அத்தியாயம் – 46
நினைவுகள் நிலைநின்றன!
“இந்தக் காட்டுக்குள்ள வந்ததுல இருந்து யாருமே நார்மலாவே இல்லை. எல்லாரும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிறீங்க!
என்னதான் ஆச்சு என்னோட வந்தவங்களுக்கு? வந்தவங்கதான் இப்படின்னா, என் கூடப் பிறந்தவளும் நேத்துல இருந்து ஒண்ணு ஓவராகக் கடுப்புல இருக்கா; இல்லன்னா ஓவராகக் குழப்பத்துல இருக்கா!” என்று யாழ்வேந்தன் தலையில் கைவைத்தபடி புலம்பினான்.
அவனது பார்வை முகில்வர்மன், சுனையாழி, மாறன், வசீகரன் என ஒவ்வொருவரின் மீதும் ஒரு சுற்று வந்தது.
“நேத்து சாப்பாட்டு மேஜையில உங்களைப் பார்த்ததுக்கும், இப்போ பார்க்கிறதுக்கும் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே முகிலின் அருகில் வந்தான்.
“நான் என்னவோ எப்பவும் இருக்கிற மாதிரித்தான் இருக்கேன். ஆனா, நீங்க நாலு பேரும் ஏதோ ஒரு மாதிரி இருக்கீங்க. வசீகரன் சார் நேத்துகூட அதிகமா பேசலன்னாலும், ஏதோ கொஞ்சமாவது பேசினார். ஆனா, காலையில கேட்டதுதான் அவரோட குரல். அதுக்குப் பிறகு இப்போவரைக்கும் ஏதோ மௌன சாமியார் மாதிரி அமைதியாகிட்டாரு.
என் தங்கச்சி, நீங்க தண்ணிக்குள்ள போனதுல இருந்து ஏதோ யோசனையிலேயே இருக்கா. நீங்க என்னடான்னா, இந்த ஓலைச்சுவடியைப் பார்த்துட்டுச் சிலை மாதிரி நிக்கிறீங்க! இந்த இளமாறன் வேற புதுசு புதுசா பெயரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கார்!” என்றவனது குரலில் குழப்பம் மட்டுமல்லாமல், தனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதா என்ற சந்தேகமும் தெரிந்தது.
முகில்வர்மன் அவனைப் பார்த்தான்.
அவ்வளவு நேரமாக யாழ்வேந்தனின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்றியது. ஆனால், அந்தப் புன்னகைக்குப் பின்னால் அவன் மனத்தில் எழுந்திருந்த உணர்வுகள் இன்னும் அடங்கவில்லை.
அவனுக்கு முன்னால் நின்றிருந்த சுனையாழியை மீண்டும் பார்த்தான்.
காந்தள்மங்கை!
அந்தப் பெயர் அவனுடைய மனத்திற்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
எத்தனையோ காலங்கள் கடந்திருந்தாலும், அவளுடைய முகத்தில் இருந்த அந்தப் பழக்கமான புன்னகையை அவனால் மறக்க முடியவில்லை. ஒருகாலத்தில் தன் கண் முன்னால் வாழ்ந்தவள், இன்று வேறொரு பெயருடன் தன் முன்னால் நிற்கிறாள்.
அவள் சுனையாழி.
அதே நேரத்தில், அவள் அவனுடைய காந்தள்மங்கையும் கூட.
அந்த உண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவே அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன.
“முகில் சார்!”
யாழ்வேந்தனின் அழைப்பு அவனை நிகழ்காலத்திற்குத் திரும்பச் செய்தது.
“என்ன?”
“என்னன்னா என்ன? நான் இவ்வளவு நேரமா புலம்போ புலம்புன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா என் பேச்சைக் காதுல வாங்கின மாதிரியே தெரியல!” என்றான்.
“கேட்டேன், யாழ்வேந்தன்!” என்றான் முகில் வெகு அமைதியாக.
“கேட்டுச்சு இல்ல? அப்போ, உங்களுக்கெல்லாம் என்னதான் ஆச்சுன்னு நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க!” என்றான் யாழ்வேந்தன்.
முகில் அவன் முகத்தையே பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
என்ன நடந்திருக்கிறது, எதனால் நடந்தது என்பதை அவனே இன்னும் முழுமையாகச் சொல்லிப் புரியவைக்க முடியாத நிலையில்தான் இருந்தான்.
