சாந்தி உடையப்பன்
Writer
தோழமைகளுக்கு வணக்கம்.
திருவாராதனம் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வைணவ முறைப்படி இறைவனை பூஜித்து தொழுதல் திருவாராதனம். இது திருமாலுக்கான ஆராதனம் (ஆராதனை).
கருவாராதனம் அப்படினா? ஒரு கருவறைக்கான ஆராதனம் இது. நம் நாயகன் சித்தார்த், தன்னிடம் வந்து சேர்ந்த தாய் யசோதாவிற்கு செய்யும் ஆராதனை.
பெற்றோர்கள் வயது முதிரும் போது பேணிக் காத்துக் கொள்ளுதல் நம் தலையாய கடமையாகும். இச்செய்தியை இந்த நாவல் உரக்கப் பேசும். கொஞ்சம் அழுத்தம் நிறைந்த கதைக்களம் என்றாலும் கூட வழக்கமான என் பாணியான பாசிடிவிட்டி நிறைய இருக்கும்.
மருத்துவ ஆய்வாளரான நான் ஒரு மனநோய் பற்றிய ஆழ்ந்த அலசலையும் இதில் கொண்டு வந்திருக்கிறேன். அந்நோய் சார்ந்த சமூகப் பிரச்சனையை கையில் எடுத்து இக்கதையில் உங்களோடு பயணிக்க நினைக்கிறேன்.
ஆங், கதையின் நாயகி? சித்தார்த்தின் சித்தம் கலக்கி நம்மைச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்க வருவாள் ஒரு 'வால்' சாகித்யா!
எப்போதும் போல் இப்போதும் என் பயணத்தில் இணைந்திருங்கள்.
தொன்மங்களை நாம் தேடி முடித்ததும் கருவறையின் ஆராதனையைக் கை கொள்வோம்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.