• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசி சுவடு - 2

அத்தியாயம் – 3

மலை அடிவாரத்தை நோக்கி...

சுனையாழி…

அவளுடைய பெயரைப் போலவே, அவளுடைய மனமும் குணமும் எப்போதும் ஒரு தெளிந்த நீரோடையைப் போலத்தான் இருந்தது.

மருத்துவம் அவளுடைய குடும்பத்திற்கு புதிதானதல்ல.

வைத்தியநாதன் – அமுதரசி தம்பதியரின் குடும்பம், பல தலைமுறைகளாக மருத்துவத்தைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துக்கொண்ட குடும்பம். தாத்தாவின் தாத்தா காலம் வரை பாரம்பரிய வைத்திய முறையைப் பின்பற்றி வந்தவர்கள், காலத்திற்கேற்ப ஆங்கில மருத்துவத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

அதேப் பாதையில்தான் சுனையாழியும் டாக்டராகியிருந்தாள்.

ஆனால்…

தாத்தாவின் தாத்தாவிடம் அவருக்கு இருந்த ஈர்ப்பு, தாத்தாவிடம் பேத்திக்கும் இயல்பாய் உருவாகி இருந்த ஈர்ப்பு ஆர்வமாய் உருமாறிப் போனது. பழைய வைத்திய முறையின் மீதான ஆர்வம் மட்டும் அவளுக்குள் ஆலமரமாய் வேறூன்றி போனது..

ஒரு செடியைப் பார்த்தால் அதன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு இலையைக் கண்டால் அதன் மருத்துவப் பயனை அறிந்துகொள்ள வேண்டும். என்ற எண்ணலைகள் எப்பொழுதும் மண்டைக்குள் நண்டாய் ஊறும்..

அதனாலையே கிடைக்கும் ஓய்வு நாட்களில், காடு, மலைப்பாதைகளுக்குள் சுற்றித் திரிவதையே அவள் அதிகம் விரும்பினாள்.

இந்த முறையும் அப்படித்தான்.

“ம்மா… எனக்கே எப்போதாவதுதான் லீவே கிடைக்குது. அந்த லீவையும் எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்க கூடாத என்ன?!
என்று தன் அம்மா முந்தானையை
பிடித்தபடி பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தாள் சுனையாழி.

“நான் உன்ன வீட்டுல அடைஞ்சு இருக்கச் சொல்லல. உன் அண்ணன் யாழ்வேந்தன் வரட்டும். அவன்கூட போ.”

“அவனுக்கு தான் இப்ப லீவ் கிடைக்களையே" என்றவளிடம்

“அப்ப அவனுக்கு லீவ் கிடைக்கும் போது " என்றவரிடம் கடுப்பாக

"அப்ப எனக்கு இந்த லீவ் முடிஞ்சு போயிடும் என்னமா நீங்க" என்றாள்

அமுதரசி பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தார்.
அந்த பார்வைக்கு பதிலாக
“எப்பவும் அவன்தானே என்கூட வர்றான். இந்த முறை அவனுக்கு வேலை இருக்கு. அதுக்காக நான் போகாம இருக்கணுமா?” என கேட்க

“நீ தனியா போறதுதான் எனக்குப் பிடிக்கல யாழி " எனறவரிடம்

“ ம்மா நான் தனியா போறதுலாம் பழக்கம் தானேமா எப்ப மட்டும் என்ன?! " என்றவளுக்கும்மே அவரின் காரணம் தெரிந்தே தான் இருந்தது

“நீ தனியா போனதுலாம் நீயும் உன் அண்ணனும் போய் பழகன இடத்துக்குதான் ஆனா இப்ப நீ போகற இடம் புது " என்றார் முறைப்புடன்

சுனையாழிக்கும் அவரின் மனநிலை புரியாமல் இல்லை .. புரிந்ததால் தான் அவர் பின்னால் தாஜா சொய்ய சுற்றிக்கொண்டிருந்தாள்

“ம்மா… நான் ஒன்னும சின்னப் பிள்ளை இல்லம்மா"

“நீ சின்ன பிள்ளைன்னு நான் எப்ப சொன்னேன்... ஏழு கழுத வயசாகியும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டு இருக்க உன்னை பார்த்து நான் சின்ன பிள்ளைன்னு சொல்ல முடியுமா என்ன?!" தன் ஆதங்கத்தை சொல்லி காட்ட

“ம்மா " என்றாள் கடுப்புடன்.

நான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேனா சொல்லறேன் நீங்க பாத்த மாப்பிளைங்கள பார்த்தா எனக்கு கல்யாணம் பண்ணிக்க நினைப்பே வரலம்மா நான் என்ன பண்ண"
என்று சொல்பவள் அத்தனை பேரழகியான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட முடியாது அதுக்காக அவள் அழகில்லாதவள்ன்னும் சொல்லிட முடியாது...
இந்திய பொண்களின் சராசரி உடத்தை விட சற்றே கூடுதலான உயரம் கொண்டவள்..
அண்ணனான யாழ்வேந்தன் என்ன பண்ணனாலும் அவளும் அதை பண்ணியே தீருவேண் என்று நிற்பவள் .

