அத்தியாயம் – 39
கடைசிச் சுவட்டின் தொடக்கம்!
அருவிக்கரையிலிருந்த அந்தப் பழமையான பெருமரத்தின் அடர்ந்த நிழலில், உண்டு முடித்ததும், அவ்வளவு நேரம் நீரில் நின்ற களைப்பும், காட்டின் ஈரக் காற்றும் இளமாறனைத் தழுவ, அந்த அடர்ந்த காட்டின் அமைதியும், பாறைகளில் மோதி வழியும் நீரின் குளிர்ச்சியும் அவனது உடலை மெல்லத் தளர்வடையச் செய்தன.
இளமாறன் அந்தப் பழமையான மரத்தின் தடித்த வேரின் மீது தலைசாய்த்து, தன்னை மறந்து மெல்லக் கண்களை மூடினான்.
அவனுடைய இமைகள் ஒன்றுடனொன்று கூடிய அடுத்த நொடி...
அவனது நெற்றியின் மையப் பகுதியில், மெல்லிய ஊசி குத்துவது போன்ற கூர்மையான வலி தோன்றியது.
காதை அடைக்கும் அளவுக்குப் பெருக்கெடுத்து ஓடும் அருவியின் பேரிரைச்சலும், காற்றில் கலந்து வந்த ஈர நீர்த்துளிகளின் மணமும் அவனுடைய ஆழ்மனதை நிகழ்காலத்தின் எல்லையிலிருந்து பிடுங்கியெடுத்து, ஏதோ ஒரு தொலைதூர யுகத்தின் எல்லைக்கு அதிவேகமாக இழுத்துச் சென்றன.
நிகழ்காலத்தின் எல்லைகளும் காட்சிகளும் பனிபோலக் கரைந்து மறைய...
காலம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சுழன்றது.
விடியற்காலைப் பொழுதின் அடர்ந்த பனிமூட்டம் அந்த நிலப்பரப்பெங்கும் திரையாகப் படர்ந்திருந்தது.
பனித்துளிகள் மர இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாகப் பாறைகளின் மீது வீழ்ந்துகொண்டிருந்தன.
பறவைகளின் மெல்லிய கீச்சொலிகள் மட்டுமே எழுந்த அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக்கொண்டு, கம்பீரமான புரவி ஒன்றின் வேகமான குளம்பொலி தொலைவிலிருந்து அதிவேகமாக நெருங்கி வந்துகொண்டிருந்தது.
அங்கிருந்த குடிசையின் தட்டி விலகும் மெல்லிய ஓசையுடன் வெளியே வந்த நம்பியான், தன் இமைகளைக் கசக்கிக்கொண்டு எதிரே நின்றவனை நோக்கினான்.
அங்கே, விடியற்காலையின் பனித்திரைக்கு நடுவே, தசைச் செறிவும் பளபளப்பான மேனியும் கொண்ட கம்பீரமான புரவியின் மீது வீற்றிருந்தான் இளவரசன் வேள்வியாளன்.
அவனது தோள்களில் அரச குலத்திற்குரிய பட்டாடை சரிந்திருக்க, முகத்தில் வழக்கமான அந்தப் புன்னகையும் குறும்புப் பார்வையும் மின்னின. அவனது தோற்றமே அந்த அதிகாலை வேளையில் ஒரு புதுப் பொலிவை உணர்த்தியது.
“இளவரசே...! பொழுது புலரும் முன் தங்களைக் காண்பேன் என யான் சொப்பனத்திலும் எதிர்பார்க்கவில்லையே!” என்று நம்பியான் மிகுந்த வியப்போடு வினவினான்.
வேள்வியாளன் தன் புரவியின் கடிவாளத்தைச் சற்றே தளர்த்தி, தன் முகத்தில் படர்ந்திருந்த முன்நெற்றி முடியை மெல்ல ஒதுக்கியபடி,
“மெல்லப் பேசு, நம்பியா! உனது இல்லத்தார் விழித்துக்கொண்டால் தேவையின்றி வினாக்கள் தொடுத்து நேரத்தைக் கடத்துவர். அவசியமற்ற உரையாடல்களுக்கு இது நேரமன்று. நொடியும் தாமதிக்காமல் உடனே புரவியின் பின்னே ஏறிக்கொள்!” என்றான்.