“நான் சொல்லுவேன். ஆனா, நீங்க நம்ப மாட்டீங்க!” என்று வெகு இயல்பாகச் சொன்னபடி முகில்வர்மன் சுனையாழியின் பக்கம் திரும்பினான்.
அவள் இன்னும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய கண்களில் கண்ணீர் மெல்லத் திரண்டிருந்தது. உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. ஆனால், அவற்றிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை.
அவளைப் பார்த்த முகிலின் மனம் கனத்தது.
தன்னுடைய நினைவுகள் திரும்பியதும், அவனால் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஓரளவுக்குப் பிரித்துப் பார்க்க முடிந்தது. ஆனால், அவளுக்கு முன்னால் நிற்பது வெறும் கடந்த காலத்தின் நினைவு மட்டுமல்லவே!
அவள் மீண்டும் கண்டடைந்தது, உயிராக நினைத்த ஓர் உறவை.
இழந்துவிட்டதாக எண்ணிய ஒரு பந்தத்தை.
தன் கண் முன்னால் மீண்டும் உயிருடன் நிற்கும் ஒரு முகத்தை.
அந்த உணர்வுகளுக்கு முன்னால் வார்த்தைகள் தோற்றுப்போவது இயல்புதானே!
முகில் அவளை எதுவும் பேசச் சொல்லவில்லை.
அவள் தன்னுடைய உணர்வுகளைச் சமாளிக்கச் சிறிது நேரம் அவகாசம் கொடுத்தான்.
யாழ்வேந்தன் இருவரையும் பார்த்துவிட்டு மீண்டும் புலம்பத் தொடங்கினான்.
“நீங்க முதல்ல சொல்லுங்க. நான் நம்புறேனா இல்லையான்னு அப்புறம் தெரியும்!” என்றான்.
‘நீங்க நம்ப மாட்டீங்க’ என்று சொல்லிவிட்டு, அவனது தங்கையின் முகத்தையே பார்த்தபடி நின்ற முகில்வர்மனின் குறுக்கே வந்து நின்றான்.
“யாழ்வேந்தன்... என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா?” என்றான் முகில்.
“இதுல என்ன சின்னப்பிள்ளைத்தனத்தைக் கண்டீங்க, சார்?” என்று வேகமான குரலில் கேட்டான் யாழ்வேந்தன்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க, டாக்டரே! நான் சொல்றதை உங்களுக்கு நம்புற மாதிரி சொல்றேன்!” என்றவன், இளமாறனிடம் திரும்பினான்.
அவ்வளவு நேரமும் இவர்களின் பேச்சில் தலையிடாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தவனைப் பார்த்து, அருகில் வரும்படி சைகை செய்தான்.
இரண்டே எட்டில் அவனை நெருங்கியிருந்தான் மாறன்.
அருகில் வந்தவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்த முகில்வர்மன், அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி,
“எத்தனை ஜென்மங்கள் கடந்திருக்கும், நண்பா, உன்னைப் பார்த்து!” என்றான்.
“இளவரசே...” என்றவனது குரல் உடைந்திருந்தது.
அவனுடைய கண்களிலிருந்து வழிந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் முகில்வர்மனின் தோளில் விழுந்தன.
“ஏன், மாறன் அண்ணனிடம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்ற? அதுவும், தனியா அவரோட எங்கேயும் போகாதீங்கன்னு அத்தனை அழுத்தமாச் சொன்ன?” என்று அதே மெல்லிய குரலில் கேட்டான் முகில்.
“இளவரசே...” என்று அவன் தொடங்கும்போதே,
“இப்ப நாம எந்தக் காலத்துல இருக்கோம்னு உனக்கு மறந்துபோச்சா? சும்மா பேரைச் சொல்லியே கூப்பிடு!” என்றான் முகில்.
அவனை இடைமறித்த இளமாறன்,
“அது முடியாது. முகில் சார்னு வேணா கூப்பிடுறேன்!” என்றான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், பின்னர் முகிலின் கண்களை உறுதியாகப் பார்த்தபடி,
“உங்களோட இறப்புக்குக் காரணம் உங்க அண்ணன்தான். ஆனா, அது எப்படி, எங்கே நிகழ்ந்ததுன்னு நீங்கதான் சொல்லணும்!” என்றான்.
