அத்தியாயம் – 24
தன்னை நோக்கி ஈர்த்த காடு!
நான் காட்டுக்குப் போறேன்... நீ முகில்வர்மனைப் பத்தி விசாரிக்கிற வேலையைப் பாரு!
வசீகரன் சொல்லி முடித்த அந்த வார்த்தைகள் காற்றில் கரைந்த அடுத்த நொடி, அந்த விசாலமான அறையில் ஒரு கனத்த நிசப்தம் வந்து சூழ்ந்து கொண்டது.
அங்கே நிலவிய அமைதி சாதாரணமானதல்ல; ஒரு பெரும் புயலுக்கு முன்னால் ஏற்படும் இறுக்கமான அமைதியைப் போல இருந்தது. மேஜையின் மீது இருந்த கடிகாரத்தின் 'டிக்... டிக்...' சத்தம் மட்டுமே அந்த அறையின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது.
வசீகரன் தன் கையில் இருந்த சில கோப்புகளை எடுத்து அடுக்கத் தொடங்கினான்.
அவனது முகத்திலோ, உடல்மொழியிலோ எந்தவித சலனமும் இல்லை. ஆனால், அவனுக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்த மதனின் முகம் முற்றிலும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தது.
சில நிமிடங்கள் அங்கே எந்தப் பேச்சும் இல்லை.
வசீகரன் தன் கோப்புகளை அடுக்கி முடித்துவிட்டு, நிமிர்ந்து மதனைப் பார்த்தான். மதன் இன்னும் அதே இடத்தில் நகராமல் நின்றிருப்பதைப் பார்த்த வசீகரனின் புருவங்கள் லேசாக உயர்ந்தன; கேள்வியாக அவனைப் பார்த்தான்.
"இன்னும் கிளம்பலையா நீ?
வசீகரனின் அந்த ஆளுமை கலந்த அதிகாரக் குரல், அறையின் நிசப்தத்தை உடைத்தது.
மதன் தொண்டையை நனைத்துக் கொண்டு ஒரு அடி முன்னால் வந்தான். அவனது குரலில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த தயக்கமும், அதே சமயம் கேட்காமல் இருக்க முடியாது என்ற உறுதியும் தெரிந்தது.
சார்... எனக்கு ஒரு சந்தேகம். அதை கேட்டுக்கலாமா?
வசீகரன் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, மதனைக் கூர்மையாகப் பார்த்தபடி, "கேளு" என்றான் சுருக்கமாக.
"இப்ப நாம முகில்வர்மனைப் பற்றி தகவல்களைத் தீவிரமா தேடிட்டு இருக்கோம் சார்... அவனோட ஒவ்வொரு நகர்வும் நமக்கு ரொம்ப முக்கியம். இந்த நேரத்துல நீங்க அப்படி என்ன அவசியம் காட்டுக்குப் போயே ஆகணும்னு சார்? எனக்கு ஒண்ணுமே புரியல... என்றான்.
அவனது கேள்வி நிச்சயம் வசீகரனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
காரணம்... அவனிடம் அவன் தம்பி தீரனோ, அப்பா பிரதாப்போ இப்படியான கேள்வியைக் கேட்டதில்லை.
'நிச்சயம் இவனுக்குத் துணிச்சல் அதிகம்தான்...' என்று மனதில் நினைத்தாலும், வசீகரனின் உடல்மொழியில் எந்தவித மாறுதலும் இல்லை. அதே இறுகிய தோற்றம்தான்.
வசீகரன் எதுவும் சொல்லாமல்,
அங்க இருக்கிற என் பேக்கை எடு, மதன்,என்று தன் ஷோல்டர் பேக்கைக் காட்டினான்.
மதனும் அந்தப் பேக்கை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
'இந்தக் கேள்வியைக் கேட்காமலேயே இருந்திருக்கலாமோ... பேக்கை வேற கேட்கிறாரு. துப்பாக்கியை எடுத்து என்னைத் தள்ளப் போறாரா என்ன?'