நம்பியான் புரவியின் அருகில் வந்து நின்று, ஐயமும் பதற்றமும் கலந்த பார்வையால் அவனைக் கூர்ந்து பார்த்தான்.
இளவரசனின் இந்த அதிகாலை வருகை, மறுபடியும் மன்னரிடம் திட்டு வாங்க வைக்கும் என்பது நம்பியானுக்குப் புரிந்துபோனது.
வழக்கமாக அரண்மனை விதிமுறைகளைத் தோதான நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீறுவது இளவரசரின் வாடிக்கையாகிப்போனது. இன்று இப்படித் தனியாக வந்திருப்பதும், அதுவும் இவ்வளவு அதிகாலையிலேயே வந்திருப்பதும், நிச்சயம் மன்னரிடமும் பட்டத்து அரசரிடமும் தன்னைத் திட்டு வாங்க வைக்கும் என்று நம்பியானுக்குத் தோன்றியது.
“இளவரசே... மன்னருக்கும், பட்டத்து அரசரான உமது தமையன் பெருவேளாருக்கும் நீர் இவ்வளவு அதிகாலையில் அரண்மனையை விட்டு வெளியேறி வந்தது தெரியுமா? நீர் இங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியுமா?” என்று பதற்றமாகக் கேட்டான்.
வேள்வியாளன் தன் தலையை நிமிர்த்தி, அவன் முகத்தைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டி, சற்றே உரக்க நகைத்துவிட்டு,
“நம்பியா! மன்னருக்கும் பட்டத்து அரசர் பெருவேளாருக்கும் தெரிந்திருக்குமாயின், என்னை வெளியேற அனுமதித்திருப்பார்களா என்ன?
‘அரச குலத்து இளவரசனாகிய நீ, ஏவல் செய்யும் எளிய குடிகளுடன் தோள் தழுவித் திரிவதா? வைத்தியமும் மூலிகையும் உனக்கெதற்கு?’ என்று மீண்டும் வழக்கம் போல அறவுரை பகரத் தொடங்கிவிடுவர் அல்லவா!
அவர்களின் வினாக்களுக்கு விடையளிப்பதே ஒரு பெரும் வார்த்தைப் போராகிவிடும்!” என்றான்.
“பின்னே... இந்நேரத்தில் என்னை எங்கு அழைத்துச் செல்கின்றீர்? அரண்மனையை விட்டு விலகி, விடியும் முன்னே இப்படித் தனியாகக் காட்டிற்குள் வருவதில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? பட்டத்து அரசர் அறிந்தால் என் தலையல்லவா உருளும்!” என்று அவன் புலம்பினான்.
“காலையின் புத்தொளி பரவும் வேளையில் மட்டுமே மலரும் வீரியமிக்க அபூர்வ மூலிகை ஒன்றைச் சில நாட்களுக்கு முன் யான் கண்டறிந்தேன். சூரியன் உச்சிக்கு வரும் முன் அதைச் சேகரிக்க வேண்டும். தாமதமானால் அந்த மூலிகையைக் கண்டறிவது கடினமாகிவிடும். வீணாகப் புலம்பாமல் விரைவாக என் புரவியின் பின்னே ஏறிக்கொள்!” என்றான் கட்டளைபோல்.
நம்பியான் வேறு வழியின்றித் தன் சால்வையைத் தோளில் இறுக்கிக் கொண்டு, வேள்வியாளனின் பின்னே புரவியில் ஏறி அமர்ந்துகொண்டான்.
புரவி காட்டின் அடர்ந்த பாதைகளைக் கடந்து, பனி மூடிய மரங்களின் வழியே அதிவேகமாகப் பாய்ந்து சென்றது. வழிநெடுகிலும் மரங்களின் கிளைகள் உரசியபடி செல்ல, வேள்வியாளனின் வேகம் குறையவே இல்லை.
