அத்தியாயம் – 42
எதிர்பாராத திருப்பம்!
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தீரன், அங்கே காத்திருந்த ஒரு டாக்ஸியை நிறுத்தினான்.
“திருநெல்வேலி பக்கம் போகணும்.”
ஓட்டுநர் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, “ஓகே சார். இவ்வளவு அமௌன்ட் ஆகும். பரவாயில்லையா?” என்று கேட்டான்.
“நோ ப்ராப்ளம்!” என்றபடி காரில் ஏறி அமர்ந்த தீரனிடம், ஓட்டுநர் சரியான முகவரியைக் கேட்டான்.
தீரன், வசீகரன் அனுப்பியிருந்த இடத்தைத் தனது கைப்பேசியில் பார்த்துவிட்டு, அதை ஓட்டுநரிடம் காட்டினான்.
“இந்த லொகேஷனுக்கு.”
ஓட்டுநர் அந்த இடத்தைப் பார்த்ததும் சற்றுத் தயங்கினான்.
“சார்... இது காட்டுப் பகுதியா இருக்கே! நீங்க காட்டுக்குப் போறீங்களா?”
“காடுனு தெரியும். அங்கதான் போகணும்!” என்றான் தீரன், பொறுமையாக.
“அங்க என்ன வேலை?” என்று ஓட்டுநர் கேட்டான். அவனுடைய குரலில் அந்த இடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது.
“ட்ரெக்கிங்!” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் தீரன்.
“தனியாவா ட்ரெக்கிங் போறீங்க?”
“ஆமா!”
“நானும் உங்களோட வரட்டுமா, சார்? இந்தப் பக்கம் எனக்கும் நல்லாத் தெரியும்!” என்று கேட்டான் ஓட்டுநர், காரை ஓட்டியபடியே.
தீரன் திரும்பி, சிறிது நேரம் அவனைப் பார்த்தான்.
“வேண்டாம். நான் தனியாவே போய்க்கிறேன்.”
“ஓகே சார்!” என்றுவிட்டுக் காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினான் ஓட்டுநர்.
கார் சீரான வேகத்தில் காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
தீரன் கைப்பேசியை எடுத்தான்.
வசீகரனிடமிருந்து வந்திருந்த அந்தச் செய்தியை மீண்டும் திறந்து பார்த்தான்.
“நான் காட்டுக்குள்ள இருக்கேன். நீயும் கிளம்பு.”
அதைப் பார்த்ததும் அவனுக்கு அப்பாவின் குரல் நினைவுக்கு வந்தது.
“வசீகரா... பாதுகாப்பு தொடர்பான பெயரைப் போல ஒரு பெயர் கொண்ட ஒருத்தனால் உனக்கு ஆபத்து வரலாம்.”
அப்போது அருகில் நின்றிருந்த தீரனும் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்தான்.
அதற்குப் பிறகு என்ன பேசினார்கள் என்பதெல்லாம் இப்போது அவனுக்கு முழுமையாக நினைவில் இல்லை.
ஆனால்...
“அதுவும் அந்தப் பெயர் தமிழ்ப் பெயர்...”
என்று அப்பா சொன்னது மட்டும் அவனுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
என்னதான் நடந்துட்டு இருக்கு அண்ணனோட வாழ்க்கையில?
என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.
எதுக்காக அப்பா அப்படிச் சொன்னாரு?
அவனுடைய மனதில் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன.
கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.
அதே நேரத்தில்...
காட்டுக்குள் மதனும் அவனுடன் வந்திருந்த நான்கு பேரும், வசீகரன் அனுப்பியிருந்த இடத்தை அடைந்திருந்தனர்.
மதன் கைப்பேசியை எடுத்தான்.
“சார்... நாங்க காட்டுக்குள்ள வந்துட்டோம்.”
என்று ஒரு செய்தியை அனுப்பினான்.
சில நொடிகளில் வசீகரனிடமிருந்து பதில் வந்தது.
