• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதலின் சாரலில் - 1

View attachment 1236

அத்தியாயம் - 1

சென்னை அண்ணாநகரில் இருந்தது அந்த நவீன காலத்து அரண்மனை போன்று, மூன்று தளங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய வீடு...

அதில் வசிப்பவர்கள் தலைமுறை தலைமுறையாக பணக்கார வர்க்கத்தின் வழி வந்தவர்கள் என்று சொல்லி தெரிய வேண்டிய தேவையில்லை...

நம் கதையின் நாயகன் வருண் ஆதித்யா, அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் அமைத்திருந்த பிரத்யேக ஜிம்மில், தான் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, தன் கட்டுடல் மேனியில் வியர்வை வடிய, இறுதியாக டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான்...

நேரம் செல்ல செல்ல அதன் வேகத்தை அதிகரித்தானே அன்றி குறைக்கும் வழியைக் காணாத அவனின் இரட்டை தருண், "டேய் வருண், உனக்கு என்ன தான்டா ஆச்சு? ஒரு மாசமா ஏன் இப்படி எதையோப் பறிக்கொடுத்த மாதிரி அலையிற?".. என கடிந்தவாறு அவனாகவே அதை நிறுத்தி இருந்தான்...

அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்த வருண், ஒரு மணி நேரம் செய்த கடும் உடற்பயிற்சியின் காரணமாக பெரிய பெரிய மூச்சுக்களாக வெளியேற்றினான்...

மேலும் அரைமணி நேரமாக, சமீப நாட்களாக அவனிடம் தென்படும் இந்த திடீர் ஆக்ரோஷத்திற்கான காரணத்தை தனக்கு தெரிந்த வரையில் விதம்விதமாகக் கேட்டுப் பார்த்து சலித்த தருண், "ப்ச் எதாவது சொல்லி தொலையேன்டா... இப்படி பெத்த அம்மாவோட பேச முடியாத அளவுக்கு உனக்கு அவங்க மேல என்ன கோபம்?" என கத்தியிருந்தான்...

அவனை வெறுமையாகப் பார்த்த வருண், "ஹாஹா... இத நீ அவங்க கிட்டயே கேட்கலாம்ல? எனக்கு சொன்ன மாதிரியே உனக்கும் நல்லா காரணம் சொல்லுவாங்க..." என்று நக்கலடித்து விட்டு, அலுவலகம் செல்வதற்காக, அதே தளத்தில் இருந்த தனது அறைக்குச் சென்று விட்டான்...

நான் ஐடென்ட்டிக்கல் டிவின்ஸ் வகையை சேர்ந்த இரட்டையர்கள் இருவரும் ஒரே மாதிரியாக ஆறடி உயரத்தில் இருந்தாலும், முக அமைப்பும், நிறமும் வேறு வேறாக இருக்கப் பிறந்தவர்கள்... தருண் அன்னையின் சாயலிலும், வருண் தந்தையின் சாயலிலும் இருந்தனர்...

பத்து மணிக்கு செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு எட்டரை மணிக்கே கிளிம்பி வந்த வருண், டைனிங் டேபிளில் அமர்ந்து, வழக்கமான நேரத்திற்கு தங்கள் காலை உணவை உண்டு கொண்டிருந்த குடும்பத்தினருக்கு காலை வணக்கம் சொன்னவன், யாரும் அவனை உண்ண சொல்வதற்கு முன்பாகவே, வேகமாக வெளியே வந்து தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500யை எடுத்திருந்தான்...

எப்போதும் போல் அதன் ஸ்டியரிங் வீலை சில வினாடிகள் தடவிக் கொடுத்தபடி எதையோ யோசித்தவன், தன்னை சமாளித்துக் கொண்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க துவங்கினான்...

மகன் உண்ணாமல் சென்றதில் தன் மனைவியை நோக்கி குற்றம் சாட்டும் பார்வையை வீசிய அந்த குடும்பத்தின் தலைவர் விஸ்வநாதன், தானும் இரண்டு தோசைகளோடு எழுந்து கொண்டார்...

அவர்கள் மூவருக்குள் நடந்து கொண்டிருக்கும் பனிப்போரைப் பற்றி அறியாத, மற்ற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் எதையோ நினைத்தபடி தங்கள் உணவில் கவனம் வைத்தனர்...

விஸ்வநாதன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள்...

முதல் பெண் சுஜிதா, அவளுக்கு நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ராகவனோடு திருமணம் முடிந்து, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள்...

அவளுக்கு அடுத்துப் பிறந்தவர்கள் தான் இரட்டையர்கள்... அதில் மூத்தவன் வருண் ஆதித்யா, அவனுக்கு அடுத்து தருண் ஆகாஷ்... தருணிற்கு அபூர்வாவோடு திருமணம் முடிந்து எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது..

இவர்களுக்கு அடுத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்ததவள் சுஷ்மிதா... அவளுக்கு தீபக்கோடு திருமணம் முடிந்து ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது...

