அத்தியாயம் – 36
காரணம் அறியா பந்தம்!
முகில்வர்மன் அவர்களைப் பார்த்தபடியே சில நொடிகள் அசையாமல் நின்றான்.
அவனுக்குப் புரியவில்லை.
சில நொடிகளுக்கு முன்புவரை தண்ணீருக்குள் தனியாக இருந்தபோது, அவனுக்குள் ஒரு விதமான சந்தோஷமான அமைதிதான் இருந்தது.
ஆனால்...
இப்போது தண்ணீருக்கு மேலே வந்ததும், அவனைச் சுற்றி நின்றிருந்த நால்வரின் முகங்களிலும் தெரிந்த பதட்டம் அவனையே குழப்பத்தில் ஆழ்த்தியது.
இளமாறன் அவனைப் பார்த்த விதம்...
சுனையாழியின் கண்களில் தெரிந்த கலக்கம்...
யாழ்வேந்தனின் முகத்தில் இருந்த அதிர்ச்சி...
அதையெல்லாம் விட வசீகரனின் பார்வை...
அது மட்டும் புதுவிதமாக இருந்தது.
முகில்வர்மனின் புருவங்கள் சுருங்கின.
“என்னாச்சு?” என்று அவன் மீண்டும் கேட்டான்.
அவனுடைய குரல் மிக இயல்பாக இருந்தது.
ஆனால்...
அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்ல அங்கே யாரிடமும் வார்த்தைகள் இல்லை.
சில நொடிகள் முகில்வர்மனையே பார்த்துக்கொண்டிருந்த இளமாறனின் முகத்தில் மெல்ல நிம்மதி பரவத் தொடங்கியது.
அவனை அறியாமலேயே பெருமூச்சுவிட்டபடி,
“முகில் சார்...” என்றவனுடைய குரல் சற்று உடைந்திருந்தது.
“என்ன?”
“நீங்க... ஓக்கே தானே?” என்றவனைப் பார்த்த முகில்வர்மன் மேலும் குழம்பினான்.
“நான் நல்லாத்தானே இருக்கேன்... எனக்கு என்னாச்சு, மாறன்?” என்றான்.
இளமாறன் அவனுக்கு உடனே பதில் சொல்லவில்லை.
அவன் முகில்வர்மனை தண்ணீருக்கு மேலிருந்த அவன் உருவத்தைத் தலை முதல் மார்புவரை பார்வையால் அளந்தான்.
சட்டென அவன் அருகே வந்தவன், எங்கேயாவது அடிபட்டிருக்கிறதா? காயம் ஏற்பட்டிருக்கிறதா? என்று அவனுடைய பார்வையால் அளந்த இடங்களையெல்லாம் கைகளால் பரிசோதித்தான்.
அவனுடைய தொடுகையில், முகில்வர்மன் மீனைப்போலத் துள்ளி விலகினான்.
“மாறன்... என்ன பண்ணற? நான் அவன் இல்ல...” என்றான் முகில்வர்மன் நக்கலாகச் சிரித்தபடி.
சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத அவனுடைய நக்கலான கிண்டலில் கடுப்பான வசீகரன்...
அவனுடைய முகத்தில் வழக்கமான இறுக்கம் இருந்தாலும், கண்களில் இருந்த பதட்டத்தை மறைக்க முயலவில்லை.
“இப்ப இந்த நக்கலான கிண்டல் அவசியம்தானா, முகில்?” என்றான்.
வசீகரனின் குரலில் கோபம் இல்லை.
ஆனால்...
ஒருவிதமான நடுக்கம் இழையோட, அவன் முகில்வர்மனைப் பார்த்தபடி,
“கிட்டத்தட்ட இருபது நிமிஷமா உன்னைத் தேடிட்டு இருக்கோம்” என்றான்.
வெகு இயல்பாக அவன் ஒருமைக்கு மாறியிருந்தான்.
அதை அவனே அறியவில்லை.
முகில்வர்மனும் அதை கவனிக்காமல் வசீகரனை கேள்வியாகப் பார்த்தான்.
“இருபது நிமிஷமாவா?” என்றான்.
“ஆமாம்.”
என்றபடி இப்போது அவன் அருகே வந்திருந்தான் யாழ்வேந்தன்.
அவனோடு சுனையாழியும் முகில்வர்மனின் அருகே வந்தாள்.
அவள் எதுவும் பேசவில்லை.
அவளுடைய கண்கள் மட்டும் முகில்வர்மனை முழுவதுமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.
அந்தக் கண்களில்...
பயம் இருந்தது.
அதற்குள் ஏக்கமும் கலந்திருந்தது.
முகில்வர்மன் அவளைப் பார்த்ததும், அவளுடைய பார்வை இன்னும் ஆழமானதாக மாறியது.
அவனும் தன்னை மறந்து சில நொடிகள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுடைய கண்களில் தன்னைக் காணும்போது...
அவனுக்குள் ஏதோ ஒன்று மெல்ல மலரத் துடித்தது.
அதை உணராமலேயே,
“டாக்டர்...” என்றான் அவன் மெதுவாக.
சுனையாழி பதில் சொல்லவில்லை.
அவள் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று, அவன் அறியாமலேயே அவளுடைய பார்வைக்குப் பதில் சொன்னான்.
அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.
“ம்...”
அவளுடைய குரல் மிக மெலிதாக இருந்தது.
அதே நேரத்தில், யாழ்வேந்தன் வேகமாக மூச்சை வெளியேற்றிக்கொண்டிருக்க, முகில்வர்மன் அவனைப் பார்த்தபடி,
“டாக்டர் சாருக்கு எதுக்கு இப்படி மூச்சு வாங்குது?” என்றான் மீண்டும், வெகு இயல்பாக.
