• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மழைத்துளி 15

மூன்று மாதங்கள் கடந்திருந்தது...

காலண்டரில் நாட்கள் வேகமா மாறுது,
ஆனா இந்த வீட்டின் மனநிலை மட்டும் ஒரு அடியும் முன்னேறல.
அன்னைக்கு நடந்த விபத்துக்குப் பிறகு
ஹ்ருதயாவின் மருத்துவமனை வாசம்…
அதை நினைத்தாலே குடும்பத்தார் யாருக்குமே துளி நிம்மதி கிடைக்கல.

மருத்துவர் செய்த பெரிய சிகிச்சை எல்லாம் வெற்றியா முடிஞ்சது.
ஆனா ஹ்ருதயா மூளை காயத்திலிருந்து மீள
நேரம் அதிகமா எடுக்குது.

நாள் முழுக்க அறைக்குள்ள ஒலிக்கும் மானிடர் சத்தம் மட்டும் தான் எல்லாருக்கும் தாங்கி நிற்கும் நம்பிக்கை போல.

ஹ்ருதயாவை பார்க்க வரும் ஒவ்வொருத்தரும் கண்களில் கலங்கல், மனசுல பயம் வைத்து தான் வருவாங்க.
உடம்பு காயத்திலிருந்து நன்றாகி வர்றது தெரியும்…
ஆனா அவள் விழிக்கலையா என்ற பயம் தான் எல்லாரையும் நிம்மதியா விடல.

சூர்யா…
அவன் மனசுல மூன்று மாதமா ஒரே ஒரு நினைவு.
அவள் விழுந்த அந்த கணம்.
அதை ஒரே ஒரு இரவுக் கூட மறந்து தூங்க முடியல.

காலை மேலாண்மை வேலைகள் எத்தனை இருந்தாலும்,
இரவு எவ்வளவு நேரம் ஆனாலும்,
நேரத்துக்கு மருத்துவமனை வாசலுக்கே வந்திருப்பான்.

கண்ணாடி கதவு வழியாக அவளை காண காண நெஞ்சம் நொறுங்கும். படுக்கிற இடத்தையப் பார்த்து
அவள் கை கோர்த்து முகம் பார்த்து மெதுவா பேசிக் கொண்டே இருப்பான்.

அது அவளுக்குச் செவிக்கேறியதோ இல்லையோ—
அவன் மட்டும் ஓய்வெடுக்கவே மாட்டான். அவள் கண் மூடியிருந்த அந்த நொடியிலிருந்தே
நான் ஒரு கணமே தாமதமாயிருந்தா…”
என்னும் குற்ற உணர்வு
அவனை தினமும் வாட்டிக்கொண்டு இருக்குது.

ஹ்ருதயாவின் அம்மா…
மனசு நொறுங்கி போயிட்டாங்க.
மூன்று மாதமா மருத்துவமனை வரண்டாவில் தவம் கிடக்கிறாங்க யாராலும் அவங்கள சமாதானம் பண்ண முடியல.

பக்கத்தில் இருக்கிற பாட்டி, அத்த, , அம்மா என பகல்-இரவு மாறி மாறி கவனிச்சிட்டே இருக்காங்க.

“ஒரு நொடியும் அவளைத் தனியா விடக்கூடாது”
என்பது தான் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவர் முடிவு.

காவ்யாவும் அனியும்—
அவங்க கல்லூரி நேரம் போக மீதி நேரம் இங்கே தான் எல்லா நாளும் கூட
மருத்துவமனை பாதையிலேயே முடிந்தது.
அவங்க கேட்ட கேள்வி தினமும் ஒன்றே​
“இன்னைக்கு ஏதாவது சின்ன அசைவு இருந்தா சொல்லுங்க…”

அவ அப்பா…
மனசலவுல உடலளவுல ரொம்பவே தளர்ந்து போயிட்டார்.
சுவரைப் பார்த்துகிட்டு நாள் முழுக்க அமர்ந்திருப்பார். கண்ணில் நீர் வற்றி உறைந்து இருப்பவர் காண்போரை கலங்க செய்யும்.

இரவெல்லாம்
அவர் மருத்துவமனை வாசம் தான்.
சூர்யாவும் அப்படித்தான்.
கண்களில் சிவப்பு ஏறி, மனசுல வலி இருந்தாலும்—அவளை விடப்போறேன்னும் எண்ணம் அவனுக்கு வரவே வராது.

