சாந்தி உடையப்பன்
Writer
அனைவருக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள்.
இது எனது பிள்ளை முயற்சி. கவிதைகளுக்கு நான் உறவானவள் தான் என்றாலும், நாவலுக்குப் புதியவள். எழுத்தின் மீது ஒரு தீராக் காதல் எனக்கு, என் எழுத்துக்கள் மூலம் உங்கள் அனைவரோடும் கை குலுக்கலாம் என்னும் பேராவலோடு இக்கதையினை ஆரம்பிக்கிறேன்.
நிறைகள் இருந்தால் என் தோள் தட்டுங்கள், குறைகள் இருந்தால் உங்கள் விரல் சுட்டுங்கள். சுட்டும் விரலைப் பற்றிக் கொள்வதில் மிகுந்த ஆவல் எனக்கு.
வால்வெள்ளி ஓவியம்: வால்வெள்ளியில் (வால்மீன்) மிகவும் பிரபலமானது ஹேலி வால்வெள்ளி, 75 வருடங்களுக்கு ஒரு முறை பூமியை அண்மிக்கும் நம் கண்களால் பார்க்கக் கூடிய ஒரு வால்வெள்ளி. இதில் உயிர் மூலக்கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கதையின் நாயகி அரண்யா, அத்தகைய ஹேலி வால்வெள்ளி போன்றவள். இவள் போன்றவர்கள் மிகவும் அபூர்வமாக இப்பூமியில் பிறப்பார்கள்.
நம் கதை நாயகன் அதிரையன்; ஆதிரை நட்சத்திரத்திற்குரியவன் (சிவன்). அந்த ஆதிரையன் தன் உடம்பில் சரிபாதி உமையாளுக்குத் தந்தார். நம் அதிரையன் தன், ஆன்மா, உடல், சிந்தை என அனைத்திலும் தன் இனியாளுக்குச் சரிபாதி தருபவன்.
வால்வெள்ளி, சூரியனை நெருங்கும்போது, வெப்பத்தால் பனி ஆவியாகி, வால் போன்ற அழகான அமைப்பை உருவாக்குகிறது. இது வானியலில் ஒரு அற்புதக் காட்சியாக, வானின் சிறந்த ஓவியமாகச் சித்தரிக்கப்படுகிறது.
அரண்யா என்னும் வால்வெள்ளி அதிரையன் என்னும் சூரியனில் அமிழ்ந்த பொழுது எப்படி அற்புத ஓவியமானாள் இது தான் கதை.
ஒரு சமூகப் பிரச்சனையை மையமாகக்கொண்டு எழுதியிருக்கிறேன். இதில் வருகின்ற கல்வி சார்ந்த விஷயங்கள் அனைத்தும் உண்மை நிகழ்வுகள். ஏதாவது ஒரு மாணவனுக்கு இத்தகவல்கள் பயன்படுமானால் மகிழ்வேன். இத்தகவல்கள் பற்றி மேலும் அறிய வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
வாரம் மூன்று பதிவுகள் இடலாம் என நினைக்கிறேன். சந்திப்போம் விரைவில்
அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.

Last edited: