• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

என் தந்தைக்கு சமர்ப்பணம்

uma Ramesh

SH Sapphire Member
ஆதியும் அந்தமும் இல்லா
அருள் பெரும் சோதியுடன் துவங்கும்
நம் மார்கழி மாதம்.
வாசலில் இடும் கோலம் முதல்
சமையலின் சுவை வரை
நேர்த்தியாய் கற்பித்த என் தந்தையே!
அரிச்சுவடியை சுவற்றில்
கரிகொண்டு எழுதி போதித்தது முதல்
கலை இலக்கியப் போட்டிகளில்
அச்சமின்றி பரிமளிக்கச் செய்தீர்.-இன்று
ஆன்றோர் நிறைந்த சபைகளில்
தயக்கம் இன்றி கற்பிக்கையில்
ஒவ்வொரு முறையும் என் மனதோரம் நீங்கள்!
பக்தி இலக்கியம் முதல்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரை
இனிய பாடலாய்ப் பாடி பாடவைத்து,
பொன்னியின் செல்வன் தந்து
வாசித்தலின் இன்பத்தை உணர வைத்தீர்.
குடும்ப சூத்திரத்தையும்,
குழந்தை வளர்ப்பையும் வழிகாட்டினீர்.
வாழ்க்கையின் தத்துவத்தை
இதுவும் கடந்து போகும் என்று
பொறுமையை போதித்தவர் நீங்கள்.
சுற்றம் போற்றி வாழ்தலையும்,
பெரியோரைப்போற்றவும்
பெரும் உதாரணமாய் திகழ்ந்தவர்.
அதிகம் பேசாமல் தங்கள் செயல்களால்
உற்றார் உறவினர் போற்றும்
அதிஉன்னத இடத்தை வாழ்வில் பெற்றீர்.
எம் தாயுடன் இணைந்து தோள் கொடுத்து
எமை வளர்த்த தாயுமானவரே!
அப்பா என்ற வார்த்தையில்
அனைத்துமாக இருந்தவரே!
இனி வரும் காலங்களில்
இறைவனாய் இருந்து
எங்களுக்கு வழிகாட்டுவீராக!
(சமீபத்தில் மறைந்த என் தந்தை நினைவாக எழுதியது)
 
Last edited:
ஆதியும் அந்தமும் இல்லா
அருள் பெரும் சோதியுடன் துவங்கும்
நம் மார்கழி மாதம்.
வாசலில் இடும் கோலம் முதல்
சமையலின் சுவை வரை
நேர்த்தியாய் கற்பித்த என் தந்தையே!
அரிச்சுவடியை சுவற்றில்
கரிகொண்டு எழுதி போதித்தது முதல்
கலை இலக்கியப் போட்டிகளில்
அச்சமின்றி பரிமளிக்கச் செய்தீர்.-இன்று
ஆன்றோர் நிறைந்த சபைகளில்
தயக்கம் இன்றி கற்பிக்கையில்
ஒவ்வொரு முறையும் என் மனதோரம் நீங்கள்!
பக்தி இலக்கியம் முதல்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரை
இனிய பாடலாய்ப் பாடி பாடவைத்து,
பொன்னியின் செல்வன் தந்து
வாசித்தலின் இன்பத்தை உணர வைத்தீர்.
குடும்ப சூத்திரத்தையும்,
குழந்தை வளர்ப்பையும் வழிகாட்டினீர்.
வாழ்க்கையின் தத்துவத்தை
இதுவும் கடந்து போகும் என்று
பொறுமையை போதித்தவர் நீங்கள்.
சுற்றம் போற்றி வாழ்தலையும்,
பெரியோரைப்போற்றவும்
பெரும் உதாரணமாய் திகழ்ந்தவர்.
அதிகம் பேசாமல் தங்கள் செயல்களால்
உற்றார் உறவினர் போற்றும்
அதிஉன்னத இடத்தை வாழ்வில் பெற்றீர்.
எம் தாயுடன் இணைந்து தோள் கொடுத்து
எமை வளர்த்த தாயுமானவரே!
அப்பா என்ற வார்த்தையில்
அனைத்துமாக இருந்தவரே!
இனி வரும் காலங்களில்
இறைவனாய் இருந்து
எங்களுக்கு வழிகாட்டுவீராக!
(சமீபத்தில் மறைந்த என் தந்தை நினைவாக எழுதியது)
உங்களோடு என்றும் நினைவுகளாய் கலந்திருப்பார் சிஸ்.
 
உங்களுடைய கவிதை அருமை. தந்தையின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கும் சகோதரி
 
Back
Top
Developed and maintained by – Akeshya