“என்னைத் தேடி வராதீங்க. நான் சொல்ற இடத்துல அப்படியே இருங்க.”
மதன் அந்தச் செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தான்.
அடுத்த செய்தியும் வந்தது.
“நான் உங்களைப் பார்த்த மாதிரி காட்டிக்காதீங்க. நீங்களும் மற்றவர்கள் கண் பார்வையில் படக்கூடாது.”
அதன்பிறகு, கூடுதலாக ஒரு செய்தி வந்தது.
“முக்கியமா... இங்க இருக்கிற யாருக்கும் உங்களால எந்தவிதமான ஆபத்தும் வரக்கூடாது. அதுல ரொம்பக் கவனமா இருங்க.”
மதன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு,
“சரிங்க, சார்!”
என்று பதிலளித்துவிட்டுத் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டான்.
அவர்களின் பார்வைக்கு மற்றவர்கள் தென்படாத வகையில் மறைந்துகொள்ளும் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அதே நேரத்தில், அங்கிருந்தவர்களின் நடமாட்டத்தைத் தங்களால் கவனிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டான்.
அவர்கள் அங்கேயே அமைதியாகக் காத்திருக்கத் தொடங்கினர்.
சில நேரம் கழித்து...
காட்டின் மற்றொரு பாதையில் தீரன் வந்து சேர்ந்தான்.
கைப்பேசியில் வசீகரன் அனுப்பியிருந்த இடத்தை மீண்டும் பார்த்துக்கொண்டவன், சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் செலுத்திவிட்டு உள்ளே நடந்தான்.
சில அடிகள் சென்றதும் கைப்பேசியை எடுத்தான்.
வசீகரனுக்கு அழைக்கவில்லை.
செய்தி மட்டும் தட்டச்சு செய்தான்.
“அண்ணா... நான் வந்துட்டேன். நீ அனுப்பிய லொகேஷன்ல இருக்கேன்.”
சில நொடிகளில் பதில் வந்தது.
“சரி. அங்கேயே இரு.”
தீரன் சுற்றிலும் தன் கூர்மையான பார்வையைச் செலுத்தி ஆராய்ந்தான்.
தொலைவில் சில ஆட்கள் நிற்பது தெரிந்தது.
அவர்களைப் பார்த்தபடியே வசீகரனுக்குச் செய்தி அனுப்பினான்.
“இங்க இன்னும் சில பேர் இருக்காங்க. உங்களுக்குத் தெரியுமா?”
வசீகரனிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது.
“ஆமா. எனக்குத் தெரியும். நான் வரச் சொன்ன மதனும் அவனோட ஆட்களும்தான் அவங்க.”
சிறிது நேரம் கழித்து இன்னொரு செய்தி வந்தது.
“அவங்களை நீ பார்த்த மாதிரி காட்டிக்காத. நீ தனியா இரு. கூடவே கவனமாவும் இரு.”
தீரனும் மறுபேச்சின்றி,
“சரி, அண்ணா!”
என்று பதிலளித்தான்.
அதன்பிறகு, வசீகரன் மதனுக்கு வேறொரு இடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கேயே இருக்கும்படி செய்தி அனுப்பினான்.
“இங்கேயே இருங்க. நான் சொல்லாம என்னைப் பின்தொடர்ந்து வராதீங்க.”
அதோடு நிற்காமல், மீண்டும் ஒரு செய்தியை அனுப்பினான்.
“என்னோட கண் பார்வைக்கும், இங்க இருக்கிறவங்க கண் பார்வைக்கும் நீங்க தெரியக்கூடாது. அதே நேரம், இங்க இருக்கிற யாருக்கும் உங்களால எந்த ஆபத்தும் வரக்கூடாது.”
மதனும் உடனடியாகப் பதிலளித்தான்.
“புரிஞ்சுதுங்க, சார்!”