இவர்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில், நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கின்றது... சென்னையில் உள்ள பத்து கிளைகளை மட்டும் விஸ்வநாதனும், தருணும் நிர்வகித்து வருகின்றனர்...

மற்ற கிளைகளுக்கு தகுந்த நிர்வாகிகளை பணியில் அமர்த்தி இருப்பதால் தேவை ஏற்படும் போது மட்டுமே இவர்கள் சென்று வருவர்...

இந்த துறையில் நாட்டமில்லாத வருண் தனக்கு மிகவும் பிடித்த பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறான்...

மற்ற பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து குடும்பமாக வாழும் போது, வருண் மட்டும் இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் அவ்வீட்டில் இருந்த எல்லோர் மனதிலும் வியாபித்திருந்தது...

எப்போதும் போல் ராஜேஸ்வரி தான் அவன் திருமணம் சம்பந்தமான ஏதோ ஒரு வாக்குவாதம் செய்து, அதன் பொருட்டு தாய்-மகன் இருவருக்கும் முட்டிக் கொண்டதாக நினைத்தவர்கள், தங்கள் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தனர்...

ஆனால் அவ்வீட்டிலுள்ள இருவருக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை...

ஒருவர் விஸ்வநாதன், அவருக்கு உண்மையான காரணம் தெரிந்தும் வெளியே சொல்லி, தன் மனைவியின் உண்மையான முகத்தை வெளிக்காட்ட முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தார்...

மற்றொருவர் வருணின் இரட்டை தருண் ஆகாஷ்... வருணிற்கு, எத்தனை பெரிய கோபமாக இருந்தாலும், ஒரு வாரத்திற்கு மேல் அவனால் அன்னையோடு பேசாமல் இருக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்த தருண், எப்போது உண்மை வெளிவந்து பூகம்பம் வெடிக்கும் என்ற பயத்தோடு தான் நடமாடி வந்தான்...

இங்கு தன் அலுவலக அறைக்கு வந்து சேர்ந்த வருண், அவன் இருக்கையில் அமராமல் எப்போதும் போல் அங்குப் போட்டிருந்த அந்த சந்தன வர்ண திவானில் அமர்ந்து கொண்டான்...

அவனிற்கும் அவன் தேவதைக்கும் இடையே நிகழ்ந்த எத்தனையோ காதல் சேட்டைகள் அந்த திவானில் நிகழ்ந்தது தான்...

வழக்கமாக காலையில் தன் அறைக்குள் நுழைந்தவுடன், முதல் வேலையாக அவர்கள் காதலுக்கு உயிரற்ற சாட்சியாக திகழும் அதில் அமர்ந்தால் மட்டுமே அவன் மனம் அமைதியாகும்...

அதைத் தடவிக் கொடுத்தபடியே, "வர்ஷூ மை டார்லிங், நீ எங்க டி இருக்க? ம்ம்.. எங்க இருந்தாலும் உன் குணத்துக்கு நல்லா தான் இருப்ப.. உன.. உனக்கு இந்நேரம் கல்.. கல்யாணமாகி குழ.. குழந்தை கூட இருக்கும்ல.. ஆமா.. அ.. அது தான் சரி.. தப்புப் பண்ண எனக்கு தான் தலையெழுத்து, தப்பேப் பண்ணாத நீ எதுக்கு த.. தனியா இருக்கனும்... ஆ.. ஆனா நீ என்னைய மற.. மறந்துருப்ப தானே..." என்று வழக்கம் போல் வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தான்...

'அப்புறம் நீ அவளப் பேசுன பேச்சுக்கும், படுத்துன அவமானத்துக்கும், உன்னைய நெனச்சுப் பார்க்க அந்தப் பொண்ணுக்கு என்ன பைத்தியமா ராசா?...' என பரிகசித்தது அவனின் மனசாட்சி...

அவள் பக்க நியாயத்தை எடுத்துரைத்த தன் மனசாட்சியை எதிர்த்துப் வாதாடுவதற்கு கூட, தன்னிடம் நியாயம் இல்லையே என அமைதியாக இருந்த வருண், நீண்ட பெருமூச்சுடன் எழுந்து தன் இருக்கையில் அமர்ந்தான்...

அவனுக்கு முன்னால் அடுக்கி வைத்திருந்த ஃபைல்களை, ஒவ்வொன்றாக எடுத்துப் படித்துப் பார்த்து கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த போது, உள்ளே வருவதற்காக யாரோ கதவுத் தட்டும் ஓசையைக் கேட்டு நிமிர்ந்தவன், "யெஸ் கம் இன்.." என அனுமதி வழங்கினான்...

