அத்தியாயம் – 28
ஒன்றிணையும் புள்ளிகள்!
அந்த நெடுஞ்சாலையில் வாகனம் சீரான வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது.
சாலையின் இருபுறமும் அடர்ந்து விரிந்திருந்த பசுமையான மரங்களும், காற்றில் மிதந்து வந்த ஈரநிலத்தின் இயல்பான வாசனையும், அந்தப் பகுதியின் அமைதியை நிலைநாட்டின.
காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த யாழ்வேந்தன் அமைதியாகச் சாலையைக் கவனித்து வர, பின் இருக்கையில் அமர்ந்திருந்த சுனையாழி ஜன்னலின் வழியே வெளியே நகர்ந்து கொண்டிருந்த மரங்களைப் பார்த்தபடி வந்தாள்.
சாலையின் இருமருங்கையும் கவனித்தபடி வந்த யாழ்வேந்தன், பின்னால் திரும்பி சுனையாழியிடம் பேச்சைத் தொடங்கினான்.
“சுனை... சின்ன வயசுல நாம தாத்தாவோட இந்தப் பக்கம் வந்தப்போ இருந்த சூழலே வேற மாதிரி இருந்த ஞாபகம்? அப்போவெல்லாம் வழி நெடுகிலும் எவ்வளவோ மரங்கள் இருக்கும். இப்போ எல்லாமே மாறிருச்சு...” என்று புன்னகையோடு நினைவுபடுத்தினான்.
சுனையாழியின் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“ஆமான்டா ண்ணா... ஆனா, ஊரை நெருங்க நெருங்க அந்தப் பழைய காத்தோட வாசனை மட்டும் இன்னும் மாறாம அப்படியேதான் இருக்கு. நமக்குத்தான் வயசாயிடுச்சே தவிர, இந்த மண்ணோட அழகு குறையவே இல்லை,” என்றாள்.
“வயசாயிடுச்சா? உனக்கு மட்டும்தான் வயசாச்சு... எனக்கு இன்னும் இருபத்தி அஞ்சுதான் ஆகுது!” என்று யாழ்வேந்தன் கிண்டலாகச் சொல்ல, சுனையாழி கலகலவெனச் சிரித்தாள்.
“அது சரி! தங்கையோட வயசு இருபத்தி அஞ்சாம்... அவளோட நாலு வயசு பெரியவனான என் அண்ணனுக்கும் இப்பதான் இருபத்தி அஞ்சு ஆகுதாம்... பாரேன்... உனக்கு மட்டும் நேரம் ஃபேவர் பண்ணி, எனக்கு ஓரவஞ்சனை பண்ணறதை!” என்று அவனைக் கலாய்த்தாள்.
அண்ணனும் தங்கையுமாய் பழைய நினைவுகளையும், சிறுவயதுக் கதைகளையும் பேசிச் சிரித்தபடி வந்தனர்.
யாழ்வேந்தன் நடுநடுவே நகைச்சுவையாக ஏதேனும் சொல்ல, சுனையாழியின் சிரிப்பொலி காரின் உள்ளே நிறைந்தது.
ஆனால், நேரம் செல்லச் செல்ல, நகரை நெருங்கும் வேளையில் சுனையாழியின் பேச்சு மெல்லக் குறையத் தொடங்கியது.
யாழ்வேந்தன் ஏதோ கேட்க, அதற்குச் சுனையாழி,
“ம்ம்... ஆமாம்...” என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு அமைதியானாள்.
“என்ன சுனை... திடீர்னு அமைதியாயிட்ட?” என்றான் யாழ்வேந்தன்.
“இல்லைடா ண்ணா... மனசு ஏனோ ரிலாக்ஸா இருக்கு. இந்த முறை தாத்தாவோட தேடுதலுக்கு ஒரு முடிவு கிடைக்கும்னு எனக்குத் தோணுது...” என்றபடி சீட்டைச் சாய்த்து அமர்ந்தாள்.
காற்றில் அடர்த்தியாகக் கலந்து வீசிய விவசாய நிலங்களின் ஈர வாசனையும், காற்றில் கலந்திருந்த குளிர்ச்சியும், வாகனத்தின் மெல்லிய தாலாட்டும் அவளது உணர்வுகளை மெல்ல ஆட்கொண்டன.
அவளது விழிப்பு நிலை நழுவி, லேசாகக் கண்ணயர்ந்தாள்.
---
உயர்ந்து நின்ற கம்பீரமான மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் ஓர் மேடான பகுதியில் மலர்ந்திருந்த வண்ண வண்ண மலர்களின் நறுமணம் மனதை ஆட்கொள்ளும் வகையில் வீசிக் கொண்டிருந்தது.
அந்த மேடான பகுதியில் ஒருபுறமாக இளம் பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.
அவளது முகம் எதிர்த் திசையைப் பார்த்திருக்க, அவளுக்குச் சற்றுத் தொலைவில் கம்பீரமும் ஆளுமையும் கொண்ட ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.