வசீகரன் சொன்னபடியே, மதனும் அவனுடன் வந்தவர்களும் தங்களுடைய இருப்பை மற்றவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு காத்திருந்தனர்.
அதே நேரத்தில்...
அருவிக்கரையில் இருந்த ஒரு கற்பாறையின் மீது படுத்திருந்த முகில்வர்மனும் இளமாறனும் தூங்குவதுபோலத் தெரிந்தாலும், தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இளமாறன் இன்னும் பதற்றத்துடன்தான் இருந்தான்.
“முகில் சார்... இன்னும் இந்தக் காட்டுக்குள்ளேயே இருக்கணுமா? இப்பவே கிளம்பினா நாம காட்டைவிட்டு வெளியேறிடலாம்!” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்த முகில்வர்மன் புருவத்தை உயர்த்தினான்.
“என்ன, மாறன்! விளையாடுறீங்களா? இந்த முறை நான் இங்கே இரவு தங்குறதுக்காகத்தான் வந்திருக்கேன். உங்களையும் நம்ம டாக்டர் ரெண்டு பேரையும் திரும்ப அனுப்பிட்டு, இங்கே நைட் ஸ்டே பண்ணலாம்னு முடிவு பண்ணித்தான் எனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்க என்னன்னா, இப்பவே கிளம்பச் சொல்றீங்க!”
என்றவன், இளமாறனைப் பார்த்தபடியே மீண்டும் படுத்துக்கொண்டான்.
“இங்கே என்ன நடந்துட்டு இருக்குன்னு சில விஷயங்கள் இன்னும் உங்களுக்குப் புரியல!” என்றான் இளமாறன்.
முகில்வர்மன் புரியாமல் அவனைப் பார்த்தான்.
“என்ன விஷயம்?”
“இப்போ நான் சொன்னாலும் உங்களால அதை ஏத்துக்க முடியாது. நீங்களே இப்போ ஏதாவது கொஞ்சமாவது உணர்ந்திருப்பீங்க. இந்த இடம் உங்களுக்குள்ள ஏதோ பழைய ஞாபகங்களைத் தூண்டிவிட்டிருக்கும். ஆனா, அதை இன்னும் நீங்க வெளிப்படையாச் சொல்லலை.”
என்று கூறியவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு, அவனுடைய குரல் சற்றுத் தீவிரமானது.
“இந்த இடம் உங்களுக்கு ஆபத்தானது. குறைந்தபட்சம் இப்போதைக்கு!”
“என்ன, மாறன்? புரியும்படி சொல்லுங்க!”
“நீங்களே தெரிஞ்சுக்கணும்.”
முகில்வர்மன் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இளமாறன் மீண்டும் தொடர்ந்தான்.
“நான் சொல்ற வார்த்தைகள்லயும் கொஞ்சம் கவனம் வையுங்க.”
முகில்வர்மன் சரி என்பதுபோலத் தலையை மட்டும் அசைத்தான்.
“வசீகரன் சார்கிட்ட ரொம்ப நெருங்கிப் பழகாதீங்க.”
முகில்வர்மனின் புருவங்கள் சுருங்கின.
“ஏன்?”
“உங்களுக்கே பின்னாடித் தெரியவரும். இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு, நீங்க அவர்கிட்ட நெருங்கிப் பழகக்கூடாது. அவரோட தனியாவும் எங்கேயும் போகக்கூடாது.”
“மாறன்...”
“ம்?”
“உனக்கு என்ன தெரியும்?”
இளமாறன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. முகில்வர்மனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரம் காத்திருங்க.”
அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டான்.
அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் நின்றிருந்த வசீகரன், இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தான்.
அப்போது...
அருவியை ஒட்டி மெதுவாக நடந்துகொண்டிருந்த சுனையாழியின் பார்வை திடீரென்று நீரின் மீது விழுந்தது.
அவள் அப்படியே நின்றுவிட்டாள்.
