அத்தியாயம் – 12
இரு ஆளுமைகள் ஒரே நேர்கோட்டில்!
சூரியனின் இளவெயில் திருநெல்வேலி நகரின் மீது மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.
ஹோட்டலின் பிரத்யேக பார்க்கிங் பகுதியை நோக்கி நடந்தவனின் கால்கள், அணையிட்டதுபோல் நின்றுபோயின.
பார்க்கிங் பகுதியில், அவன் நேற்று பார்த்த அந்தப் பழைய கருப்பு நிறக் காரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஏதோ தூசி படிந்த சாதாரண பழங்காலத்து வண்டியைப் போலத் தெரிந்திருந்தாலும், அருகில் நின்றபோதுதான் அதனுடைய பிரத்யேக வடிவமைப்பும், அதன் பின்னாலிருந்த பெரும் மதிப்பும் முகிலனுக்குப் புரிந்தது.
இந்தக் காரைத்தான் நாம பார்த்தோமா...
கருப்புதான்...
ஆனா, ‘ஷைனி பிளாக்’ன்னு சொல்றதைப் போல அத்தனை பளபளப்பாய் இருந்தது.
நேத்து பார்த்ததும் கண்டிப்பா இந்தக் காராத்தான் இருக்கும்.
காலையில் சூரிய ஒளியில் பளபளத்தது...
நைட் காரோட ஹெட்லைட் வெளிச்சத்துல பளபளத்தது...
அந்தப் பளபளப்புதான் அவன் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
பழைய மாடல் காரா இருந்தாலும், இன்னமும் பயன்படுத்துறாங்கன்னா, நிச்சயம் பழமை விரும்பியா இருக்கணும்... இல்லன்னா வயசானவங்களா இருக்கணும்...
என்று முகிலனின் மனதுக்குள் கேள்விகள் சுழன்றுகொண்டிருந்த அதே நேரத்தில்...
ஹோட்டலின் பிரதான வரவேற்பறை வாசலின் உயரத்தைத் தன் உயரத்தால் அளந்தபடி ஒருவன் கம்பீரமாக வெளியே வந்தான்.
நடை ராஜதோரணையில் கம்பீரமாக இருந்தது.
வசீகரன்ராஜ்!
தோளில் தொங்கிய லெதர் பேக், எம்போரியோ அர்மானி டாமி சர்ட், ஹில்ஃபிகர் ரிலாக்ஸ் ஃபிட் பேன்ட், கிளார்க்ஸ் ஷூ...
பார்க்கப் பார்க்க, ஸ்டேஜில் ரேம்ப் வாக் போகும் மேல்மாடல் போலவே இருந்தான்.
நேற்றைக்கு இருந்த லுக்கிலும் சரி, இன்று இருக்கும் லுக்கிலும் சரி, வசீகரன் நிஜமாகவே வசியம் செய்யக்கூடிய வசீகரனாகத்தான் இருந்தான்.
தன் காரின் சாவியை ஆள்காட்டி விரலில் சுழற்றியபடியே இயல்பாக பார்க்கிங்கை நோக்கி வந்த வசீகரனின் கண்கள், தன் காரின் அருகில் நின்றுகொண்டிருந்த முகிலனின் மீது நிலைத்தன.
அந்த நேரத்தில் தன் கார் அருகில் முகில்வர்மனை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
வசீகரனுக்கு முகிலனை யாரென்று நன்றாகத் தெரியும்!
ஆனால், முகிலனுக்கு வசீகரனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாது.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த வண்டி மட்டும்தான்!
முகிலன் அந்த வண்டியைத்தான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை வசீகரன் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டான்.
வசீகரன் தன் காரை நோக்கி இயல்பாக அடியெடுத்து வைத்து வந்தவன்,
“எக்ஸ்கியூஸ் மீ, சார்...” என்று அவன் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான்.
“எஸ்...” என்று திரும்பிப் பார்த்தவன், நிச்சயம் இப்படி ஒரு வாலிபனை எதிர்பார்க்கவில்லை.
(முகிலா, அவன் ஃபார்ட்டி + டா... நீ தர்ட்டி + தான். ஆண்பிள்ளையைப் பார்த்து ஜொள்ளுவிடாதடா டேய்... நீ தான்டா ஹீரோ. என்னைய இப்படி புலம்பவிட்டானே மக்களே, இவன்!)
“காரையே இவ்வளவு நேரமா பார்த்துட்டு இருக்கீங்க... கொஞ்சம் வழி விட்டீங்கன்னா, நான் என்னோட காரை எடுத்துப்பேன்,” என்றான் சிறு புன்னகையோடு.
“சாரி, சார்... கார் உங்களோடதா?
இது ரொம்பப் பழைய மாடல் இல்லையா? அதான் பார்த்துட்டு இருந்தேன்.”
“கிளாசிக் மாடல்... 1930s or 40s வண்டியா?”
என்று அவன் சிறு புன்னகையோடு கேட்டான்.
முகிலன் காரைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து இயல்பாகப் பேச்சுக் கொடுத்தாலும், நேத்து இவன் என்னைப் பார்த்திருப்பானோ? என்று நினைத்தவனின் உள்மன அழுத்தம், அவனின் கார் பற்றிய விசாரிப்பில் மெல்ல விலகியது.