சில கடிகைப் பொழுதுகளுக்குப் பிறகு, புரவி அடர்ந்த பாதைகளைக் கடந்து, காட்டருவியின் கரைக்கு வந்து நின்றது.
நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சலையும், பாறைகளில் மோதி நாலாப்புறமும் சிதறும் ஸ்படிக நீர்த்திவலைகளையும் கண்ட நம்பியான், சலிப்புடனும் வியப்புடனும்,
“இளவரசே! இந்த அருவிக்கரையிலா அந்த அபூர்வ மூலிகை விளைகிறது? அதிகாலையிலேயே நீராடுவதற்கு அரண்மனை அந்தப்புரக் குளங்களில் இடமில்லையென்றா இந்தக் காட்டுக்கு என்னை அழைத்துவந்தீர்?” என்று கேட்டான்.
“நம்பியா! வாய்க்கு வந்தபடி புலம்புவதை நிறுத்திவிட்டு என் பின்னே அமைதியாக வா!” என்று வேள்வியாளன் அவனது தோளைத் தட்டியபடி முன்னே நடந்தான்.
அருவியின் பெருக்கெடுத்து ஓடும் நீர்ப்பகுதியை நோக்கி வேள்வியாளன் தயங்காமல் சென்றான்.
அங்கு வழுவழுப்பான பாசி படிந்த பாறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமைந்திருந்தன.
“இப்பாதையில் பாசி அதிகம். ஓர் அடி பிசகி வழுக்கி வீழ்ந்தாலும் அருவியின் சுழலில் மூழ்கிவிடுவாய். என் அடிகளைப் பின்பற்றி கவனமாக அடியெடுத்து வை!” என்று எச்சரித்தான் வேள்வியாளன்.
வேள்வியாளன் முன்னே செல்ல, நம்பியான் மிகுந்த எச்சரிக்கையுடன் தன் பாதங்களைப் பாறைகளின் மீது அழுத்திப் பதித்துத் தொடர்ந்தான்.
நீர்வீழ்ச்சி பெருங்குரலெடுத்துக் கொட்டும் இடத்திற்கு நேராகக் கீழே, பாறைகளுக்கு நடுவே ஒரு குறுகிய மறைவுப் பாதை அமைந்திருந்தது.
அருவியின் பெருக்கெடுக்கும் நீரினூடே மறைந்திருந்த அந்த மலைக்குள், இயற்கையாக அமைந்திருந்தது போன்ற ஒரு இரகசியக் குகைப் பாதை!
நம்பியான் வியப்பின் எல்லைக்கே சென்றான்.
“இவ்வழி... நீர்வீழ்ச்சியின் பின்னே இப்படி ஒரு குகைப் பாதையா? இது எவ்வாறு சாத்தியம்?” என்றான் கண்கள் அகல விரிய.
“ஆம், நம்பியா! சில திங்களுக்கு முன்பு யான் இங்கு தனித்து உலவுகையில், ஓர் அரிதான பறவை இந்த அருவித்திரைக்குள் புகுந்து சென்று மறைவதைக் கண்டேன். அதைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்த்தபோதுதான் இந்த அருவி மறைத்து வைத்திருக்கும் பாதை புலப்பட்டது.
இம்மலையின் இப்பக்கத்திலிருந்து அப்பக்கத்திற்குச் செல்ல இதுவே குறுக்கு வழி. இதைப் பற்றி மன்னர் உட்பட யாருக்கும் தெரியாது என்பதே என் அனுமானம். உன்னிடம் மட்டுமே முதன்முறையாகக் காட்டுகிறேன்!” என்றான் வேள்வியாளன்.
அவர்கள் அந்த நீர் உமிழும் குகைப் பாதைக்குள் நுழையும்போது, இருள் சூழ்ந்த சுவர்களில் சொட்டும் நீர்த்துளிகளின் ஓசை மட்டுமே கேட்டது.
குகையின் உட்பகுதி அமைதியாகவும், ஒருவித இனிமையான நறுமணத்தோடும் விளங்கியது.