என்று அந்தப் பேக்கை எடுத்து அவன் கையில் கொடுப்பதற்குள் மதனின் மனம் புலம்பித் தள்ளியது.
ஆனால், மதனின் எண்ணம் போல எதுவும் நடக்கவில்லை.
வசீகரன் அந்தப் பேக்கிலிருந்து ஒரு பழமையான, அடர் பழுப்பு நிறமாக மாறிய வரைபடத்தை வெளியே எடுத்தான்.
அதைப் பார்த்த மதனின் மனம் ஆசுவாசமடைந்தது.
'நல்லவேளை... சார் நல்ல மூட்ல இருக்காரு போல!'
என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், மீண்டும் தன் புலம்பல் மோடுக்குத் திரும்புவதற்காக வாயைத் திறந்தான்.
சற்றுத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு,
என்ன மேப் சார் இது? முகில்வர்மனைப் பத்தித் தீவிரமா விசாரிக்கச் சொன்னது நீங்கதான். ஆனா, இப்போ அவனை விட்டுட்டு திடீர்னு காட்டுக்குப் போறேன்னு சொல்றீங்கன்னா, நிச்சயம் அதுவும் உங்களுக்கு முக்கியமானதா இருக்கும்...
எனக்குத் தெரிஞ்சே, நீங்க கிட்டத்தட்ட அஞ்சு, ஆறு வருஷமா யாருக்கும் தெரியாம அந்தக் காட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வந்துட்டுதான் இருக்கீங்க. அப்படி என்னதான் சார் அங்க தேடுறீங்க?
நீங்க தேடுறதுக்கு வழிகாட்டிதான் இந்த மேப்பா?
எங்களால ஏதாவது உதவ முடியும்னா சொல்லுங்க. எங்க டீம் எப்பவும் உங்களுக்காக இருக்கும், என்றான் மதன்.
வசீகரன் விரித்து வைத்திருந்த அந்த வரைபடத்தைப் பார்த்துக் கொண்டே அவன் பேசிக் கொண்டிருந்தான்.
இந்த முறை வசீகரன்,
"ம்ம்ம்... உனக்குத் தைரியம் ஜாஸ்திதான், மதன். என்கிட்ட கேள்வியும் கேட்டு, என்னை எனக்குத் தெரியாமலேயே பாலோ வேற பண்ணி இருக்க போல... நான் தொடர்ந்து காட்டுக்குப் போற தகவல் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க,என்று அவனது துணிச்சலை மெச்சுவது போல, குரலில் லேசான கேலியை வெளிப்படுத்தினான்.
"சார்... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. பெரிய சார்தான்... நீங்க எங்க கிளம்பினாலும் எங்களுக்கு தகவல் சொல்லிடுவார்... உங்க பாதுகாப்புக்காக..." என்றான் மதன் அவசரமாக.
அவன் பயம் அவனுக்கே.
இது வசீகரனுக்குமே தெரியும். இருந்தும், அது தெரியாத விஷயம் கேட்பது போலக் கேட்டு, தலையசைத்துக் கொண்டான்.
வசீகரன் தன் கையில் இருந்த அந்தச் சுருட்டப்பட்ட வரைபடத்தை மெதுவாகப் பிரித்து மேசையின் மீது விரித்தான்.
அவனது விழிகளில் என்னவென்று புரியாத ஒரு பாவனை இருந்தது.
"மதன்... எல்லாமே எல்லாருக்கும் புரியணும்னு அவசியமில்லை," என்றான் வசீகரன் அமைதியாக.
அப்படி சொல்லாதீங்க சார்!& என்று குறுக்கிட்டான் மதன். &பத்து வருஷமா உங்க கூடவே இருக்கேன். சொல்லுங்க சார்... புரிஞ்சுக்க ட்ரை பண்ணறேன். நீங்க தேடுறது என்னன்னு எங்களுக்குத் தெரிஞ்சாத்தானே, நாங்களும் அதுக்கேத்தாப்புல விசாரிக்க முடியும்?
