அத்தியாயம் – 47
கடைசிச் சுவட்டின் வாசலை நோக்கி!
காட்டின் அடர்த்தி மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
அருவியைச் சுற்றியிருந்த மரங்களைக் கடந்து அவர்கள் உள்ளே செல்லச் செல்ல, வானத்தை மறைக்கும் அளவுக்கு மரக்கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. புதர்களும் கொடிகளும் பாதையின் இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்திருந்தன. காலடியில் கிடந்த சருகுகள் ஒவ்வொரு அடிக்கும் சத்தமெழுப்பின.
முன்னால் இளமாறன் நடந்துகொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் சுனையாழி நடந்தாள். அவளுக்குப் பின்னால் முகில்வர்மன், யாழ்வேந்தனின் தோளில் கையைப் போட்டபடி அவனுடன் நடந்துவந்தான். கடைசியாக வசீகரன், மற்றவர்கள் செல்லும் பாதையையும் சுற்றியிருந்த காட்டையும் கவனித்தபடி வந்தான்.
நடந்துகொண்டிருந்த இளமாறன் ஒருமுறை முகில்வர்மனைத் திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்கள் முகிலின் கண்களைச் சந்தித்தன.
பிறகு முன்னால் இருந்த பாதையைப் பார்த்துவிட்டு, மீண்டும் முகிலின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
வார்த்தைகள் எதுவும் இல்லை.
ஆனால், அவன் கேட்க வந்த கேள்வியை முகில்வர்மன் புரிந்துகொண்டான்.
நாம் எங்கே தங்கப்போகிறோம்?
முகில் தன்னுடைய கண்களால் முன்னால் செல்லும் பாதையைக் காட்டினான். பின்னர், இளமாறனைத் தொடர்ந்து செல்லுமாறு தலையை லேசாக அசைத்தான்.
இளமாறனின் உதடுகளில் சிறிய புன்னகை தோன்றியது.
அவன் வேகத்தைக் கொஞ்சம் அதிகரித்தான். முகில்வர்மனும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தான்.
அவர்களுக்குள் நடந்த அந்தச் சைகைப் பரிமாற்றத்தைப் பின்னால் வந்துகொண்டிருந்த வசீகரன் கவனித்தான்.
அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவில்லை. ஆனால், இருவருக்கும் இடையில் ஏதோவொரு ரகசிய மொழி இருப்பதுபோலத் தோன்றியது.
கடந்த கால நினைவுகள் இவர்களுக்கு வந்திருந்தால், என்னைப் பார்க்கும் பார்வை நிச்சயம் மாறியிருக்கும். இன்னும் இவர்களுக்கு முழுமையாக நினைவுகள் திரும்பவில்லை போலிருக்கிறது! என்று நினைத்துக்கொண்டான்.
அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடந்தவன், சிறிது தொலைவு சென்றதும் கைப்பேசியை எடுத்தான்.
மற்றவர்கள் முன்னால் செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, மதனின் குழுவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘நாங்கள் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் செல்கிறோம். கவனமாகப் பின்தொடருங்கள். யார் கண் பார்வைக்கும் தெரியாமல் இருங்கள்.’
செய்தியை அனுப்பிவிட்டு, கைப்பேசியை மீண்டும் வைத்துக்கொண்டான்.
பிறகு, தனக்குச் சற்றுத் தொலைவில் யாருடைய பார்வையையும் கவராமல் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த தீரனைப் பார்த்தான்.
வசீகரனின் பார்வையை உணர்ந்த தீரன் தலையசைத்துவிட்டு, தொடர்ந்து முன்னேறினான்.
ஆனால், அவனுடைய கவனம் அவர்கள் செல்லும் பாதையில் இருந்தது.
மரங்களின் அமைப்பு, பாதையின் வளைவு, பாறைகளுக்கு இடையே தெரிந்த இடைவெளி என ஒவ்வொன்றையும் அவன் உற்றுக் கவனித்தான்.
அடுத்த சில நொடிகளிலேயே அவர்கள் எங்கே தங்க முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்துபோனது.
இந்தக் காடு இந்த ஜென்மத்தில் எனக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால், நான் வாழ்ந்த அந்தக் காலத்தில் உங்களுக்கு நிகராக எனக்கும் இந்தக் காட்டைப் பற்றித் தெரியும்!
அவன் முன்னால் சென்றுகொண்டிருந்த இளமாறனையும் முகில்வர்மனையும் பார்த்தான்.