“ஓ!” என்ற முகில், சிறிது நேரம் யோசித்துவிட்டு,
“இன்னும் முழுமையா ஞாபகம் வரல, மாறன். இங்க நடந்த சில விஷயங்களும் காந்தளும் மட்டும்தான் ஞாபகம் வந்திருக்கு. அண்ணனுக்கு அரசப் பதவி உறுதியானதும், என்னோட மருத்துவக் குறிப்புகளுக்காகச் சில மூலிகைகளைத் தேடி நாம இங்கே வந்தது மட்டும் தெளிவா நினைவுக்கு வருது!” என்றான்.
அவனுடைய பார்வை சுனையாழியைத் தொட்டது.
இப்போதும் அவளுடைய பார்வை முகிலின் மீதுதான் இருந்தது.
அவளுடைய நினைவுகளில் மறைந்திருந்த காட்சிகள் ஒவ்வொன்றாகத் தெளிவடைந்திருந்தன.
வேள்வியாளனின் முகம்.
அவனுடைய குரல்.
அவளிடம் பேசும்போது அவன் கண்களில் தோன்றிய மென்மை.
அவள் வருவதற்காகக் காத்திருந்த அந்தப் பார்வை.
எல்லாமே அவளுக்கு நினைவுக்கு வந்திருந்தன.
ஆனால், இத்தனை காலம் கடந்த பிறகு அவனை மீண்டும் கண்ட அந்தத் தருணத்தை அவளால் எப்படி வார்த்தைகளில் சொல்ல முடியும்?
ஒருகாலத்தில் தன் அருகில் நின்றவன்தான் இப்போது தன் முன்னால் நிற்கிறான் என்பதை அவளுடைய மனம் ஏற்றுக்கொண்டிருந்தது.
ஆனால், அவளுடைய இதயம் அந்த உண்மையை இன்னும் முழுமையாக உள்வாங்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.
கண்களில் திரண்ட கண்ணீர் கன்னத்தில் இறங்குவதற்குத் தயாராக நின்றது.
அப்போதுதான் அவளைத் திரும்பிப் பார்த்த முகில்வர்மன், அவளுடைய கண்களில் தேங்கி நின்ற கண்ணீரைக் கண்டதும் ஒரு அடி முன்னால் வந்தான்.
“சுனையாழி…”
அவன் மெதுவாக அழைத்தான்.
அந்தக் குரல் அவளுக்குள் எத்தனையோ நினைவுகளை மீண்டும் எழுப்பியது.
அவளுடைய உதடுகள் மெல்ல அசைந்தன.
“வேள்…”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
முகிலின் கண்களும் கலங்கின.
அவளைப் பார்த்தபடியே ஒரு நொடி நின்றவன், அவள் சொல்ல வந்தது என்னவென்பதைப் புரிந்துகொண்டான்.
அந்த ஒற்றைச் சொல்லுக்குள் அவள் மறைத்திருந்த ஏக்கம், அன்பு, வலி என அனைத்தையும் அவனால் உணர முடிந்தது.
“காந்தள்…”
அவன் மெல்ல உச்சரித்தான்.
அந்தப் பெயரைக் கேட்டதும் சுனையாழியின் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னங்களைக் கடந்து வழிந்தோடியது.
அவள் தன் தலையை மெதுவாக மேலும் கீழுமாக அசைத்தாள். கண்களில் கண்ணீரும் உதடுகளில் புன்னகையுமாகத் தன் ஒப்புதலைத் தெரிவித்தாள்.
அவள்தான் காந்தள்மங்கை.
அவன்தான் வேள்வியாளன்.
காலம் அவர்களைப் பிரித்திருந்தது. நினைவுகள் அவர்களை விட்டு விலகியிருந்தன. ஆனால், இப்போது அந்த நினைவுகள் மீண்டும் அவர்களை ஒன்றாகச் சந்திக்க வைத்திருந்தன.
யாழ்வேந்தன் அவர்களுடைய முகங்களைப் பார்த்தான்.
அவனுடைய முகத்தில் இருந்த குழப்பம் இன்னும் அதிகமானது.
“ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்!” என்று சொல்லியபடி இருவருக்கும் நடுவில் தடாலடியாக வந்து நின்றான்.
“இப்போ நீங்க ஒருத்தரை ஒருத்தர் வேற வேற பெயர் சொல்லிக் கூப்பிடுறீங்க. அது என்ன பெயர்? காந்தள், வேள்… இது யாரோட பெயர்?”
முகில் அவனைப் பார்த்தான்.
இப்போது யாழ்வேந்தனின் கேள்விக்கு ஓரளவுக்காவது பதிலளிக்க முடியும் என்று தோன்றியது.
