உன் காதலின் சாரலில் நனைந்தவன் நானடி - கதைக்கு ரொம்ப பொருத்தமான டைட்டில் சிஸ்
ஹீரோ - வருண் ஆதித்யா
ஹீரேயின் - மேகவர்ஷினி
நா நிறைய rugged ஹீரோஸ் பாத்து கடுப்பா இருந்தப்ப தான் பிபில உங்க கதைய முதன் முதல்ல படிக்கிற வாய்ப்பு கிடச்சது. உங்க கதைகளில் நா படிச்ச மூன்றாவது கதை இது.
இந்த கதையின் நாயகன் வருண் ஆரம்பத்துல செஞ்ச தப்புக்காக வருத்தப்பட்டு மனைவிக்காக ஏங்குன இடங்கள் நல்லா இருந்தது

சில இடத்துல அவன பாத்து கடுப்பா வந்தாலும் பொண்டாட்டி கால்ல விழுந்தது நல்லா இருந்தது

நாயகி மேகவர்ஷினியின் காதல் ரொம்ப அழகு

வருண் மேல வச்ச எதிர்ப்பார்ப்பு இலாத அவளோட காதல், ஏமாந்துட்டோம்னு தெரிஞ்சு கலங்குற இடம், அவளோட தன்மானம், கணவன் தேடி வரதுக்காக காத்திருந்த அவளோட வைராக்கியம். எல்லாமே ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சிஸ்
வருண்-வர்ஷினி ரெண்டு பேரோட காதல்

ரொமான்ஸ்


கவிதையா இருந்தது
விபு - இருவரின் காதல் பரிசு

சின்ன வயதில் அவனுக்கு இருந்த பக்குவம்

அவ்ளோ அலட்டல் பண்ணிட்டு இருந்த அப்பாவையே அலற விட்டது வேற லெவல்
தருண் - எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்

அவனோட சின்ன சின்ன சேட்டைகள், அவன மதிக்காம வருந்த வச்சாலும் அண்ணனோட கஷ்டத்துல உதவியா இருந்தது, முக்கியமா ஆங்காங்கே அவனோட mind voices செம சிரிப்பு

இவர்களின் அம்மா ராஜேஸ்வரி, தருணின் மனைவியா வந்த அபூர்வா - no comments simply waste

ஒரு அப்பாவா விஸ்வநாதன் நல்லவரா இருந்தது மட்டும் சின்ன ஆறுதல்
மொத்தத்தில உங்களோட இந்த கதையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்
தருணோட கதைக்காக வெயிட்டிங்