அந்த உருவத்தின் தோற்றமும், உடுத்தியிருந்த ஆடையும், அணிகலன்களும், உடல்மொழியும் அனைத்தும் தற்காலத்தைச் சேர்ந்ததாக இல்லாமல், பழங்கால அரச பரம்பரையை ஒத்திருந்தன.
அவன் அவளையே கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான்.
அவளது அமைதியை ஊடுருவும் வண்ணம், மிகக் கம்பீரமான, ஆழமான குரலில் பேசத் தொடங்கினான்.
“காந்தளே... ஒருகணம் என்னையும் நோக்குவீராக.”
அந்தக் குரல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலிக்கும் அளவுக்கு, அங்கே அமைதி நிறைந்திருந்தது.
அந்த விளிப்பும், அதன் கம்பீரமும் சுனையாழியின் அடிமனதை அசைத்துப் பார்த்தன.
‘காந்தள்’ என்று அழைத்து, தன்னைத் திரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த ஆளுமைமிக்க குரலுக்குக் கட்டுப்பட்டவள் போல, அந்தப் பெண்ணின் உருவம் மெதுவாகத் தன் முகத்தைத் திருப்பி, எதிரே நின்றிருந்தவனை நோக்கினாள்.
அந்த முகம் முழுமையாகத் திரும்பிய அந்த நொடியில்...
சுனையாழியின் உடல் அதிர்ந்தது.
அந்தக் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரனைப் பார்த்த மாத்திரத்தில், உடல் தூக்கிப்போட எழுந்தமர்ந்தாள்.
முகில்வர்மன்!
மூச்சுக்காற்றுக்குத் திணறியவளாய், சுனையாழி நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
நெஞ்சுக்கூடு வேகமாக அடித்துக்கொண்டது.
“என்ன கனவு இது...?” என்று மனதுக்குள் வியந்தாள்.
அந்த மலையடிவாரப் பூந்தோட்டமும், தன்னை ‘காந்தள்’ என்று அழைத்த அந்தப் பழங்காலத் தோற்றத்திலிருந்த முகில்வர்மனின் பிம்பமும், அவனுக்கு எதிரே நின்றிருந்த அந்தப் பெண்ணின் உருவமும், அவளுள் விவரிக்க முடியாத குழப்பத்தையும் அதிர்ச்சியையும் விதைத்திருந்தன.
அவள் அந்த விசித்திரக் கனவின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், வாகனம் நகரின் பரபரப்பான பகுதிகளைக் கடந்து, மாறனின் டிராவல்ஸ் அலுவலகத்தின் வாசலில் வந்து நின்றது.
சுனையாழியும் யாழ்வேந்தனும் காரிலிருந்து கீழே இறங்கினர்.
சுனையாழி தன் தோள்பையைச் சரிசெய்தபடி முன்னே நடக்க, யாழ்வேந்தன் அவளுடன் நடந்து வந்தான்.
அலுவலகத்தின் கண்ணாடிக் கதவைத் திறந்து சுனையாழி உள்ளே நுழைந்த அந்தத் தருணத்தில்...
அவளது கால்கள் அப்படியே தடைபட்டு நின்றன!
அங்கே...
வரவேற்பறையின் ஒரு பக்கமாக இருந்த நாற்காலியில், மிகச் சாதாரணமாக அமர்ந்திருந்தான் முகில்வர்மன்!
கதவு திறக்கும் சத்தம் கேட்டு முகில்வர்மன் திரும்பிப் பார்த்தான்.
ஆனால், உள்ளே நுழைந்த சுனையாழியின் கண்கள் அவன் மீது விழுந்த அடுத்த நொடி...
அவளது முகம் முற்றிலும் வெளுத்துப்போனது!
உடலெங்கும் ஒரு மெல்லிய அதிர்ச்சி அலை பரவியது.
சற்று முன்பு கனவின் ஆழத்தில் கண்ட அதே முகம்...
அதே ஆளுமை...
இவன் எப்படி நேரில் இங்கே வந்து அமர்ந்திருக்கிறான் என்ற வியப்பும் அதிர்ச்சியும் மட்டுமே அவளை ஆட்கொண்டன.
கனவில் கண்ட அதே முகில்வர்மன், தற்கால ஆடையில் இந்த டிராவல்ஸ் அலுவலகத்தில் நேருக்கு நேர் அமர்ந்திருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
“கனவில் வந்தவன் நேர்ல இங்க உக்காந்திருக்கானே...” என்ற அதிர்ச்சி மட்டுமே அவளது பார்வையில் உறைந்திருந்தது.
அவளது நின்ற நிலையையும், முகத்தில் உறைந்திருந்த அந்த அதிர்ச்சியையும் கவனித்த யாழ்வேந்தன், சுனையாழியின் அருகில் வந்து நின்றான்.