முகத்தில் ஒளியே இல்லாமல் ஏனோ தானோவென்று கிளம்பி வந்திருந்த நண்பனைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த சந்தோஷ்ராம், "ப்பா லவ் ஃபெய்லியரானவன் இத்தன வருஷம் கழிச்சு கூட தேவதாஸ் வேஷம் போடுவான்னு உன்னையப் பார்த்து தான்டா தெரிஞ்சுகிட்டேன்..." என்று கிண்டல் அடித்தபடியே வருணிற்கு எதிராக அமர்ந்து கொண்டான்...

நண்பனுக்கு எந்த பதிலும் சொல்லாத வருண், அவனை முறைத்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்...

"ப்ச் உனக்கு என்னடா பிரச்சன? இனிமே உன் காதல் திரும்பக் கிடைக்க சான்ஸே இல்லைன்னு தெரிஞ்சும், மூவ் ஆன் ஆகாம இப்படி முடி வெட்டாம, தாடியோட அலஞ்சா மட்டும் தங்கச்சி உன்னையத் தேடி வந்துருவாளாடா?.."

"ப்ச் அந்த மாதிரி அதிர்ஷ்டம் எனக்கு இல்ல மச்சி, அந்த அளவுக்கு சின்ன தப்பையும் நா செய்யலயே ராம்..‌." என சொல்லி விட்டு வருத்தமாக சிரித்து வைத்தான்...

"சரி அத விடு... நீ ஏன்டா நம்ம ஹேமாவோட பேச மாட்ற? அவ வேற கால் பண்ணி என் தலைய உருட்டிட்டு இருக்கா..‌ உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சன?.."

"டேய் ராம் வேணாம்... அந்த நம்பிக்கை துரோகியப் பத்தி நீ என்கிட்ட பேசாதடா.. ச்சை அவ எல்லாம் ஒரு ஃப்ரெண்டா? எனக்கு எதிரா அந்த மாதிரி ஒரு வேலையப் பார்த்ததுக்கு பதிலா என்னைய விஷம் வச்சே அவ கொன்றுக்கலாம் மச்சான்... இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு பதிலா சந்தோஷமா செத்துப் போயிருப்பேன்..." என்றவன், கைமுஷ்டியை மடக்கி தன் தொடையில் குத்திக் கொண்டான்...

நண்பனின் கையைப் பிடித்து தடுத்த ராம், "அடேய் விடுடா.. நா எதுவும் கேட்கல.. இப்படி எத்தன நாளைக்கு கோபமா இருக்கப் போறனு நானும் பாக்குறேன்.. அவகிட்ட கேட்டாலும் காரணம் சொல்ல மாட்றா, நீயும் காரணம் சொல்ல மாட்ற... நா என்னன்னு நெனைக்கிறது... என்னமோ போங்க..." என சலித்துக் கொண்டான்..

"ஹாஹாஹா.. அந்த மேடம் எப்படி காரணம் சொல்லுவாங்க.. அவங்க பெரிய ஆள் டா... உனக்கும் எதாவது விபூதி அடிச்சுருக்கப் போறா... இப்பவே கேட்டு தெரிஞ்சுக்க, அதான் உனக்கு நல்லது..." என்ற வருணின் குரலில் தென்பட்ட விரக்தியில், அவனைப் பாவமாகப் பார்த்த ராம்,

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியலடா வருண்.. ஆனா ஒரு காலத்துல ஆன்டிஹீரோவா சுத்திட்டு இருந்த உன்னைய இப்படிப் பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்குடா... எதாவது மிராக்கிள் நடந்து, இதுல இருந்து உன்னையக் காப்பாத்த தங்கச்சி இங்க வந்தா நல்லா இருக்குமேனு அடிக்கடி தோனுது..." என்றான் வருத்தமாக..

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து எழுந்தவன், "டேய் ப்ளீஸ்டா.. இது மாதிரி என் மனசுல ஆசைய வர வச்சுராதடா... நானே ரொம்ப நொந்துப் போயிருக்கேன். என் வர்.. வர்ஷூ, அவள அப்படி கூப்பிட கூட எனக்கு இப்போ உரிமையில்ல தானே... அவ என்னோட தேவதைடா.. நா தான் அவளோட அருமை தெரியாம தொலச்சுட்டு இப்படி நின்னுட்டு இருக்கேன்..‌" என சொன்னவன், உள்ளே மூச்சு முட்டியதில் வேகமாக அவன் அறையில் இருந்த பால்கனிக்குச் சென்றிருந்தான்...

தன் போக்கில் எதையோ யோசித்தபடி அங்கேயே நின்றிருந்த வருண், அவன் தலைக்கு மேலாகக் கேட்ட விமான சத்தத்தில் நிமிர்ந்துப் பார்த்து சின்னதாக சிரித்து வைத்தான்...

அவன் இத்தனை நேரமாக யாரைப் பற்றி புலம்பினானோ, அவள் அந்த விமானத்தில் தான் சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தாள்...

காதலில் நனைவான்......
மனமார்ந்த வாழத்துக்கள் சஞ்சனா 🎉 🎉 🎉 🎉
 
Back
Top
Developed and maintained by – Akeshya