அவளுடைய கண்களுக்கு முன்னால் தெரிந்தது அதே அருவிதான்.
ஆனால்...
அந்தக் காட்சியில் அவள் மட்டும் இல்லை.
முகில்வர்மனின் தோளில் தலைசாய்த்தபடி அவள் நின்றிருந்தாள்.
அந்தக் காட்சியைக் கண்ட மாத்திரத்தில் அவளுடைய கண்கள் மெதுவாக விரிந்தன.
அவளுடைய மனதுக்குள் ஒரு பெயர் ஒலித்தது.
“வேள்வியாளன்...”
அடுத்த கணமே, அவளுடைய உதடுகள் மெதுவாக அசைந்தன.
“காந்தள்மங்கை...”
அவளுக்கே தெரியாமல் அந்தப் பெயர் உதடுகளிலிருந்து வெளியேறியது.
“நான்...”
அவள் தடுமாறியபடி தன் நெற்றியைப் பிடித்துக்கொண்டாள்.
காந்தள்மங்கை!
அந்தப் பெயர் அவளுடைய மனதுக்குள் மீண்டும் ஒலித்தது.
அவளுடைய கண்களுக்கு முன்னால் காட்சிகள் மாறின.
அவன்...
அவள்...
அவர்களுக்குள் இருந்த அந்தப் பார்வை...
அந்தக் காதல்...
அந்தக் காட்டுப் பாதைகள்...
அவனைத் தேடி அவள் சென்ற தருணங்கள்...
அவளுக்காக அவன் காத்திருந்த தருணங்கள்...
ஒவ்வொன்றாக நினைவுகள் அவளுக்குள் எழத் தொடங்கின.
மங்கலாக...
தெளிவற்ற உருவங்களாக...
ஆனால், மறுக்க முடியாத உண்மைகளாக...
அவளுடைய மனதுக்குள் அந்தப் பழைய நினைவுகள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கின.
அவள் தடுமாறியபடி ஓர் அடி பின்னால் நகர்ந்தாள்.
அதே நேரத்தில்...
எதிர்ப்புறப் பாதையில் நடந்துவந்த தீரன் திடீரென நின்றான்.
அவனுடைய பார்வை முதலில் சுனையாழியின் மீது விழுந்தது.
ஒரு கணம்...
அவன் அசையவே இல்லை.
தலையைத் தாங்கியபடி தடுமாறி நின்றிருந்த அவளைப் பார்த்ததும், தீரனுடைய நெஞ்சுக்குள் திடீரென வலி ஒன்று எழுந்தது.
அது என்ன வலி என்று அவனுக்குப் புரியவில்லை.
ஆனால், அந்த அருவி...
அந்த இடம்...
அந்தப் பெண்...
ஏதோ ஓர் ஆழமான ரகசியத்தை அவனுக்குள் திறந்துவிடுவதுபோல இருந்தது.
அவன் மூச்சே நின்றுவிட்டதைப் போல உணர்ந்தான்.
அவனுடைய கண்களுக்கு முன்னால் இருந்த அருவி, அவனுக்குள் புதைந்திருந்த ஏதோ ஒரு நினைவின் கதவைத் திறந்துகொண்டிருந்தது.
அவனுடைய உதடுகள் தானாகவே அசைந்தன.
“மங்கை...”
அந்த ஒரு வார்த்தை வெளியே வந்ததும் தீரனே அதிர்ந்துபோனான்.
“மங்கை...?”
அவன் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.
அந்தப் பெயர் அவனுக்குள் எங்கிருந்து வந்தது?
அவளைப் பார்த்ததும் ஏன் அந்தப் பெயர் தன்னையறியாமல் உதடுகளில் பிறந்தது?
அவனுக்குப் புரியவில்லை.
ஆனால், அந்தப் பெயர் மட்டும் அவனுக்குள் ஏதோ ஓர் ஆழமான உணர்வை எழுப்பிக்கொண்டிருந்தது.
தொடரும்...