அத்தியாயம் – 23
அடுத்தடுத்த நகர்வுகள்!
சென்னை – அதிகாலை நேரத்திலும் உள்நாட்டு விமான நிலையம் அத்தனை பரபரப்பாக இருந்தது.
தன் ஷோல்டர் பேக்கை மாட்டியபடி வெளியே வந்த வசீகரனின் பார்வை அந்த இடத்தையே அவசரமாக ஆராய்ந்தது. அவன் வரவுக்காகவே காத்திருந்த மதன் அவனருகே வந்தான்.
வந்தவன் கையில் இருந்த பேக்கை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் எடுத்து வந்திருந்த காரில் ஏறிக்கொண்டான். எல்லாமே வெறும் பார்வைப் பரிமாற்றத்தில் மட்டுமே முடிந்தது. வாய் திறந்து இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
இன்னும் நகரம் முழுமையாக விழித்துக் கொள்ளாத அந்த அமைதியான அதிகாலை வேளையில், நகரின் முதன்மையான வணிகப் பகுதியில் அமைந்திருந்த அந்த நட்சத்திர ஹோட்டலில் தன் காரை நிறுத்தினான் வசீகரன்.
அந்த ஹோட்டல் அவனுக்கு ஒன்றும் புதியதில்லை. அவன் சென்னை வரும்போதெல்லாம் அங்கேதான் தங்குவது வழக்கம்.
அவனைப் பார்த்ததும், அவன் வரும்போதெல்லாம் தங்கும் கடைசி தளத்திலிருந்த விஐபி சூட் அறையின் சாவியை எடுத்து கொடுத்தாள் ரிசப்ஷனிஸ்ட்.
தன்னை ரிஃப்ரெஷ் செய்துகொண்டு, அறையின் பிரம்மாண்டமான கண்ணாடிச் சன்னலுக்கு அருகில் நின்றிருந்தான் வசீகரன்.
அவனது கையில் சூடான காபி கோப்பை இருந்தது. ஆனால் அவனது பார்வை வெளியே விரிந்திருந்த நகரின் மீதோ அல்லது அந்தச் சுடச்சுட காபியின் மீதோ இல்லை.
மும்பையில் தந்தை பிரதாப் ராஜ் சொன்ன அந்த எச்சரிக்கை வார்த்தைகள் அவனது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
‘நாற்பது வயசைத் தாண்டிய பிறகு உன் வாழ்க்கையில பெரிய ஆபத்து வரும்... அந்த ஆபத்துக்குக் காரணமான நபருடைய பெயர் பாதுகாப்பு அல்லது காப்பாற்றுதல் சம்பந்தமான பொருளைக் கொண்டதாக இருக்கலாம்...’
பிரதாப் ராஜ் இதை ஒரு ஜாதகக் கணிப்பாக, தனது மனப் பயமாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் வசீகரனுக்கு அப்படி விட்டுவிட மனமில்லை.
அவனது வாழ்க்கை முழுக்க அவன் கற்றுக் கொண்ட ஒரே பாடம் –
‘எதிரியை அவன் உருவாவதற்கு முன்பே நசுக்கிவிட வேண்டும்; ஆபத்து நம் கதவைத் தட்டும் வரை காத்திருக்கக் கூடாது.’
முகில்வர்மன் – மேகம், பாதுகாப்பு அல்லது போர்வீரன் என்ற பொருள் கொண்ட பெயர்.
வெறும் பெயர்ப் பொருத்தம் என்பதற்காக ஒருவனை சந்தேகப்படுவதா என்று வசீகரனின் பகுத்தறிவு கேட்டாலும், அவனது ஆழ்மனதில் எழும் ஈகோவும், தொழில் ரீதியான எச்சரிக்கை உணர்வும் அதைத் தள்ளுபடி செய்ய மறுத்தன.
அதனால்தான், மும்பையிலிருந்து விசாரிக்கச் சொன்னவனை மட்டும் நம்பி இருக்காமல், தனது நேரடி கண்காணிப்பிலேயே முகில்வர்மனைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் தோண்டித் துருவி எடுக்க சென்னைக்கே வந்து இறங்கிவிட்டான்.
அறைக்கதவு மெதுவாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது.
வசீகரன் திரும்பாமலேயே,
“உள்ளே வா மதன்,” என்றான். அவனது அதிகார தோரணை மாறாத அழுத்தமான குரலில்.
கையில் சில கோப்புகளோடும், ஒரு மடிக்கணினியோடும் உள்ளே நுழைந்தான் மதன். அவன் வசீகரனின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாக உண்மையாகவும், ரகசியமாகவும் பணிபுரியும் ஒரு தொழில்முறை புலனாய்வாளன்.