முகில்வர்மனைப் பார்த்ததும் அவனுடைய கண்கள் கோவைப் பழம்போலச் சிவந்தன.
இப்போதும் உனக்கு நினைத்தது கிடைக்க விடமாட்டேன்!
மனதிற்குள் உறுதியெடுத்தவன், அடுத்த கணமே வசீகரனை நோக்கினான்.
உங்களுக்கு முழுமையாக நினைவுகள் திரும்பினாலும், என்னைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை, அண்ணா! இந்த ஜென்மத்தில் நீங்கள்தான் எனக்கு அண்ணன். அந்த முகில்வர்மன் உங்களுடைய தம்பி என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, அவனை இல்லாமல் ஆக்கிவிடுகிறேன்!
அவனுடைய எண்ணங்கள் கொதித்துக்கொண்டிருந்தாலும், முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. மற்றவர்களைப் போலவே வெகு சாதாரணமாக நடந்துவந்தான்.
முன்னால் சென்றுகொண்டிருந்த இளமாறன், அந்த இடத்தின் வழிகளை நன்கு அறிந்தவனைப் போலத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தான்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க!”
யாழ்வேந்தனின் குரல் காட்டின் அமைதியைக் கலைத்தது.
முன்னால் நடந்துகொண்டிருந்த இளமாறன் திரும்பினான். முகில்வர்மனும் யாழ்வேந்தனின் தோளிலிருந்த தன் கையை எடுத்துவிட்டு அவனைப் பார்த்தான்.
“என்னாச்சு, யாழ்வேந்தன்?” என்று முகில் கேட்டான்.
“என்னாச்சா? அதைத்தான் நானும் கேட்கிறேன்!”
யாழ்வேந்தன் சுற்றிலும் பார்த்தான்.
“நாம இப்ப எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?” என்று நக்கலான இதழ்வளைவுடன் கேட்டான்.
முகில்வர்மன் பதிலளிக்காமல் அவனைப் பார்த்தான்.
யாழ்வேந்தன் தொடர்ந்து பேசினான்.
“நானும் என் தங்கச்சியும் மூலிகை தேடித்தானே இந்தக் காட்டுக்கு வந்தோம்? எங்க தாத்தாவோட ஓலைச்சுவடியில் சில மூலிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவற்றை அவர் நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய மருத்துவ முறையில் ஆர்வம் கொண்ட என் தங்கச்சியும் மூணு, நாலு வருஷமா அவற்றைத் தேடிக்கிட்டிருக்கா. அவளுக்கு உதவியாக இருக்கத்தான் நானும் வந்தேன்.
“நீங்க இரண்டு பேரும் அருவியில் குளிக்க வந்தீங்க. அதோ, வசீகரன் சார் அகழ்வாராய்ச்சிக்காக இந்தக் காட்டைச் சுற்றிப் பார்க்க வந்ததாச் சொன்னார். இதுவரைக்கும் எல்லாம் சரிதான். ஆனா, இப்ப என்னதான் நடந்துட்டிருக்கு?”
அவன் கேட்ட கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை.
யாழ்வேந்தன் முகில்வர்மனை நேராகப் பார்த்தான்.
“அருவியை விட்டுவிட்டு, காட்டுக்குள்ள இன்னும் இன்னும் உள்ளே போயிட்டிருக்கோம். திரும்பிப் போக வேண்டிய வழி எதுன்னு எனக்குத் தெரியாது. நம்முடன் வர்றவங்க யாருக்காவது இந்த இடம் முழுசாகத் தெரியுமா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நீங்க மட்டும் ஏதோ எல்லாம் தெரிஞ்சவங்க மாதிரி தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கீங்க!”
அவன் முகில்வர்மனைச் சுட்டிக்காட்டினான்.
“நீங்க எங்கே கூட்டிட்டுப் போறீங்க எங்களை?”
முகில் அவனைப் பார்த்தபடியே அமைதியாக நின்றான்.
சுனையாழி முகிலையும் யாழ்வேந்தனையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு தன் அண்ணனின் பார்வையைச் சந்தித்தாள்.
“அண்ணா…”
“நீ சும்மா இரு, சுனை!” என்று அவளை இடைமறித்தான் யாழ்வேந்தன்.
