Saranya Hema அவர்களின் எழுத்தில்
"வானாடும் மீனே"
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதைக்களம்

23வது அத்தியாயம் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மனது

கயல்விழி... தனி பெற்றோரின் வீட்டிலிருந்து தப்பித்து அடைக்கலமாக வருகிறாள் வான்புகழ்வீரன் இல்லத்திற்கு.
13 வருடங்கள் ஜெயிலில் கழித்துவிட்டு மனம் நிறைந்த வேதனையுடன் வருகிறான் அவன். தன் வீடு தேடி வந்த பெண்ணை அவள் பெற்றோருடன் அனுப்ப இவன் மனம் பதைபதைக்கிறது. தன் மனம் சொல்லும் செய்தியை அப்போதே அறிந்து அவளை அனுப்பாமல் தன்னுடனே தக்க வைத்திருந்தால் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்திருக்காது

மாரீஸ்வரி கருப்பையா உன்னதமான மனிதர்கள்

உப்பிலியப்பன் கோமளா
பர்வதம், அமுதா கேவலமான பிறவிகள்

மீனாள், மகராசி இவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்த வாழ்வு படிப்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.

இவர்களின் இழப்பு மனதை அறுத்தது

ஒரு நல்லது நடந்து விடாதா..? இறுதி அத்தியாயம் வேகமாக வந்து விடாதா என நினைத்துக் கொண்டே படித்தேன்..
இறுதி அத்தியாயம் வந்தவுடன் ஏன் வேகமாக முடிந்தது இன்னும் கொஞ்சம் கதை நீளாதா என ஏக்கம் கொள்ள வைத்து விட்டார் எழுத்தாளர்

கிட்டத்தட்ட கதை முடியும் தருவாய்வரை எங்களை அழுத்தத்திலும் கண்ணீரிலும் வைத்துவிட்டு இறுதி அத்தியாயத்தை மட்டும் வேகமாக முடித்தது என்ன நியாயம் ரைட்டரே

ஒரு எபிலாக் கொடுத்தா அவர்கள் குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழ்வதை பார்த்து நாங்களும் மகிழ்ந்திருப்போம் தானே.
சரி விடுங்க.. படித்த எங்களுக்கே இவ்வளவு அழுத்தமாக உள்ளது. எழுதிய உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். உங்கள் மனநிலை எவ்வளவு வதைபட்டிருக்கும் என்று என்னால் நன்றாக உணர முடிகிறது..
கதையின் ஸ்லாங் ரொம்ப நன்றாக இருந்தது உங்களுக்கு இந்த ஸ்லாங்கு மிகவும் கைவந்த கலை என்று எனக்கு தெரியும்

மிக மிக அருமையான கதை
இப்படியான கதைகளை படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் காத்திருந்தது தான் படிக்க வேண்டும்.
Good luck dear
Keep rocking