“குட் மார்னிங் சார்,” என்று வணங்கியவன், மேசையின் மீது கோப்புகளை வைத்தான்.
வசீகரன் காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, சன்னலை விட்டு விலகி எதிரே இருந்த சொகுசு நாற்காலியில் அமர்ந்தான். அவனது கண்களில் கூர்மையான கேள்வி பளிச்சிட்டது.
“சொல்லு மதன்... மும்பையில இருந்து நீ விசாரிச்சுச் சொன்ன தகவல்களை விட, நேர்ல வந்து விசாரிச்சதுல என்ன புதுசா தெரிய வந்திருக்கு? முகில்வர்மன் பத்தின முழு விபரமும் கிடைச்சதா?”
மதன் தன்னிடம் இருந்த முதல் கோப்பையைத் திறந்தபடி பேசத் தொடங்கினான்.
“சார், முகில்வர்மனோட பிசினஸ் சுயவிவரத்தைப் பொறுத்தவரைக்கும், அவர் ரொம்பவே நேர்மையான ஒரு தொழிலதிபர். அவரோட முதன்மையான தொழில் ஐடி தான். சென்னையிலும் ஒரு பிராஞ்ச் இருக்கு. மும்பை, கர்நாடகாலயும் இருக்கு.
இது முழுக்க முழுக்க முகில்வர்மனோட தொழில் மட்டுமே. அவனோட அப்பாகிட்ட கூட பணம் வாங்காமல், அவனோட உழைப்பை மட்டும் நம்பி பேங்க் லோன்ல ஆரம்பிச்சிருக்கான்.
வாங்கிய லோன் எல்லாத்தையும் அடைச்சிட்டு, இப்ப சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டு இருக்கான்.
ரியல் எஸ்டேட், சர்வதேசத் தேயிலை ஏற்றுமதி மற்றும் சில விவசாயம் சார்ந்த தொழில்களெல்லாம் அவங்க அப்பா பேர்ல இருந்தாலும், இவனும் அதை எல்லாம் டைம் கிடைக்கும்போது பார்த்துக்கொண்டு இருக்கான்.
டெல்லி, ஆந்திரா, கேரளா, கோவான்னு சில இடங்களில் ஸ்டார் ஹோட்டல்களும் இருக்கு. அவங்க குடும்பத்துக்குன்னு எல்லாமே குடும்பத் தொழில்.
இப்போ வரைக்கும் அவனோட அப்பா பேர்லதான் இருக்கு. சைலன்ட் பார்ட்னரா அவனோட அம்மாவும் இருக்காங்க,” என்றவன், சிறு இடைவெளி விட்டான்.
“பங்குச்சந்தை முதலீடுகளும் இருக்கு. இதுவும் முகில்வர்மனோடது மட்டுமே. ஆனா, அவனோட எந்த ஒரு பிசினஸ்லயும் எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளோ, மறைமுகமான கறுப்புப் பணப் பரிவர்த்தனைகளோ இல்லை. எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு சார்.”
என்றவனைப் பார்த்த வசீகரன், தன் தாடையை வருடியபடியே,
“சுத்தமா இருக்கிற மாதிரி வெளிய உலகத்துக்குக் காட்டுறானா... இல்லை நிஜமாவே சுத்தமா இருக்கானா? அதை முதல்ல பார்த்தியா?” என்றான்.
“நிஜமாவே சுத்தமாத்தான் இருக்கு சார். ஆனா, அவனோட பிசினஸ் நெட்வொர்க்கை விட, அவரோட தனிப்பட்ட வாழ்க்கை ரொம்பவே விசித்திரமானது.
மீடியா வெளிச்சம், தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் ஆடம்பர விருந்துகள், பேட்டிகள்னு எதுலயும் அவன் தலைகாட்டுறதில்லை.
அவனோட பிராஞ்ச் ஆபீஸுக்கு வந்தாக்கூட, தன்னோட தனிப்பட்ட உதவியாளரைத் தவிர வேற யாரையும் அவ்வளவா நெருங்க விடுறதில்லை.
ஒரு மாயை மாதிரிதான் அவனோட நடவடிக்கைகள் இருக்கு.”
வசீகரன் சற்றே யோசனையில் ஆழ்ந்தான்.
“ஒருத்தன் தனக்கான பிம்பத்தை இவ்வளவு ரகசியமா வச்சுக்கிறான்னா, கண்டிப்பா அவன் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறான்னு நினைக்கறதா... இல்லை சுதந்திரமா சுற்றித்திரிய தன் அடையாளத்தை மறைக்கிறானா...?”