“தயா… கண்ண திறந்து பாருடி
என்ன செஞ்சா எங்கிட்ட வருவ..
உனக்கான காதல் நெஞ்சம் முட்ட இருக்குது உன்னோட ரொம்ப வருசம் வாழனும்டி... என்ன விட்டுறதாடா தயா.. நா வாழ நீ வேணும்.. …”


என்னும் சொற்கள் அந்த அறைக்குள்ளயே எதிரொலித்து சுவர்கள் தழுவி நிற்கும்.

அது அவ காதுக்கு எட்டாமலேயே போனதுதான் துரதிஷ்டமோ??

அவன் மனசு மட்டும் தினமும் சொல்லிட்டே இருக்கும்.. ஒரு நாள் என் தயா கண்டிபா என் கிட்ட வருவா.

............

அன்று...

"தயா… தயா!!”

அவன் குரல் அந்த அருவியின் சத்தத்தைக் தாண்டி ஒலித்தது.

தண்ணீர் ரொம்ப வேகமா பாய்ந்ததால், அவளை அடைய அவன் போராட வேண்டியிருந்தது. அவன் கால்கள் மண்ணை தொடவே முடியல; நீர் ஓட்டம் அவனையும் தள்ள அழுத்தினது. ஆனா அவன் கைகள் நீளத்துக்கு நீட்டி, தண்ணீரின் அலைகளுக்குள் மூழ்கி, ஹ்ருதயாவை தேடினான்.

ஒரு கணம் — அவனுக்கு அவள் தெரியாம போச்சு. அந்த கணம்… அவன் உயிரே நின்ற மாதிரி.

“தயா… தயா!!”
அவன் குரல் கரைந்தே போனது.

அடுத்த சில விநாடிகள்…
தண்ணீர்கீழிருந்து கை ஒன்று மேலே வந்துச்சு — ஹ்ருதயாவின் கை.

அவன் அந்த கையை இறுக்கி பிடிச்சான்.
ஆனா பிடிச்சவுடனே தெரிஞ்சது — அவள் உடம்பு பாதியாக ஓட்டத்துக்கு கீழ் இழுக்குது.

“தயா!! பிடிச்சிகோ!! பிடிச்சிகோ!!” தொண்டைதண்ணி வற்ற கத்தினான். காரணம் அவளுக்கு உணர்வு பாதியாக போயிருந்தது.

தண்ணீர் அவர்களை இருவரையும் கீழ் தள்ளிக்கிட்டு போறதை கண்டு, சூர்யா ஒரு வலிமையோடு அருகிலிருந்த பெரிய பாறையை காலால் தள்ளி, எதிர் திசையில கையை கொண்டு பாறையின் விளிம்பைப் பிடித்தான்.

அவன் கை நெருப்பாக எரிச்சது…
கால் கீழே நிலை இல்லாமல் அலைக்கழிச்சது… ஆனா பிடியை விடல.

“தயா… நான் இருக்கேன்… நான் விடமாட்டேன்… புரியுதா?!”
அவனோட குரல் அதிர்ந்து கொண்டது.

அலை இன்னும் அவர்களைக் கீழே இழுக்க, சூர்யா முழு உடல் சக்தியையும் பயன்படுத்தி, அவள் கையை தோளுக்குப் மேலே தூக்கி, பாறை திசைக்கே இழுக்க ஆரம்பிச்சான்.

சந்தோஷ், கார்த்திக் ,அனிருத் அருவிக்கரையில் உதவுறதுக்காக கையை நீட்டினாங்க.

இறுதியாக…
ஒரு தள்ளல், ஒரு இழுத்தல் —
இருவரும் பாறைக்கரையிலே மோதி மேல வந்தாங்க.

ஹ்ருதயா மூச்சே இல்லாம, கண்ணை மூடியபடி கிடந்தாள்.
சூர்யா நொடி கூட இழுக்காம அவளை உயர்த்தி, அவள முகத்துல தண்ணீர் இருந்ததை துடைஞ்சு, அவ கன்னத்தில் தட்டி,

“தயா… தயா… எனக்காக கண்ணை திற… தயா!!”

