அங்காள்
SH Crystal Member
கண்கள் திறக்கும் முன்னே
என் வாழ்வை கண்டாள்
அவள் கண்கள் வழியே !
என் வாழ்வில் ஒரு திருத்தம் ...
விளக்கேற்றி வைத்தாள் என் வாழ்வை
என் கண்கள் வழியே
நான் காண
என் முதல் மூச்சைக் கண்டு மகிழ்ந்தாள்
அவள் கண்ணீர் வழியே !
அவள் மனம் மலரக் கண்டேன்
என் நா எழுப்பிய ஓசை கேட்டு
தவழ்ந்து வந்தேன் என்னை
எழுந்து நடக்க வைத்தாள்
தீப்பந்தமாய் நின்ற என்னை
தீபமாய் ஒளிரச் செய்தாள்
என்னையும் பார்க்க வைத்தாள்
நான் காணாத என்னை
செடியாய் வளர நினைத்தேன்
அவள் கைகள் என்னை மரமாக்கியது
விழுதுகள் கொண்டு நிற்கிறேன்
அம்மா
நீ தந்த விதைகள்
எனது வேராக ...!
என் வாழ்வை கண்டாள்
அவள் கண்கள் வழியே !
என் வாழ்வில் ஒரு திருத்தம் ...
விளக்கேற்றி வைத்தாள் என் வாழ்வை
என் கண்கள் வழியே
நான் காண
என் முதல் மூச்சைக் கண்டு மகிழ்ந்தாள்
அவள் கண்ணீர் வழியே !
அவள் மனம் மலரக் கண்டேன்
என் நா எழுப்பிய ஓசை கேட்டு
தவழ்ந்து வந்தேன் என்னை
எழுந்து நடக்க வைத்தாள்
தீப்பந்தமாய் நின்ற என்னை
தீபமாய் ஒளிரச் செய்தாள்
என்னையும் பார்க்க வைத்தாள்
நான் காணாத என்னை
செடியாய் வளர நினைத்தேன்
அவள் கைகள் என்னை மரமாக்கியது
விழுதுகள் கொண்டு நிற்கிறேன்
அம்மா
நீ தந்த விதைகள்
எனது வேராக ...!