என்று யோசித்துக் கொண்டிருக்க, மதன் அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.
“அவருடைய குடும்பம் செல்வாக்கான பரம்பரை சார். அவரோட அப்பா வீரசேகரன் ஊர்ல மிகப்பெரிய மதிப்போடும் மரியாதையோடும் இருக்காரு.
ஆனா... அந்தக் குடும்பத்துல கடந்த பல தலைமுறைகளாக ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும்தான் பிறக்குதுங்கிற செய்தி நூறு சதவீதம் உண்மை சார்.”
வசீகரனின் புருவங்கள் சுருங்கின.
“ம்ம்ம்... அப்புறம்?”
“கூடவே இன்னொரு முக்கியமான விஷயம் சார்.
முகில்வர்மன் பிறந்தப்போ நடந்த சம்பவங்கள்னா... அவன் பிறந்தது ஒரு முழுமையான பௌர்ணமியில.
இது மட்டும்தான் அவனோட பிறப்பு ரகசியத்துல கிடைச்ச தகவல்.
ஹாஸ்பிட்டல்ல பிறக்கல. அவசரமா வீட்டுலயே பிறந்துட்டான் போல. தகவலா சொல்லித்தான் பிறப்புப் பதிவு எடுத்திருக்காங்க.
சோ, அவங்க குடும்பத்துல நடந்த விஷயங்கள் பத்தின எந்த ஒரு பதிவும், எந்த ஆவணங்களும், மருத்துவமனைப் பதிவுகள்னு எதுவும் இல்லாம போகக் காரணம் இதுதான்.”
வசீகரன் நாற்காலியில் பின்னால் சாய்ந்து, தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டான்.
“சரி மதன்... அப்போ சென்னை ஆபீஸ் மூலமா அவனோட அன்றாட நிகழ்வுகளை கவனி.
அவன் போன் கால்ஸ் யார் யாருக்குப் போகுதுன்னு இருபத்து நான்கு மணி நேரமும் எனக்குத் தகவல் வந்துட்டே இருக்கணும்.
நான் மறுபடி அந்தக் காட்டுக்குப் போயிட்டு வர்றேன்,” என்றான் வசீகரன் அழுத்தமான குரலில்.
சென்னையில் வசீகரன், முகில்வர்மனின் நகர்வுகளைக் கண்காணிப்பதை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்த அதே காலை நேரத்தில், சுனையாழி அரைகுறைத் தூக்கத்திலிருந்து விழித்தாள்.
இரவு முழுக்கத் தூக்கமில்லாமல் உழன்றுகொண்டிருந்த சுனையாழி, வழக்கத்தைவிடவும் மிக விரைவாகவே படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள்.
அவளது அறையின் ஜன்னல் வழியே வீசிய குளிர்ந்த காற்றுகூட அவளது மனக் கொந்தளிப்பைத் தணிக்க முடியவில்லை.
நேற்று இரவு யாழ்வேந்தன் பாதிப் பேச்சில் கிளம்பிவிட, அவன் முடிக்காமல் விட்ட ‘முகில்வர்மன்’ என்ற பெயரே அவளது சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.
சுனையாழியின் மனப் படபடப்புக்குக் காரணம்... முகில்வர்மனைப் பற்றிய பயமோ அல்லது வேறு ஏதோ குழப்பமோ எதுவும் இல்லை.
தாத்தாவின் சுவடிப் பெட்டியை மாறனின் காரில்தான் விட்டுட்டு வந்திருந்தோம். அதை மாறன் அண்ணன் பத்திரமா எடுத்து வச்சுட்டாருன்னு போன் பண்ணிச் சொன்னதிலிருந்தே சுனையாழிக்கு நிம்மதிதான்.
முகில்வர்மன் யார், காட்டுல அந்தக் காட்டுப்பன்றி சீறிக்கொண்டு வந்தபோது தன் உயிரைப் பணயம் வைத்து தன்னை அவன் எப்படிக் காப்பாற்றினான் என்பதும் சுனையாழிக்கு நல்லாவே தெரியும்.
ஆனா, இந்த அண்ணன் யாழ்வேந்தனுக்கு முகில்வர்மனைப் பற்றி எதுவுமே தெரியாதே!
‘மாறன் அண்ணன்கிட்ட பேசும்போதுதான் சுவடிப் பெட்டி பத்திரமா இருக்குற விஷயமே தெரிஞ்சிருக்கும். ஆனா, அதுக்கப்புறம் என்ன பேசியிருப்பான்? எப்படி முகில்வர்மன் பேரு உள்ளே வந்ததுன்னு தெரியலையே.