உள்ளே சற்று நடந்ததும், அந்த மலையின் பாறைச் சுவரில் முற்காலத்தில் யாரோ செதுக்கிய சிறிய கல்வெட்டுகளும், சித்த வைத்தியக் குறியீடுகளும் தென்பட்டன.
அதற்கும் மேலாக, குகையின் நடுவே இயற்கையாக உருவாகியிருந்த ஒரு சுயம்பு சிவலிங்கம் கம்பீரமாக வீற்றிருந்தது!
இவர்களுக்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த முனிவர்களோ, சித்த வைத்தியர்களோ வழிபட்டு, அந்த அபூர்வ மூலிகைகளின் மருத்துவ ரகசியங்களையும் செய்முறைகளையும் அக்கல்வெட்டுகளில் குறித்து வைத்திருந்ததை வேள்வியாளன் ஏற்கனவே ஆராய்ந்து அறிந்திருந்தான்.
அவன் அறியாமல் விட்டதும் சில இருந்தன...
என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
“நம்பியா, இச்சிவலிங்கமும் அக்கல்வெட்டுகளும் நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், அவர்களின் பொக்கிஷமும். தலைமுறை தலைமுறையாக இவை அழியாமல் இருக்கின்றன. இவற்றை நாம் சேதப்படுத்தக்கூடாது!” என்று கூறியபடி சிவலிங்கத்தை வணங்கிவிட்டு, அவனைக் கூட்டிச் சென்றான்.
குகையைக் கடந்து மலையின் மறுபக்கத்தை அடைந்தனர்.
அங்கே மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த வனப்பகுதி விரிந்திருந்தது.
அதைக் கண்ட நம்பியான், அந்த இடம் நிச்சயம் சொர்க்கமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியபடி அசையாமல் நின்றுவிட்டான்.
விடியற்காலைப் பனியில் நனைந்திருந்த அந்த வனம் பேரழகாகக் காட்சியளித்தது.
முன்னே நடந்துகொண்டிருந்த வேள்வியாளனுக்கு நம்பியானின் காலடி ஓசை எதுவும் கேட்காததால், பின்னே திரும்பிப் பார்த்தான்.
அவன் நிலையைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, அவனிடம் வந்து தோளில் தட்டினான்.
கனவுலகில் இருந்ததுபோல நின்ற நம்பியான், இமைத்துத் திடுக்கிட்டு விழித்தான்.
“இந்த வனம் பேரழகுதான், நம்பி. சில தினங்களுக்கு முன் யானும் உம்மைப் போலவே மெய்மறந்து நின்றிருந்தேன்.
இச்சமயம் அதற்கானது அன்று. இளவெயில் படும்போது மஞ்சள் வண்ணமாகத் தோன்றும் தாவரத்தைக் கண்டால் என்னை அழைக்கவும்!” என்றான்.
அவனும் அந்தத் தாவரத்தைத் தேடத் தொடங்கினான்.
சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு...
இருவரும் ஒரே நேரத்தில் அந்தத் தாவரத்தைக் கண்டுவிட்டனர்.
தேவையான அளவு மூலிகைகளைப் பறித்துக்கொண்டு, மீண்டும் அதே குகைப் பாதை வழியாக அருவிக்கரைக்கே திரும்பி வந்தனர்.
மூலிகைகளைப் பறித்த மகிழ்ச்சியிலும், நேரம் முன்பகலைத் தொட்டுக்கொண்டிருந்ததாலும், வேள்வியாளன் தன் மேலாடையைத் தளர்த்தி, அருவி நீரில் இறங்கி உற்சாகமாக நீராடத் தொடங்கினான்.
அப்போது...
கரையின் எதிர்ப்புறத்தில் குதிரையின் குளம்பொலி உரக்கக் கேட்டது!
காலையிலிருந்து அரண்மனையில் தம்பியைத் தேடிக் காணாமல் விரைந்து வந்திருந்த பட்டத்து அரசர் பெருவேள்சாத்தன், குதிரையிலிருந்து வேகமாக இறங்கி, ஆத்திரமும் கவலையும் கலந்த குரலில் கத்தினான்.