“எல்லாம் உன்னாலதான்! தாத்தாவோட மருத்துவக் குறிப்புகள் உனக்கு அவ்வளவு முக்கியமா என்ன? இப்ப பாரு, எங்கே போறோம்னே தெரியாம, ஓரிரு முறைதான் பழகியிருக்கிறவங்களோட பயணம் செஞ்சுட்டிருக்கோம். ஏதாவது ஆபத்து வந்தா நம்மளால என்னதான் பண்ண முடியும், சொல்லு?”
தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு யாழ்வேந்தன் அமைதியானான்.
அந்த அமைதிக்குள் அவனுடைய கோபமும் கவலையும் வெளிப்பட்டன.
யாழ்வேந்தனின் கோபமும், காட்டின் அமைதியும் அந்த இடத்தைப் பயமூட்டும் காட்சியாக மாற்றியிருந்தன.
அடர்ந்த மரங்களுக்கிடையே வீசிய காற்றின் ஓசையைத் தவிர வேறெந்தச் சத்தமும் கேட்கவில்லை. சற்றுமுன் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த காலடிச் சத்தங்களும் இப்போது நின்றுவிட்டன.
யாழ்வேந்தன் முகில்வர்மனையும் இளமாறனையும் மாறி மாறிப் பார்த்தான்.
“இப்பவாவது எனக்கு யாராவது பதில் சொல்லப் போறீங்களா, இல்லையா?”
அவனுடைய குரலில் இருந்த கடுப்பைக் கண்ட சுனையாழி மீண்டும் பேசுவதற்காக வாயைத் திறந்தாள்.
“அண்ணா, நான் சொல்றதைக் கொஞ்சம்—”
“சுனை! உன்னை அமைதியா இருக்கச் சொன்னேன் இல்லையா? கொஞ்ச நேரம் சும்மா இரு!” என்ற யாழ்வேந்தன், அவளை முறைப்பாகப் பார்த்துவிட்டு உடனே முகில்வர்மனை நோக்கித் திரும்பினான்.
முகில் அவனுடைய கோபத்தைக் கண்டும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, சுற்றியிருந்த மரங்களையும் புதர்களையும் ஒருமுறை கவனமாகப் பார்வையிட்டான். காட்டு விலங்குகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தான்.
“டாக்டர், இங்க கொஞ்சம் வாங்க,” என்று அவனருகில் நின்றிருந்த இளமாறனை அழைத்தான்.
“இன்னும் கொஞ்ச தூரம் போய்ப் பார்ப்போம். நாம தங்குறதுக்குப் பாதுகாப்பான இடம் கிடைக்குதான்னு பார்த்துட்டு, கிடைச்சா அங்கே தங்கிக்கலாம். இல்லன்னா திரும்பிப் போயிடலாம்.”
அவன் சொன்னதைக் கேட்ட யாழ்வேந்தன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால், அதைக் கவனித்த முகில்வர்மன் தொடர்ந்து பேசினான்.
“நீங்க தேடிட்டு வந்த மூலிகை நிச்சயம் இந்தக் காட்டுல கிடைக்க வாய்ப்பிருக்கு. உங்க தாத்தாவோட ஓலைச்சுவடியில இருந்த குறிப்புகள் இந்தக் காட்டோட தொடர்புடையதுதான், நான் பார்த்தவரை. ஆனா, இன்னும் அதை முழுசாகப் படிச்சுப் பார்க்கலை. படிச்சுப் பார்த்துட்டு உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்கிறேன்,” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட யாழ்வேந்தனின் முகத்திலிருந்த கோபம் மறைந்து, அந்த இடத்தில் குழப்பம் குடிகொண்டது. அவனுடைய புருவங்கள் சுருங்கின.
“ஒரு நிமிஷம்! என்ன சொன்னீங்க? ஓலைச்சுவடியைப் பார்த்து நீங்க எங்களுக்குச் சொல்லப் போறீங்களா?” என்றான் குழப்பமான குரலில்.
முகில்வர்மன் அவனை ஒரு நொடிக்கும் குறைவான நேரம் பார்த்தான்.
“ஆமா. அதுல என்ன சந்தேகம்?”
“நீங்க பிஸினஸ்மேன்தானே? உங்களுக்கு ஓலைச்சுவடியெல்லாம் படிக்கிற அளவுக்கு அறிவு இருக்கா?”
யாழ்வேந்தன் கேட்ட விதத்தில் வெளிப்படையாகவே நம்பிக்கையின்மை தெரிந்தது.
