு நொடிக்கு.....
ஒரே 'ஒரு' நொடிக்கு.....
மட்டுமாவது
உயிர்த்துவா!
நீ உயிர்த்துவா!
- கண்ணீப்பூக்களோடும்...
பன்னீப்பூக்களோடும்....
மகள் சாந்தி....
ஆயிரம் பேர்கூட
அரங்கத்தில் இருக்கலாம்
ஆக்கிய வெற்றிடம்
அப்பா நீ
ஆக்கிய வெற்றிடம்
நிரம்பிடக் கூடுமா?
வடிக்கப் பிறந்தவளைப்
படிக்க வைத்துவிட்டால்
'பறந்து' போவேனோ எனப்
பயந்து பயந்து
பரிசீலித்து வந்தாயே....
அதை மறந்து போனதென்ன?
நீ 'பறந்து' போனதென்ன?
கல்வியின் கூட்டுக்குள்
கால் பரப்பி நின்றுகொண்டு
நீள அகலங்களை
நான் நிறைய வாசிக்கலாம்;
தேசம் பல கடந்து
தேடிப் பொருள் கொண்டு
உயிர் வாசம் முழுமைக்கும்
வசதிகள் செய்யலாம்;
என் உழைப்பிலிருந்து
'ஒரு பைசா' கூட
உனக்குத் தர வகையில்லை
உன் உள்ளப் பெருமையை
உணர்ந்து கொள்ள வழியில்லை!
செயற்கைக் காலுமுண்டு
செலவழிக்கத் தெம்புமுண்டு
செயற்கைக் காலுமுண்டு உன்னில்
செய்தமகள் நானுமுண்டு
பொருத்திக் கொள்வதற்கு
பொருத்தி வாருவாயா.....?
கால் பொருத்திக் கொள்வதற்கு
உயிர் பொருத்தி வாருவாயா...?!
என் மணக்கோலம் பார்க்க
மனப்பால் பருகினாயே...
மணவறைக்கு வந்துவிட்ட
மகளைப் பார்க்க
மனம் வரவில்லையா?
நீ மன்றம் வரவில்லையா?
அறுசுவை உணவு
அமிழ்ந்திருக்கு அவையில்..
'அல்வா' கூட
அமர்ந்திருக்கு இலையில்!
'இனிப்பு நீர்' என
உனை இருத்தமாட்டேன்பா
'இனிப்பு நீர்' என
இனி
உனை இருத்தமாட்டேன்பா
சுவைத்துப் பார்த்துச்
சொல்லிட வாப்பா!
ஆடை உடுத்தும் போதெல்லாம்
ஆலோசனை சொல்வாயே...
அலங்காரம் செய்யச் சொல்லி
அடிக்கடி வைவாயே....
சிருங்காரித்து நானிருக்கேன்
சிக்கிரம் பார்க்கவா!
'தாரை வார்க்கத்'
தந்தையில்லை என்பது...
ஊர் கூடி இழுக்கின்ற
தேரில் தொலைந்துபோன
விக்ரகம் மாதிரி
வெறுமையாய் இருக்குதப்பா...
வேதனையை மென்றுகொண்டு
வெளியில் சிரிக்கிறேன்பா!
உன் கம்பிரக் குரலில்லாது
கலைகட்டவில்லையப்பா
இங்கு கலைகட்டவில்லையப்பா;
கண்ணீப்பூக்களோடு
காலங்கள் செல்லுதப்பா.
ஒவ்வொரு முகத்தோடும்
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா
என் விழிகளை
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா...
ஏதாவது ஒரு உருவில்
நீ வந்திருப்பாய்யென
ஒவ்வொரு முகத்தோடும்
என் விழிகளை
ஒட்டி ஒட்டிப் பிரிக்கிறேன்பா...
அவையோருக்கு மத்தியில்
அமர்ந்திருக்கிறாயோ?
இல்லை....
மணமேடையில் மகள் பார்த்து
முகம்...
மலர்ந்திருக்கிறாயோ?
வருவோரை வரவேற்க
வாசலில் வசிக்கிறாயோ?
இல்லை....
பசித்தோரை கவனிக்கப்
பந்தியில்
பரிமாறல் செய்கிறாயோ?
எங்கேபா இருக்கிறாய்....?
ஒரே ஒரு நொடிக்கு.....
ஒரே 'ஒரு' நொடிக்கு.....
மட்டுமாவது
உயிர்த்துவா!
நீ உயிர்த்துவா!
- கண்ணீப்பூக்களோடும்...
பன்னீப்பூக்களோடும்....
மகள் சாந்தி....