ஒண்ணுமே சொல்லாம, அம்மாகிட்ட திட்டு வாங்க முடியாதுன்னு பாதிப் பேச்சுல இவன் கிளம்பிப் போறதுக்கு... எதுக்கு பேச்சையே ஆரம்பிக்கணும்?
இவனால எனக்குத் தூக்கம் போச்சு...’ என்று பாசமலரை எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்காத குறையாக, அவள் வாயில் போட்டு வறுத்துக் கொண்டிருந்தாள் யாழ்வேந்தனை.
அவன் வரும் வரை தன் மனதைக் கட்டுப்படுத்த நினைத்தவளாக, வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்கு வந்தாள்.
அங்கே பூத்துக் குலுங்கியிருந்த வெள்ளை முல்லைப் பூக்களைப் பறித்து, மூங்கில் கூடையில் போடத் தொடங்கினாள்.
ஆனால், அவளது விரல்கள் பூக்களைப் பறித்தாலும், அவளது கவனம் முழுவதும் அண்ணன் யாழ்வேந்தனின் வருகையிலேயே நிலைத்திருந்தது.
அப்போது, தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி, மருத்துவமனையிலிருந்து நைட் டூட்டி முடித்து வந்துகொண்டிருந்தான் யாழ்வேந்தன்.
தோட்டத்தில் தங்கை பூப் பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நேராக அவளிடம் போக எண்ணி தோட்டம் நோக்கி நடந்து வந்தான்.
சுனையாழியின் சோர்வான முகத்தையும், கண்கள் சிவந்திருப்பதையும் கண்ட யாழ்வேந்தன், கவலையுடன் அவள் நெற்றியில் கைவைத்து பரிசோதித்தபடியே,
“முகத்தைப் பார்த்தா நைட்டெல்லாம் தூங்காம முழிச்சுட்டு இருந்த மாதிரி கண்ணெல்லாம் சிவந்திருக்கு. முகமும் சோர்ந்து இருக்கு. உடம்பு நல்லாதானே இருக்கு?” என்று கவலையாகக் கேட்டான்.
சுனையாழி தன் கையிலிருந்த பூக்களைக் கூடையில் போட்டபடியே நிமிர்ந்து அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.
“அடேய்... எல்லாம் உன்னாலதான்!
நேத்து நைட் நீ ஏதோ பேச ஆரம்பிக்கும்போது, அம்மா நடுவுல வந்து உன் பேச்சை நிறுத்தியதும், நீ பாதியிலேயே அம்மாவை நைஸ் பண்ணி கிளம்பிப் போய்ட்ட.
மாறன் டிரைவர்கிட்ட சுவடிப் பெட்டி பத்திரமா இருக்குன்னு தெரிஞ்சது ஓகே...
ஆனா, முகில்வர்மன்கிட்ட நீ போன் பண்ணிப் பேசினேன்னு சொன்னியே... அவர்கிட்ட என்னத்த பேசினேன்னு தெரியாமத்தான் எனக்கு நைட்டெல்லாம் தூக்கமே வரல!” என்று அவனைப் பார்த்துக் கடுகடுத்தாள்.
யாழ்வேந்தன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,
“ஹேய்! லூசா நீ? இது ஒரு விஷயம்னு தூங்காம இருந்திருக்க! ஒரு போன் பண்ணிக் கேட்டிருக்க வேண்டியதுதான?” என்றான்.
அவனைப் பார்த்து இன்னும் கொலை வெறியோடு முறைத்தாள்.
“போன் நான் பண்ணலன்னு தெரியும்மா...
உனக்கெல்லாம் எதுக்குப் போன்? சார்ஜ்லாம் போட்டு வைக்க மாட்டியா? பகல் முழுக்கத் தூங்குறதானே! போனை சார்ஜ்ல போட்டு தூங்க எவ்வளவு நேரம் ஆகிடும்?” என்று யாழி பொரியவும்...
அவன் போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கிறதே அவனுக்குத் தெரியவர, திருட்டு முழி முழித்தான்.
சுனையாழி சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தி,
“ம்ம்ம்... இந்த முழியைப் பார்த்தா, இப்ப கூட உன் போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கிறது உனக்குத் தெரியலதானே?” என்று குறுக்கு விசாரணை செய்தாள்.
யாழ்வேந்தன் தோட்டத்தில் இருந்த ஒரு சிறிய சிமெண்ட் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி அசடு வழிந்தான்.
“அடப்பாவி!”