அவனது கண்களில் தம்பியின் மீதான அக்கறையும் கோபமும் ஒருசேரப் பிரதிபலித்தன.
“வேள்வியாளா! விடியற்காலையிலிருந்து உன்னைக் காணாமல் அரண்மனையே கவலை கொண்டிருக்கிறது! தந்தையாரும் கவலையில் இருக்கிறார்! உன்னுடைய இந்த மருத்துவக் கூத்துகளும், எல்லை மீறிய செயல்களும் எப்போதுதான் முடியுமோ?” என்று சத்தமாகப் பேசியபடி தம்பியைத் தேடிக்கொண்டிருந்தான் பெருவேள்சாத்தன்.
நீரிலிருந்து தலையை உயர்த்திய வேள்வியாளன், தன் அண்ணனின் கோபத்தைக் கண்டும் காணாததைப்போல, அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அந்தக் கணத்தில்...
நீரிலிருந்து கரையேறிக்கொண்டிருந்த நம்பியான் மெல்லத் திரும்பிப் பார்த்தான்.
அங்கே நின்றிருந்த பெருவேள்சாத்தனின் முகம்...
மெல்ல மெல்ல மாறி...
வசீகரனின் முகமாக அவனுக்குத் தென்பட்டது!
அந்த நொடியில்...
ஒரு பெரும் மின்னல் பாய்ந்ததுபோல, இளமாறனின் மனக்கண்ணில் காட்சிகள் அதிவேகமாகச் சுழலத் தொடங்கின!
பட்டத்து அரசராகப் பெருவேள்சாத்தன் அரியணை ஏறும் செங்கோல் விழா...
நாட்டின் எல்லைகளையும் நிலப்பகுதிகளையும் தன் தம்பி வேள்வியாளனுக்கும் பிற குறுநில மன்னர்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் அதிகாரத் தருணங்கள்...
ஆட்சி அதிகாரத்தின் மீது எழுந்த பேராசையும், தம்பி வேள்வியாளன் மக்கள் மனதில் பிடித்துக்கொண்டிருந்த இடத்தைக் கண்டு அரசவையில் வெடித்த பொறாமையும், பூசல்களும்...
இறுதியாக...
நிலப்பகுதி உரிமையையும் அரச அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளத் துடித்த அந்தப் பெருவேள்சாத்தன் செய்த கொடூரங்கள்...
என அனைத்தும் ஒரு நொடியில், குருதியை உறையவைக்கும் மின்னலென ஓடிவந்து அவனது நெஞ்சில் மோதின!
“வேள்வியாளா!”
என்று இளமாறன் தூக்கத்திலிருந்து திடீரென அலறியடித்துக்கொண்டு விழித்தெழுந்து அமர்ந்தான்!
அவனுடைய உடல் முழுவதும் பயத்திலும் அதிர்ச்சியிலும் நனைந்திருந்தது.
நெஞ்சுக்கூடு ஏறி இறங்க, மூச்சு வேகமாக வாங்கியது.
அவனது கண்கள் அகல விரிந்து, கலங்கி நின்றன.
தான் யார்...
வேள்வியாளன் யார்...
பெருவேள்சாத்தன் யார்...
காந்தள்மங்கை யார்...
அன்று அந்தக் காட்டில் நடந்தது எல்லாமே அவனது நினைவில் முழுமையாக மீண்டுவிட்டன!
அருகில் அமர்ந்திருந்த சுனையாழியும், அதிர்ச்சியோடு பார்த்த வசீகரனும் அவனைப் பதற்றத்தோடு நோக்கினர்.
இளமாறனின் கண்கள் கலங்கியிருக்க, அவன் தன் பார்வையை மெல்லத் திருப்பி, சற்றுத் தள்ளிப் பாறையின் மீது கண்மூடி அமைதியாக அமர்ந்திருந்த முகில்வர்மனின் மீது நிலைநிறுத்தினான்.
தொடரும்...