அவள் மூச்சிறையாகி, மயக்க நிலைக்கு தள்ளப்பட்டா. . சூர்யாவின் இதயம் அங்கவே நின்றுவிட்டது.

அவ கையை அவன் இரண்டு கைகளாலும் பிடிச்சு கொண்டு,
“எதுவும் ஆகாது… நான் இருக்கேன்… நான்…”
என்று அவளுக்கு கூறினானோ அவனுக்கும் சேர்த்து கூறினானோ திரும்பி திரும்பி சொல்லி கொண்டே இருந்தான்..

அந்த நொடியிலேயே எல்லாரின் வாழ்க்கையும் மாறிப்போயிட்டது.

.................

தேனி மாவட்டம் அருகில் உள்ள அந்த பெரியபலதுறை மருத்துவமனைக்குள்ளே…

இரவு நேர அமைதியை கிழித்து கொண்டு அச்சுறுதும் தன்மையை அதிகம் கொண்டதா காணப்பட்டது. அந்த மருத்துவ வளாகம்.

Scan எடுத்தவுடன் மருத்துவர்களோட முகம் சீரியஸா இருந்துச்சு.

அவங்க சொன்ன சில வரிகள்
சூர்யா வாழ்க்கையிலே மறக்க முடியாத வரிகள்:

“மூளைல கடுமையான வீக்கம்…
தலையில் அடிபட்ட இடம் ஆழமா இருக்கு… உடனடியா தலையின் ஒரு பகுதி அகற்றி வீக்கம் குறைய இடம் விடணும்…”

அந்த ICU வாசல் முன்னால ஒரு குழப்பமான பல முகங்கள். உள்ளே ஹ்ருதயா படுத்திருக்க அதிவேகமாக ஆபரேஷன் நடந்து வருகிறது— நிமிடம்தோறும் அவளை கவனிக்குற மெஷின் சத்தம் மட்டும்.​

பல மணி நேரம்…

அவள் operation theatre-க்குள்ள
உயிரோடு போராடும்போது—
சூர்யா வெளியுல மனசோடு போராடி சோர்ந்து போனான்.

Operation முடிஞ்சதும்
மருத்துவர் மெதுவா சொல்லினார்
"மூளை வீக்கம் (swelling) ரொம்ப அதிகமா இருக்கு. அடிபட்டபோ ரத்தம் வெளிவராம உள்ளே தங்கினாதல தலையை மூடிக்காக்குற எலும்பின் ஒரு பெரிய பகுதியை தற்காலிகமா எடுத்துட்டாங்க — இது தலைக்குள் இருக்கும் அழுத்தம் குறைய, மூளைக்கு சுவாசம் கிடக்க, வீக்கம் மெதுவா குறைய உதவும்.

இந்த அறுவை சிகிச்சை — மிகவும் முக்கியமான ஒன்று.
சிகிச்சை நன்றாகத்தான் முடிஞ்சிருக்கு…
ஆனா இதுக்கப்புறம் அவள் கண் திறக்குறது உடனே நடக்காது.

ஏன்னா…

மூளையே ரொம்ப அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் சந்திச்சிருக்கு. அறுவை சிகிச்சைக்குப்பிறகு உடம்பு சோர்ந்து நிம்மதியா இருக்கு. மூளைக்கு மீண்டும் அதன் வேலையைத் தொடங்க நேரம் வேணும்
உடம்புக்கு “சற்று ஓய்வு வேணும்”. மற்றபடி, ஹ்ருதயா இன்னும் கண் திறக்கலை என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்ல.
"இப்படிப்பட்ட சிகிச்சைக்குப்பிறகு 6 - 8 வாரங்கள் வரை அவள் கண் திறக்க நேரலாம்… சில நேரம் அதைவிட கூடுதலாகலாம். இது எல்லாம் மூளை ஓய்வெடுத்து மீண்டும் பழைய நிலைக்கு வருற செயலா இருக்கும்.”

அவள் அறுவை சிகிச்சை வெற்றியா நன்றாக முடிஞ்சிருக்கு…
இப்போ அவளோட உடல் மெதுவா சீராகணும்…
மூளை அதன் வேலை மெதுவா மீண்டும் பண்ணணும்…
அதுக்குதான் இந்த நேரம்.
சூர்யா என்னோட ரூம்க்கு வாங்க கொஞ்சம் பேசணும்"
என்று சொல்லி சென்றார்.