“யாழ்வேந்தன், சில விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்போது நமக்கே அதற்கான காரணம் புரியாது. சில நேரங்களில், அதற்கான விடை கிடைக்கிறதுக்கு ரொம்பக் காலம் ஆகும்.”
“குழப்பாம நேரா விஷயத்தைச் சொல்லுங்க!” என்றான் யாழ்வேந்தன்.
அவனைப் பார்த்த முகிலின் உதடுகளில் சிறிய புன்னகை தோன்றியது.
சற்றுத் தொலைவில் நின்றிருந்த வசீகரன் அவர்களுடைய உரையாடலை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.
முகிலின் நினைவுகள் திரும்பியிருப்பதை அவன் அறிந்திருந்தான். சுனையாழியின் கண்களில் தெரிந்த உணர்வுகளும் அவளுக்குள் மறைந்திருந்த நினைவுகள் மீண்டுவிட்டதை உணர்த்தின.
இளமாறனுக்கும் நினைவுகள் திரும்பியிருக்க வேண்டும் என்று நம்பினான்.
ஆனால், இப்போது அவன் அவர்களிடம் எதையும் கேட்கவில்லை.
தன்னுடைய நினைவுகளைப் பற்றிக் கூறி, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை.
அதே நேரத்தில், இவர்களைப் பார்த்தபடி மறைவாக நின்றிருந்த தீரனின் முகம் கோபத்தில் சிவந்தது.
முகிலும் சுனையாழியும் மீண்டும் அருகருகே நின்றிருப்பதைப் பார்த்ததும் அவனுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.
அதைக் காட்டிக்கொள்ளாமல் மறைவிலேயே நின்றான்.
வசீகரன் தன் பையில் இருந்த வரைபடத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தான்.
‘இந்த முறை நிச்சயம் உன்னைக் கண்டுபிடித்துவிடுவேன்!’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
“நாம இங்கேயே இருந்தா இருட்டிடும். இங்கேயே இரவு தங்குறதா இருந்தா பாதுகாப்பான இடத்தைத் தேடணும். இல்லன்னா, இருட்டுறதுக்குள்ள கீழே இறங்கிடணும்!” என்றான் வசீகரன்.
அவ்வளவு நேரமாக நிலவியிருந்த மௌனத்தைக் கலைத்தது அவனுடைய குரல்.
அவனுடைய குரல் கேட்டதும் முகில் அவனைப் பார்த்தான்.
பின்னர் தன் கையிலிருந்த ஓலைச்சுவடியைப் பார்த்தான்.
அதில் இருந்த குறிப்புகள் அவனுடையவை. அந்த ஓலைச்சுவடியை வெறுத்தவளின் கையில் இப்போது அது பத்திரமாக இருப்பதை நினைத்தவன் மெல்லச் சிரித்தான்.
கடந்த காலம் அவனுக்கு நினைவுக்கு வந்திருந்தாலும், அந்தக் கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் இன்னும் அவனுக்குத் தெரியவில்லை.
அவன் சுனையாழியைப் பார்த்துவிட்டு வசீகரனிடம் திரும்பினான்.
“வசீகரன் சார், இங்கேயே தங்கலாம். பாதுகாப்பான இடத்தைத் தேடுவோம்!” என்றான்.
பின்னர் யாழ்வேந்தனைப் பார்த்து,
“டாக்டர் சார், வாங்க. மெல்ல இங்கே நடக்கிறதை உங்களுக்குச் சொல்றேன்!” என்றபடி அவனுடைய தோளில் கைபோட்டு நடக்கத் தொடங்கினான்.
சுனையாழியும் இளமாறனும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் வசீகரனும் நடந்தான். அவனுக்குப் பின்னால் அவனுடைய ஆட்களும் தொடர்ந்தார்கள்.
இவர்கள் அனைவரையும் கண்காணித்தபடி தீரனும் மெல்ல அந்தக் காட்டின் அடர்த்திக்குள் செல்லத் தொடங்கினான்.
அந்தக் காட்டுக்குள் அவர்கள் வந்ததற்கான காரணம் ஒன்றாக இருந்தாலும், இப்போது அவர்களுடைய பயணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உண்மைகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது.
அந்த உண்மைகளின் முடிவில் என்ன காத்திருக்கிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
ஆனால், அவர்கள் தேடிக்கொண்டிருந்த கடைசிச் சுவடு இனி அவர்களிடமிருந்து வெகுதொலைவில் இல்லை.
தொடரும்…