அவனுடைய கேள்வியைக் கேட்ட முகில்வர்மனுக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக மெல்லிய புன்னகை தோன்றியது.
“நான் பிஸினஸ்மேன்தான். அதுக்காக ஓலைச்சுவடி படிக்கத் தெரியாதுன்னு யார் சொன்னது? எனக்கு ஓலைச்சுவடி படிக்கவும் தெரியும்,” என்றான்.
அவனுடைய பதில் யாழ்வேந்தனைச் சில நொடிகள் அமைதியாக்கியது.
ஆனால், அந்தப் பதிலை இன்னொருவனும் கேட்டுக்கொண்டிருந்தான்.
யாழ்வேந்தனுக்குப் பின்னால் நின்றிருந்த வசீகரனின் பார்வை முகில்வர்மனின் முகத்தில் நிலைத்தது.
ஓலைச்சுவடி படிக்கத் தெரியுமா?
அந்தச் சொற்கள் அவனுடைய மனதிற்குள் பல பழைய நினைவுகளைத் தட்டியெழுப்பின.
முகில்வர்மன் சொன்ன பதிலில் இருந்த இயல்பும், அவன் வெளிப்படுத்திய நம்பிக்கையும் வசீகரனின் சந்தேகத்தை அதிகரித்தன.
அப்படியானால்... முகில்வர்மனுக்கும் நினைவுகள் திரும்பியிருக்கிறதா?
அந்த எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே அவனுடைய உடல் ஒருமுறை அதிர்ந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
தன்னுடைய நினைவுகள் திரும்பியிருப்பதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை. அதேபோல், முகில்வர்மனின் நினைவுகள் திரும்பியிருக்கின்றனவா என்ற தன்னுடைய சந்தேகத்தையும் இன்னும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
அவனுடைய முகம் வழக்கம்போல அமைதியாகவே இருந்தது.
ஆனால், மனதிற்குள் புதியதொரு எச்சரிக்கை எழுந்திருந்தது.
முகிலைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அவனுக்கு எல்லா நினைவுகளும் திரும்பியிருக்கின்றனவா என்பதை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, சற்றுத் தொலைவில் மறைவாக நின்றிருந்த கானத்தீரனாகிய இப்போதைய தீரனும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக்கொண்டிருந்தான்.
முகில்வர்மன் ஓலைச்சுவடியைப் படிக்கத் தெரியும் என்று சொன்னதைக் கேட்டதும் அவனுடைய பார்வை கூர்மையானது.
அப்படியானால், உனக்கும் நினைவுகள் திரும்பிவிட்டதா, வேள்வியாளா?
என்று மனதிற்குள் கணக்கிட்டான்.
இல்லை... முழுமையாகத் திரும்பியிருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால், உன்னுடைய நடவடிக்கைகளில் இன்னும் பல மாற்றங்கள் தெரிந்திருக்கும். இருந்தாலும், இனிமேல் உன்னைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருக்க முடியாது. உடனே நான் ஏதாவது செய்தாக வேண்டும்.
அவனுடைய பார்வை தன்னையறியாமல் வசீகரனை நோக்கிச் சென்றது.
அண்ணனுக்கும் ஏதோ நினைவுக்கு வந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டாமல் மறைக்கிறார்.
என்று நினைத்தபடியே இருவருடைய நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருந்த தீரன், தன்னுடைய இருப்பை யாரும் உணர்ந்துவிடாதபடி மேலும் மறைவாக நின்றுகொண்டான்.
அவன் மனதிற்குள் இருந்த எச்சரிக்கை இப்போது இன்னும் அதிகரித்திருந்தது.
அதே நேரத்தில், முன்னால் நின்றிருந்த யாழ்வேந்தன் முகில்வர்மனை மீண்டும் பார்த்தான்.
“ஓ! அப்போ உங்களுக்கு ஓலைச்சுவடி படிக்கத் தெரியுமா?”
அவனுடைய குரலில் இன்னமும் முழுமையான நம்பிக்கை வந்திருக்கவில்லை.
“சரி. இந்த முறையும் உங்களை நம்பி நான் வரேன்.”
அவன் சற்றே இடைவெளிவிட்டு, தன்னுடைய நிபந்தனையைத் தெளிவாகச் சொன்னான்.