வசீகரன் ஒரு பெருமூச்சுடன்,
"ம்ம்ம்... எனக்கும் யார்கிட்டயாவது சொல்லணும்னு இருக்கு. நான் இந்த ஃபீல்டுக்கு வந்து இத்தனை வருஷத்துல, என்னையே தெரியாம இத்தனை வருஷமா அலையவிட்ட ஒரு வரைபடம்னா, அது இதுதான்," என்றான் அந்த மேப்பைக் காட்டியபடி.
அவன் தன் விரல்களால் அந்த வரைபடத்தின் மீது செதுக்கப்பட்டிருந்த பழங்காலக் குறியீடுகளைத் தொட்டுக் காட்டினான்.
இந்த வரைபடத்தைப் பார், மதன்... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் அப்பாவோட பழைய கபோர்ட்ல தூசிபடிஞ்சு கிடந்த வரைபடம் இது.
இதைப் பற்றி என் அப்பாகிட்ட கேட்டப்போ, அவருக்கு சரியா ஞாபகம் இல்ல... எங்க கிடைச்சதுன்னு.
எனக்கு இதை ஆராயத் தோணுச்சு. இந்த வரைபடத்தை வச்சு என்னால அந்தக் காட்டை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது,; என்றான்.
மதன் அந்த வரைபடத்தையும் வசீகரனையும் மாறி மாறிப் பார்த்தவன், அதிர்வுடன்,
அப்போ அஞ்சு வருஷமா இந்த வரைபடத்தை வச்சு அந்தக் காட்டுக்குள்ள தேடி, உங்களாலேயே கண்டுபிடிக்க முடியலையா? என்றான்.
ஆமா, மதன்!
அஞ்சு வருஷமா இந்த மேப்புல இருக்குற ஒவ்வொரு பாதையையும், ஒவ்வொரு குறியீட்டையும் வச்சு அந்தக் காடு முழுக்க அலைஞ்சு திரிஞ்சுட்டேன்.
ஆனா... ஆனா இன்னைக்கு வரைக்கும் எனக்கு என்ன கிடைச்சது?
வசீகரனின் குரலில் ஆத்திரமும் ஆதங்கமும் வெடித்தது.
அவன் தன் கைகளை மேசையில் பலமாகத் தட்டினான்.
"எனக்கே இன்னைக்கு வரைக்கும் உண்மை என்னன்னு முழுசா கண்டுபிடிக்க முடியலடா!
இந்த வரைபடம் காட்டும் பாதையில ஏதோ ஒரு மிகப்பெரிய ரகசியம் புதைஞ்சிருக்குன்னு மட்டும் புரியுது. ஆனா, அது என்னன்னு என்னால தொட முடியல.
எனக்கே இன்னும் என்ன தேடுறோம்னு தெளிவா தெரியாதப்போ, உன்னை வச்சு நான் அங்க என்னத்தைத் தேடுறது? உன்கிட்ட எதைச் சொல்லிப் புரிய வைக்கிறது?
மதன் திகைத்துப்போய் நின்றான்.
வசீகரன் இவ்வளவு தூரம் தன் பலவீனத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படையாகக் காட்டி அவன் பார்த்ததே இல்லை.
"சார்... அப்போ முகில்வர்மன்? என்று தயக்கத்துடன் கேட்டான் மதன்.
"முகில்வர்மன் வெறும் ஐடி கம்பெனி முதலாளி மட்டும் இல்லை, மதன்.
அவனோட ஜாதகமும், அவனோட பிறப்பும் எனக்குத் தெரியணும்.
அந்தக் காட்டுலதான் அவனை நான் பார்த்தேன்.
என் அப்பாவோட பயம் ஒரு வேளை நிஜமானா... இந்தக் காட்டும், எனக்கும், அவனுக்கும், நான் என்னன்னே தெரியாம தேடுற அந்த விஷயத்துக்கும் ஒரு வகையில பிணைக்கப்பட்டிருக்கணும்னு என் உள்ளுணர்வு சொல்லுது.