அவன் சிலம்பம் கற்க போக இவளை பரதநாட்டியம் சேர்த்தார்கள்... அவள் பரநாட்டியத்தோட சிலம்பத்தையும் கத்துப்பேன் என்று நின்றவள் .

யாழ்வேந்தேன் ஹிட்டார் பயிற்சிக்கு போக இவளை வீணைக்கு சேர்த்தாள் அதனோடையே வாள் பயிற்சியும் வேண்டும் என்று நின்றாள்..
ஆகமொத்தம் பெண்மையும் திறமையும் கூடதலாக அரைச்ச பொண்மஞ்சள் நிறம் கொண்டவள் பார்க்க பார்க்க அழகானவள் பழக பழக திறமையானவள் .

பத்தோடு பதினொன்னா கடந்துபோக முடியாதவள் ... அப்படியானவளுக்கு தான் வீட்டில் காட்டி மாப்பிளைகள் யாரையும் பிடிக்கவில்லை. என்பது அமுதரசிகு குறையான ஒன்னுதான்

மகளின் பேச்சை கேட்ட அமுதரசியின் முகத்தில் இருந்த கடுமை சற்று குறைந்தது.

இன்னும் இரண்டு வருசம் போனா உனக்கு முப்பதை தொட்டும் உன் அண்ணனுக்கு இன்னும் இரண்டு வயசு கூடி போகும்... இப்படியே நீங்க இரண்டு பேரும் யாரையும் பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு இருங்க" என்றாள் முகத்தை தேள்பட்டையில் இடித்து...

"ம்மா எங்க இருந்து எங்க டாப்பிக்க மாத்தறீங்க .. இப்ப நாம என் கால்யாண வசியத்தை பேசிட்டு இல்லமா ..."
"அப்படியே உன் கல்யாண விசயத்தை பேசிட்டாலும்.." என்றவாறே கிச்சனுக்குள் சென்றபடியே

“போயிட்டு இருட்டறதுக்குள்ள வந்துடுவியா?” எனவும்

சுனையாழியின் முகம் மலர்ந்தது.

“வந்துடுவேண் மா"

“ம்ம் சரி உன் கூடவே உன்ன மாதிரியே ஒருத்தி சுத்துவாளே ... அவளையாவது கூப்பிட்டு போறது"

நம்ம பானுவையாம சொல்லற அவளுக்கும் லீவ் இல்லமா இல்லன்னா இந்த நேரத்துக்கு வந்திருக்க மாட்டாளா" என்றவாறே தன் பேக்பேகை ரெடி பண்ண தன் ரூமில் நுழைந்துக்கொண்டாள்
இந்த அம்மா மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ள கிளம்பிடனும் என்று நினைத்துக்கொண்டே.
அதற்குள் அரசியும் மகளுக்கானா தண்ணி, சாப்பாடுன்னு கட்டிவிட
அதை பார்த்த சுணையாழிக்கு எடுக்காமல் விடமாட்டார் மறுபடி பேச ஆரம்பிச்சா இன்னமும் பேசுவார் என்று எதுவும் சொல்லாம் கிளம்பிவிட்டாள்
---

சுணையாழி யின் நகரத்தை சந்தடிகளை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

சாலையின் இருபுறமும் இருந்த கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, மரங்களும் வயல்வெளிகளும் அதிகரிக்கத் தொடங்கின.

ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த சுனையாழியின் கண்கள், தொலைவில் தெரிந்த மலைகளைப் பார்த்ததும் மின்னின.

(அதே தான் நீங்க நினைப்பது சரிதான்)

ஆமாம் இவ்வளவு நேரமும் சுணையாழி தன் அம்மாவிடம் மல்லுக்கட்டி கிளம்பிய இடம் முகில்வர்மன் , இளமாறனிடம் போக வேண்டும் என்று சொன்ன அதே மலைக்காட்டுக்குதான்.


அந்த மலையின் கோட்டு வடிவத்தை பார்த்த நொடியிலேயே அவளுடைய மனம் அங்கே சென்றுவிட்டது.

அந்தப் பயணம் பச்சிலைகளைத் தேடிச் செல்லும் ஒரு சாதாரணப் பயணம் என்றுதான் சுனையாழி நினைத்திருந்தாள்.

ஆனால், அவள் அறிந்திருக்கவில்லை.. அந்த பயணம் அவள் வாழ்க்கையையே மாற்றப்போவதை...

அதே நேரம் இவர்கள் மூவருக்கும் முன்னே ஒருவன் அந்த காட்டையே நாலைந்து முறை தன் காலடிகளால் அளந்து முடித்திருந்தான் என்பதை...

தொடரும்…
 
Back
Top
Developed and maintained by – Akeshya