யாழ்வேந்தன் தண்ணீருக்குள்ளும் வெளியேயும் நீண்ட நேரம் தேடியதால், அவனுடைய மூச்சு சற்று வேகமாக இருந்தது.
“ஏன் கிண்டல் பண்ண மாட்டீங்க? இப்பதானே சொன்னோம்... உங்களை கிட்டத்தட்ட இருபது, இருபத்தைஞ்சு நிமிஷமா இந்தக் கொற்ற அருவித் தண்ணீருக்குள்ள தேடிட்டு இருக்கோம்” என்றான் சற்றுக் கோபமான குரலில்.
அந்தக் குரல் இளமாறனைப் பாதித்தது.
“யாழ்வேந்தன்... அவர்கிட்ட அப்படி பேசாதீங்க” என்றான்.
“மாறன், சும்மா இரு.”
என்று அவனைத் தடுத்த முகில்வர்மன்,
“டாக்டர் சார்... நிஜமாவே நான் தண்ணிக்குள்ள அவ்வளவு நேரம் இருந்தேனா?” என்று மாறனிடம் ஆரம்பித்து, யாழ்வேந்தனிடம் முடித்தான்.
யாழ்வேந்தன் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான்.
“இருபது நிமிஷமாவா?”
“ஆமாம்... டாக்டர் சொல்றது நிஜம்” என்றான் இப்போது வசீகரன்.
முகில்வர்மன் சில நொடிகள் எதுவும் சொல்லவில்லை.
அவன் தன்னுடைய நினைவுகளைத் திரும்பிப் பார்த்தான்.
தண்ணீருக்குள் சென்றது...
நீரின் ஓட்டம்...
அந்தப் பாறை...
அந்த அமைதி...
அந்தப் பெண்ணின் உருவம்...
“எனக்கு... அவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள இருந்த மாதிரியே தெரியல” என்று மெதுவாகச் சொன்னான்.
இப்போது நால்வரின் பார்வையும் அவன் மீது நிலைத்தது.
“எனக்கு அஞ்சு நிமிஷம்தான் ஆன மாதிரி இருந்தது” என்றவனை அதிர்ந்து பார்த்தனர்.
“அஞ்சு நிமிஷமா?” என்று இளமாறன் அதிர்ச்சியோடு கேட்டான்.
“ஆமா.”
என்றபடி முகில்வர்மன் தண்ணீரை நோக்கிப் பார்த்தான்.
“நான் தண்ணி போற போக்குல போயிட்டிருந்தேன். கொஞ்சம் ஆழமா இருந்துச்சு. அங்கே நீரோட்டம் வேற மாதிரி இருந்தது...”
அவன் சற்று யோசித்தான்.
“நேரத்தையே கவனிக்கல.”
பிறகு அனைவரையும் பார்த்தான்.
“இருபது நிமிஷம் ஆகிடுச்சுன்னு எனக்குத் தெரியவே இல்ல.”
அங்கே சில நொடிகள் அமைதி நிலவியது.
“சாரி.”
முகில்வர்மன் மெதுவாகச் சொன்னான்.
“நான் கவனிக்காம உங்களை எல்லாம் இவ்வளவு பதட்டப்படுத்திட்டேன். அது என்னோட தப்புதான்.”
இளமாறன் உடனே,
“அதெல்லாம் பரவாயில்லை சார். நீங்க நல்லா வந்துட்டீங்களே... அதுவே போதும்” என்றான்.
முகில்வர்மன் அவனைப் பார்த்தான்.
அவனுடைய முகத்தில் மீண்டும் அந்த அக்கறை.
அந்த அக்கறை...
ஏன் இவ்வளவு நெருக்கமாகத் தோன்றுகிறது?
அவன் மனதில் கேள்வி எழுந்தது.
அதே நேரத்தில், யாழ்வேந்தன் இன்னும் முகில்வர்மனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆனா... இருபது நிமிஷம் மூச்சை அடக்கி தண்ணிக்குள்ள இருந்தது சாதாரண விஷயம் இல்ல, தெரியுமா?” என்றான்.
முகில்வர்மன் சத்தமாகச் சிரித்தான்.
“அதெல்லாம் எனக்குப் பழக்கம்தான், யாழ்.”
அவனைப் பார்த்து,
“எது? இப்படி தண்ணீருக்குள்ள மூச்சை அடக்குவதா?” என்றான் யாழ்வேந்தன்.
“மூச்சுப் பயிற்சி.”
“அதுக்காக இருபது நிமிஷமா?”
“இல்ல...”
முகில்வர்மன் சற்று யோசித்தான்.
“நான் இவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள இருந்ததே எனக்கு ஆச்சரியம்தான்.”
சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,
“இது... ஃபர்ஸ்ட் டைம்.”
அந்த வார்த்தைகள் வெளியே வந்த அடுத்த நொடியே—
இளமாறனின் முகம் மாறியது.
ஃபர்ஸ்ட் டைம்...
அந்த இரண்டு வார்த்தைகள் அவனுடைய காதுக்குள் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அவனுடைய பார்வை திடீரென்று முகில்வர்மனைத் தாண்டி...
அருவியின் நீருக்குள் சென்றது.
அந்த நீர்...
அந்தப் பாறைகள்...
அந்தக் காடு...
அவனுடைய நெஞ்சம் திடீரென அதிர்ந்தது.
கடைசிச் சுவடு... மெல்ல விழிக்கத் தொடங்கிவிட்டது.
தொடரும்...