“சுனை... என்ன ஆச்சு? ஏன் இங்கேயே நிக்குற?” என்று யாழ்வேந்தன் கேட்க,
சுனையாழி தன் பார்வையை முகில்வர்மனிடமிருந்து விலக்கிக்கொண்டு,
“ஒன்னுமில்லை ண்ணா... வா, உள்ள போவோம்...” என்று தட்டுத்தடுமாறிக் கூறி உள்ளே நடந்தாள்.
---
அதே நேரத்தில்...
மும்பையிலிருந்து புறப்பட்ட வசீகரனின் பயணம், மாலையின் பொன்னிறச் சூரியன் மறையும் தருணத்தில் திருநெல்வேலி நகருக்குள் வந்து சேர்ந்தது.
நகரத்தின் வீதிகளைக் கடந்து, வசீகரன் தான் வழக்கமாக நெல்லைக்கு வரும்போதெல்லாம் விரும்பித் தங்கும் அதே பிரபல நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்டமான வாசலில் அவனது கார் வந்து நின்றது.
காரின் கதவைத் திறந்து இறங்கிய வசீகரனின் தோற்றம் வழக்கம்போலக் கம்பீரமாகவும், அதே சமயம் நீண்ட தூரப் பயணத்தின் லேசான சோர்வுடனும் இருந்தது.
அவனது தோளில் அவனது பழமையான தோல்பை தொங்கிக்கொண்டிருந்தது.
ஹோட்டல் ஊழியர்கள் மரியாதையுடன் அவனை வரவேற்று, அவனது உடைமைகளைப் பெற்றுக்கொள்ள, வசீகரன் அமைதியான நடையோடு வரவேற்பறைக்குச் சென்றான்.
வழக்கமான வாடிக்கையாளரான வசீகரனைக் கண்டதும் வரவேற்பாளர் புன்னகையோடு அவனை வரவேற்று, அவன் எப்போதும் தங்கும் அதே பிரத்யேக அறையின் சாவியை ஒப்படைத்தார்.
வசீகரன் லிஃப்ட் வழியாகத் தனக்கு ஒதுக்கப்பட்ட தளத்தை அடைந்து, அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.
தோள்பையைக் கட்டிலின் மீது வீசியெறிந்த வசீகரன், ஜன்னலின் அடர்ந்த திரைச்சீலைகளை விலக்கி வெளியே பார்த்தான்.
திருநெல்வேலி நகரின் இரவு வெளிச்சங்கள் மெல்ல மெல்லச் சுடரத் தொடங்கியிருந்தன.
கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது.
அவனது ஆழமான யோசனைகள் மீண்டும் அந்தக் கனவைச் சுற்றியே சுழன்றன.
“நாளைக் காலை...” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டான்.
“நாளைக் காலை அந்த வனப்பகுதியை அடைந்தாக வேண்டும். என் சந்தேகங்களுக்கும், என்னை ஆட்கொள்ளும் இந்த விசித்திர உணர்வுகளுக்கும் நாளை விடை கிடைத்தேயாக வேண்டும்.”
நீண்ட பயணத்தின் களைப்பைப் போக்க அவன் குளிப்பதற்காகத் தயாரானான்.
நாளை அதிகாலையிலேயே புறப்பட வேண்டியிருப்பதால், இன்றிரவு முழுமையான ஓய்வு அவசியம் என்பதை உணர்ந்து, தன் பணிகளைத் தொடர்ந்தான்.
அதே சமயம், அவனது அலைபேசி ஒலித்தது.
திரையில் ‘மதன்’ என்ற பெயர் ஒளிர்ந்தது.
வசீகரன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“சொல்லு மதன்... என்ன தகவல்?”
“சார்! முகில்வர்மன் மாறனோட ஆபீஸ்லதான் இருக்கான். இப்போ சுனையாழியும், அவ கூட வந்திருக்கிற இன்னொருத்தனும் அங்க போய் இறங்கியிருக்காங்க சார். மூணு பேரும் ஒரே இடத்துலதான் மீட் பண்ணியிருக்காங்க!” என்று மதன் முக்கியமான தகவலைத் தெரிவித்தான்.
வசீகரனின் உதடுகளில் ஒரு வசீகரமான புன்னகை தவழ்ந்தது.
“அப்படியா... எல்லா காய்களும் ஒரே போர்டுல வந்து இறங்கியாச்சுன்னு சொல்லு. மதன்... அவங்க நகர்வுகளைக் கூர்ந்து கவனி. நாளைக் காலை நாமளும் அங்கதான் இருக்கோம்!” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
விதி தன் வலையை மிகக் கச்சிதமாகப் பின்னி முடித்திருந்தது.
நட்சத்திர ஹோட்டல் அறையில் வசீகரன் நாளைக்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க...
அங்கே, மாறனின் அலுவலகத்தில், கனவில் கண்ட பிம்பத்தின் நேரடி இருப்பைக் கண்டு உறைந்து நின்ற சுனையாழியோடும்...
அந்த அடர்ந்த வனப்பகுதி தன் இரகசியங்களை நெஞ்சில் ஏந்தியபடி, அனைவரின் வருகைக்காகவும் அமைதியாகக் காத்திருந்தது!
தொடரும்.....