சூர்யா ICU வாயிலில் நின்னு இதையெல்லாம் கேட்டு, அவன் கையை கட்டி கொண்டு ரொம்ப நிதானமா இருக்க மாதிரி வெளிக்காட்டி கொண்டான்…​
...........
"Excuse me doctor"
"உள்ளே வாங்க சூர்யா. உக்காருங்க..."
"டாக்டர் தயாக்கு எல்லாம் ஓகே தானே.. "
"யா ஷி வில் பீ பைன் சூர்யா. உங்க கிட்ட கொஞ்சம் ஹ்ரிதயா பத்தி பேசணும்."
"சொல்லுங்க டாக்டர்"
"இந்த ஆபரேஷன் அப்புறமா அவங்களோட லைஃப் சைக்கிள் ரொம்ப மாறுபடும். "
"என்ன சொல்றீங்க .. இதை சரி செய்ய முடியுமா"
"வெயிட் வெயிட் நா முதல்ல சொல்லி முடிசூட்றேன்"

சில நேரம் மௌனத்திற்கு பிறகு....

" பயப்பட எதுவும் இல்ல சூர்யா. கண்ணைத் திறக்க கொஞ்சம் நாள் ஆகலாம். திறந்த பிறகு நினைவில் குழப்பம் வரலாம்… என்ன நடந்தது, யார், எங்கே—அவங்களுக்கு உடனே நினைவுக்கு வராம இருக்கலாம்.
உடம்பு பலவீனம் இருக்கும். பேசுறதுல தடை வரும். சில சமயம் உணர்ச்சிவசபட்டு சீக்கிரம் உடைந்து போகவும் வாய்ப்பு இருக்கு.
இதெல்லாம் இந்த சிகிச்சைக்குப் பிறகு சாதாரணம் தான்.”


சூர்யா மெதுவா கேட்டான்:

“இது எல்லாம் எப்போ சரியாகும் டாக்டர்…? முழுசா திரும்புவாளா?”

“சொல்ல முடியல Surya… ஆனா நம்பிக்கைக்கு இருக்கு. அவள் இளம் வயசு தானே… மனவலிமை இருக்கும் பெண். மீள வாய்ப்பு இருக்கு. ஆனா நீங்கவும் குடும்பமும் பெரிய பொறுப்பு எடுத்தாகணும். நாள்தோறும் கவனமும் ஊக்கமும் தான் அவளுக்கு மருந்து.”

“சின்ன முன்னேற்றம் கூட இல்லையா டாக்டர்?”


ஒரு சிறிய சிரிப்போடு

“ஆபரேஷன் முடிஞ்ச உடனே சொல்ல முடியாது… இப்ப உள்ள போற மருந்து அவங்க உடல் எடுக்கணும்.. 24 மணிநேரம் ஆப்சர்வேஷன் அப்புறமா தான் அவங்ககிட்ட இருந்து ரியாக்ஷன் தெரியும்".

சூர்யாவின் கண்கள் நனைந்தது.

டாக்டர் அவன் தோளில் கை வைத்து "சியர் அப் மேன். கண்டிப்பா திரும்ப வருவா.. நம்பிக்கையோடு இரு".

“அவங்ககிட்ட பேசிட்டே இருங்க.. அவங்களுக்கு பிடிச்ச பாட்டு, கதை சொல்லுங்க, கூடவே யாராச்சு இருந்து பேச்சு குடுத்துதே இருந்தா அவங்க ஆழ் மனம் அதுக்கு ரெஸ்பான்ட் பண்ணும். கண்விழிக்க தூண்டும்.

“அவள் கண் திறப்பா… நிச்சயமா திறப்பா… என் ஹ்ருதயாக்கு தைரியம் கம்மியா இல்ல… காத்திருக்கறது தப்பில்லை…” என்று தனக்குள்ளே சொன்னான்.

"தயா… நான் இங்கதான் இருக்கேன்…
நீ திரும்ப வருற நேரம் வரை…”


அந்த நொடியிலிருந்து
மூன்று மாதங்கள்…

சூர்யா அவள் கண் திறப்பதுக்காக
ஒரு ஒரு நொடிக்கும் காத்திருப்பதை நிறுத்தல.
.........
 
இரவு…

அவன் வழமையாக அவள் கையை பிடிச்சு அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவள் கை முற்றிலும் சில்லுன்னு குளிர்ந்திருந்தது.