“ஆனா, இன்னும் அரை மணி நேரத்துல இருந்து ஒரு மணி நேரத்துக்குள்ள நாம தங்குறதுக்குப் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க முடியலைன்னா, திரும்பி வந்த வழியிலேயே எங்களைப் பாதுகாப்பாக வெளியே கூட்டிட்டுப் போய்விடணும். அதுக்குப் பிறகு நீங்களும் இளமாறனும் விருப்பப்பட்ட இடத்துக்குப் போங்க. எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.”
என்றபடி முகில்வர்மனைப் பார்த்தான்.
“எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. எனக்கு வேண்டியது என் தங்கையோட பாதுகாப்பு மட்டும்தான்.”
என்றவன், முகில்வர்மனின் பதிலுக்காகக் காத்திருக்காமல் இளமாறனை நோக்கித் திரும்பினான்.
“இளமாறன், உங்களுக்கு இந்த இடமெல்லாம் நல்லாத் தெரியுமா?”
இளமாறன் அவனைப் பார்த்தான்.
“இந்தக் காட்டுல நான் பல இடங்களுக்குப் போயிருக்கேன். ஆனா, எல்லா இடங்களும் எனக்குத் தெரியும்னு சொல்ல முடியாது. இருந்தாலும், இப்போ நாம போற இடம் எனக்கு நல்லாத் தெரிஞ்ச இடம்தான்,” என்றான். அவனுடைய குரலில் ஓரளவு உறுதி தெரிந்தது.
“சரி. பாதுகாப்பான இடம் கிடைக்குமான்னு பாருங்க.”
யாழ்வேந்தன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.
முகில்வர்மன் அவனைப் பார்த்தபடி நின்றான். பிறகு இளமாறனை நோக்கி மெல்லத் தலையசைத்தான்.
இருவரும் மீண்டும் நடக்கத் தொடங்கினர்.
அவர்களுக்குப் பின்னால் சுனையாழியும் யாழ்வேந்தனும் வந்தனர். வசீகரன் வழக்கம்போலக் கடைசியில் நடந்து வந்தான்.
அவர்களுக்குப் பின்னால் எவ்விதச் சத்தமுமின்றித் தீரனும் பின்தொடர்ந்தான்.
அதே நேரத்தில், மரங்களின் அடர்த்தி குறையாமல் இருந்ததால், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பதைக்கூடக் கணக்கிட முடியவில்லை.
அந்த நேரத்தில், முன்னால் சென்றுகொண்டிருந்தவர்கள் திடீரென்று நின்றுவிட்டதைக் கவனித்தான் மதன்.
என்ன இது? இவ்வளவு நேரம் நடந்துகொண்டிருந்தவர்கள் இப்போ ஒரே இடத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்களே!
என்று எண்ணியவன், அவர்கள் பேசுவது கேட்காதபோதும், அவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்தபடி நின்றிருந்தான்.
அவர்கள் பேசி முடித்துவிட்டு மீண்டும் நகரத் தொடங்கியதும், மதனும் அவர்களைப் பின்தொடர்வதற்காகத் திரும்பினான்.
அப்போது அவனுடைய பார்வை வலப்பக்கத்தில் இருந்த பெரிய பாறையின் மீது விழுந்தது.
அந்தப் பாறையின் மேற்பரப்பில் சில விசித்திரமான குறியீடுகள் காணப்பட்டன. அவற்றுக்கிடையே கோடுகளால் இணைக்கப்பட்டிருந்த சில வரைபடங்களும் இருந்தன.
மதன் தன்னுடைய பார்வையைக் கூர்மையாக்கினான்.
பாறையின் அருகே சென்று அவற்றைக் கூர்ந்து கவனித்தான்.
இந்தக் காட்டுல இப்படி ஒரு குறியீடா? அதுவும் கூடவே வரைபடங்களும் இருக்கே!
என்று எண்ணியபடியே அவற்றை மேலும் உற்றுப் பார்த்தான்.
அந்தக் குறியீடுகள் எதைப் பற்றியவை என்று உடனடியாக அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், அவை சாதாரணமாக யாரோ கிறுக்கிய கோடுகள் அல்ல என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
அவன் பார்வை அந்தப் பாறையிலிருந்து விலகி, முன்னால் சென்றுகொண்டிருந்த வசீகரனை நோக்கிச் சென்றது.
பிறகு, தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன் அந்தப் பாறையில் இருந்த குறியீடுகளையும் வரைபடங்களையும் புகைப்படம் எடுத்துச் சேமித்துக்கொண்டான்.
தொடரும்...