அதனாலதான் சொல்றேன்...
முகில்வர்மனோட ஒவ்வொரு நகர்வையும் சென்னை ஆபீஸ்ல கண்காணிங்க. இவன் யாரைச் சந்திக்கிறான், என்ன பண்றான்னு இருபத்து நாலு மணி நேரமும் எனக்கு அப்டேட் வந்துட்டே இருக்கணும்.
வசீகரன் அந்த வரைபடத்தைச் சுருட்டித் தன் பேக்குக்குள் வைத்தான்.
"நீ சென்னை ஆபீஸையும் முகில்வர்மனையும் கவனி.
இந்த முறை இந்த வரைபடத்தோட ஒரு பகுதியைப் பார்த்தேன். அதை நிதானமா ஆராய்ந்து பார்த்துட்டு வரேன், என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு வசீகரன் அங்கிருந்து நகர்ந்தான்.
அதே நேரத்தில்...
வீரசேகரனின் பிரம்மாண்டமான பங்களாவில், முகில்வர்மனின் வழக்கமான காலைப் பொழுது தொடங்கியிருந்தது.
சுயக்கட்டுப்பாடு கொண்டவன் முகில்வர்மன்.
அதிகாலை உடற்பயிற்சிகளை முடித்து, சுடச்சுடக் கருப்பு காபியை அருந்தியபடி அன்றைய பிசினஸ் அட்டவணையைச் சரிபார்ப்பது அவனது தினசரி வழக்கம்.
இன்றும் அதேபோல அமைதியான சூழலில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்தான்.
ஜன்னல் வழியே அதிகாலைச் சூரியனின் இளம் கதிர்களை ரசித்தபடி, பாதி கடித்த ஆப்பிளைப் போன கையிலிருந்து எடுத்தவன், தன் போனின் டிஸ்ப்ளேயில் இரவு தூங்கும் முன் பார்த்த ஒரு புகைப்படத்தின் மீது பார்வையை நிலைநிறுத்தினான்.
அது...
மாறன் அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த அந்தப் பழமையான ஓலைச்சுவடியின் தெளிவான புகைப்படம்!
முகில்வர்மனின் விரல்கள் தானாகவே அந்தப் புகைப்படத்தை மேலும் பெரிதாக்கிப் பார்த்தன.
அந்தச் சுவடியில் செதுக்கப்பட்டிருந்த பழங்காலத் தமிழ் எழுத்துக்களும், மூலிகை ரகசியங்களின் அடையாளக் குறியீடுகளும் அவனது மனதிற்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத அதிர்வை ஏற்படுத்தின.
அவன் எத்தனையோ கோடிக்கணக்கான கார்ப்பரேட் பேரங்களைச் சந்தித்திருக்கிறான். மிகப்பெரிய ஐடி சாம்ராஜ்யத்தை ஆள்கிறான்.
ஆனால், அந்த ஓலைச்சுவடியையும், அதைத் தன்னகத்தே கொண்ட அந்த அடர்ந்த வனப் பகுதியையும் நினைக்கும் போது மட்டும், அவனது நெஞ்சிற்குள் விவரிக்க முடியாத ஈர்ப்பும், இதயத்துடிப்பு அதிகரிப்பதற்கான காரணமும் அவனுக்குப் புரியவில்லை.
இல்லை... நிச்சயமா மறுபடியும் நான் ஒரு முறை அந்தக் காட்டுக்குக் கண்டிப்பா போகணும்! எனக்கு என்னமோ அங்க போகணும்னு என்னோட உள்மனசு சொல்லிட்டு இருக்கு... என்று தனக்குத்தானே தாழ்ந்த குரலில் உறுதியாகச் சொல்லிக் கொண்டான்.
"டேய் அண்ணா... அடுத்தவாரம் எனக்கு இரண்டு நாள் லீவ் கிடைச்சிருக்கு. நீயும் லீவ் போடு... என்று சுனையாழி யாழ்வேந்தனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தொடரும்...