மனதில் அழுத்தம் இருந்தபோதிலும், தன் முகத்தில் ஒரு சிறு சலனத்தைக்கூட காட்டிக்கொள்ளாமல், இயல்பான புன்னகையோடு தன் காரைத் தொட்டுத் தடவினான் வசீகரன்.
“1938 மாடல்... ரொம்ப அரிதான வண்டி. பழங்காலப் பொருட்கள் மேல ஆர்வம் இருக்கிறவங்களுக்குத்தான் இதோட அருமையும் மதிப்பும் தெரியும், சார்,” என்றான் வசீகரன்.
“அப்போ, உங்களுக்கு நல்லாவே தெரியும் போல...” என்றான் முகில் லேசாகப் புன்னகைத்து.
“உண்மைதான்... பராமரிக்கிறதே பெரிய விஷயம்.
பை தி வே... நான் முகில்வர்மன்,” என்று தன் கையை நீட்டினான்.
வசீகரனும் முகிலனின் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.
“வசீகரன்ராஜ்...”
“சென்னைக்கா, வசீகரன்?”
“இல்ல... நான் மும்பைல இருக்கேன். இங்க தமிழ்நாட்டுக்கு ஒரு சின்ன வேலை விஷயமா வந்தேன். நீங்க சென்னையா?” என்று வசீகரன் கேட்க,
“ஆமாம்,” என்று முகில் தலையாட்டினான்.
இரு துருவங்களாக இருக்கும் இரு ஆளுமைகள், தங்கள் உண்மையான பின்னணியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அந்தப் பழங்காலக் காரின் வழியே இயல்பாக அறிமுகமாகிக்கொண்டார்கள்.
சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு, முகிலன் சென்னைக்குக் கிளம்ப, வசீகரன் தன் காரில் ஏறிப் புறப்பட்டான்.
வழக்கம்போல சென்னையில் இருக்கும் தன் கெஸ்ட்ஹவுஸில் காரை நிறுத்தியவன், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு டாக்ஸி புக் செய்து விமான நிலையத்திற்குச் சென்றான்.
மும்பையின் அரபிக்கடலோரம், நவீன வானளாவிய கட்டிடங்களுக்கு நடுவே, ஒரு காலப்பேழை போலப் பழமை மாறாமல் நின்றிருந்தது அந்த விண்டேஜ் அரண்மனை!
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பிரபுக்களால் கட்டப்பட்டு, பின்னர் தொல்லியல் குடும்பத்தின் வசமான அந்தப் பிரம்மாண்டமான விக்டோரியன் பாணி பங்களா, நவீன நகரத்தின் நடுவே ஒரு தொன்மைக்காலத்து விசித்திரத்தைப் போலக் கம்பீரமாக வீற்றிருந்தது.
பிரதான வாயிலைக் கடந்ததும், விரிந்த முற்றம் முழுவதும் பிரம்மாண்டமான கருங்கல் தூண்களும், பழங்காலத் தேக்கு மரத்தின் வாசமும் நிறைந்திருந்தன.
கைகளால் செதுக்கப்பட்ட கம்பீரமான ஆர்ச் கதவுகள், பழமையான பளிங்குக் கற்களின் மீது படிந்திருந்த தேய்மானங்கள், சுவர்களில் தொங்கிய பழங்கால வரைபடங்கள் மற்றும் தொல்லியல் பொக்கிஷங்கள் என, அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் வரலாறு மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது.
மின்விளக்குகளுக்கு நடுவிலும், பழங்காலத் தொங்கு விளக்குகளின் மெல்லிய மஞ்சள் வெளிச்சம் அந்த அரண்மனைக்கு ஒருவித விண்டேஜ் கம்பீரத்தையும், மர்மமான அழகையும் சேர்த்துக் கொடுத்தது.
வசீகரன் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
அரண்மனையின் பிரதான முற்றத்தில், கடலை நோக்கியிருந்த பர்மா தேக்குமரச் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஒரு முதியவர்.
பாரம்பரிய கதர் ஆடை, கையில் பளபளக்கும் ஒரு பழங்கால வாட்ச், முகத்தில் தொல்லியல் ஆய்வாளருக்கே உரிய ஒரு கூர்மையான பார்வை...
வசீகரனை வயதானால் எப்படி இருப்பாரோ, அப்படியே பிரதிபலிக்கும் தோற்றம்.
யாரும் அறிமுகப்படுத்தாமலேயே தெரிந்துவிடும்... அவர்தான் வசீகரனின் தந்தை — பிரதாப் ராஜ்!
ராஜ் குரூப் ஆஃப் கம்பெனிகளின் சொந்தக்காரர்.
தந்தையைப் பார்த்தபடி வசீகரன் படியேறி அவரிடம் வந்தான்.
பிரதாப் ராஜ் நிமிர்ந்து தன் மகனைப் பார்த்தார்.
அவனது தோள்பையையும், அவனது கண்களில் இருந்த தீவிரத்தையும் பார்த்ததுமே அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார்.
“தேடிப் போன காரியம் என்னாச்சு, வசீகரா...?”
தொடரும்...