என்று அவனை அடிக்க கையில் இருந்த பூக்கூடையைத் தூக்கவும், அதைத் தடுத்து பூக்கூடையை வாங்கி தன் அருகில் வைத்தபடி,
“பாதி சொல்லாம போனத யோசிச்சுதான் தூங்கலையா நீ?” என்றான்.
“நான் என்ன பேசினேன்னு தெளிவாச் சொல்றேன் கேளு...
முதல்ல மாறன் டிராவல்ஸ் கால் பண்ணிப் பேசும்போதுதான், சுவடிப் பெட்டி அவரிடம் பத்திரமா இருக்கிறது தெரியவும் நன்றி சொன்னேன்.
கூடவே, உன்னைக் காப்பாத்தினதுக்கும் நன்றி சொல்லணும்னு நினைச்சேன். அப்போ மாறன்தான், ‘அன்னைக்குக் காட்டுல அந்தப் பன்றி பாய்ஞ்சப்போ டாக்டரை காப்பாத்தினது நான் இல்லை... முகில்வர்மன் சார்தான். நன்றி சொல்லணும்னா அவருக்குச் சொல்லுங்க’ன்னு சொல்லி நம்பரைக் கொடுத்தாரு.”
சுனையாழி தன் மூச்சுக்காற்றைச் சீராக்கியபடி,
“அப்புறம்?” என்றாள்.
“அப்புறம்தான் முகில்வர்மன் சாருக்குக் கால் பண்ணேன்.
‘நான் சுனையாழியோட அண்ணன் பேசுறேன் சார்... அன்னைக்குக் காட்டுல அந்த ஆபத்தான கட்டத்துல என் தங்கச்சியைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி’ன்னு சொன்னேன்.
அதுக்கு அவரு ரொம்பவே இயல்பா, ‘அதெல்லாம் ஒரு விஷயமில்லை... டாக்டர் எப்படி இருக்காங்க? அந்த அதிர்ச்சியெல்லாம் இல்லாம நார்மலா இருக்காங்களா?’ன்னு என்னை விசாரித்தார்,” என்றான்.
“ஓ!” என்றவளைப் பார்த்து,
“என்ன ஒரு ஆளுமை தெரியும்மா அவரு பேச்சுல... செம வாய்ஸ்!” என்றான் ரசனையாக.
அவன் குரலில் இருந்த ரசனையை கவனித்தவள்,
“டேய் அண்ணா... அவனாடா நீ?” என்றாள்.
அவளைப் புரியாமல் பார்த்தவன், அடுத்த நொடியே புரிந்துகொண்டு,
“எருமை மாடே!” என்று அவளை அடிக்கத் துரத்தினான்.
அவனது கைக்குக் கிடைக்காமல் போக்கு காட்டியவளைப் பிடித்து, வலிக்காமல் தலையில் கொட்டியபடி,
“விஷம்... விஷம்... விஷம்!” என்று திட்டினான்.
இருவரும் ஆடி ஓய்ந்து அமரவும்,
“யாழி... இதைச் சொல்ல மறந்துட்டேன்.
நெக்ஸ்ட் டைம் இந்தமுறை போன காட்டுக்கு போற தகவல் சொல்லச் சொன்னார். அவர் ஃப்ரீயா இருந்தா ஜாய்ன் பண்ணிக்கிறேன்னும் சொன்னார்,” என்றான்.
சுனையாழி ஒரு நொடி அமைதியானாள்.
‘அந்தக் காட்டுப் பகுதி அவனுக்கும் பிடிச்சிருக்கா... இல்ல வேற ஏதாவது காரணமா?’
அவளது மனதில் எழுந்த இந்தக் கேள்வி, முகில்வர்மனைப் பற்றிய புதிய யோசனையை விதைத்தது.
“சரி... நீ ஹாஸ்பிட்டல் கிளம்பற டைம் ஆச்சு. அம்மா வந்து திட்டறதுக்குள்ள நீயும் கிளம்பு... நான் போய்க் குளிக்கப் போறேன்,” என்று கூறிவிட்டு யாழ்வேந்தன் வீட்டுக்குள் செல்ல, சுனையாழி அந்தப் பூக்கூடைக் காம்பைப் பிடித்தபடி சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தாள்.
சென்னையில் முகில்வர்மனின் நகர்வுகளை வசீகரன் தன் முழு பலத்துடன் கண்காணிக்கத் தொடங்கியிருக்க...
முகில்வர்மனின் விருப்பத்தைப் பற்றி சுனையாழியின் மனதில் புதிய கேள்விகள் முளைக்க வைத்திருக்க...
கேள்விகளும் செயல்களும், அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்காக அதிவேகமாக நகரத் தொடங்கியது!
தொடரும்...