அவன் விரல்கள் அவள் விரல்களுக்குப் பக்கத்துல போகும் போது ஒரு சின்ன அசைவு தோன்றி மறைஞ்சுது அவன் கண்கள் பெரிசாயிச்சு.

“தயா…?”
அவன் மெல்ல கூப்பிட்டான்.
மூன்று மாதமா எதுவும் காட்டாத அந்த கை —மிக மெதுவா, கண்களுக்கு தெரியாம இருக்குற அளவுக்கு, நொடிப்பொழுதில் சிறிய துடிப்பு காட்டியது.

சூர்யா நொடிக்கே நின்றான்.
உள்ளே இதயம் துடிச்சது.
கண்ணில் நீரேற வர ஆரம்பிச்சது.

அவன் கையை அவள் கைமேல் அதிகமா அழுத்தாம மெதுவா வச்சு,
“தயா… இது நிஜமா…? நீ திரும்ப வருதுக்கான சின்ன அடையாளமா…?”
என்று மெல்ல கேட்டான்.

அவளை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு மெல்லிய குரலில் பேசிக்கொண்டே இருந்தான்.
ஆனா அந்த துடிப்பு ஒரு நொடியே இருந்தது… அதுக்கப்புறம் மீண்டும் அமைதி.

“எனக்கு பதில் சொல்ல வேண்டாம்… நீ வந்துட்டே இருக்க… நானும் காத்திருக்கேன்…”

மருத்துவ சாதனத்தின் ஒரு அலாரம் திடீர்னு கேட்டது.

அந்த சத்தம் சாதாரணமானது தான்…
ஆனா மூன்று மாதம் இதயத்துக்கு அதிர்ச்சியா அனுபவிச்ச உடம்புக்கு
அது அவள் மூளைக்கு ஒரு சிறிய விதமான “ஓசை சலனம்” போலத்தான் பட்டுச்சு.

அவள் புருவம்…
ஒரு கணம் மிக மிக மெதுவா இழுத்த மாதிரி ஆனது.

அவளை நெருங்கி அமர்ந்தான்.

“தயா… எதுக்கும் பயப்படாதே…
நான் இருக்கேன்…
இனியொரு நிமிஷமும் நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்…”


அவள் புருவ அசைவு
அவன் சொற்களுக்கு பதிலாகத்தான் இருந்ததா அல்லது ஒரு மருத்துவ ரிப்ளக்ஸா தெரியல.

ஆனா அது
சூர்யாவுக்கு அவளே பதிலில் தந்தது போல தோன்றியது..

....

அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் பதித்து
“தயா… மூன்று மாதமா தினமும் நான் ஒரு கேள்விதான் கேக்குறேன்…
எப்போடி எங்கிட்ட வருவ. என் காதல உன்கிட்ட சொல்லி எல்லாரோட ஆசீர்வததோடு உங்கை புடிச்சு உன்னோடு காதலோடு வாழனும் ரொம்ப ஏக்கமா இருக்கு... . சீக்கிரமா வந்துடு இப்போ பதில் நீ கொடுக்கலயேன்னாலும்
எனக்கு தெரியும்… நீ வந்துடுவேனு ..

அவள் கன்னத்தை அனைவாய் பற்றி தன் கதகதப்பை அவளுக்கு கடத்தினான்.

ரொம்ப நாள் கழிச்சு அவள் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது.. …ஆனா முழு கண்ணீர் அல்ல… ஒரு நொடி மட்டும்… அடுத்து மறைந்துவிட்டது.

அவன் உடல் நடுங்கிச்சு,
“தயாவின் சின்ன சின்ன உணர்வுகளை ஆறாம் அறிவாலே அறிந்திருப்பவன்…”

அவன் மெல்ல சிரிச்சான்.
சிரிப்பிலே வலியும் இருந்தது… நம்பிக்கையும் இருந்தது.

“நீ திரும்ப வருதுக்கு
உன் உடம்பே முடிவு பண்ணிட்டுச்சு…
மூளையோட நெஞ்சோட எதோ ஒரு பக்கத்தில இன்னும் இந்த சூர்யாவுக்கான துடிப்பு இருக்கு……”


அவன் நெருங்கி அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு
“உன்னோட உயிர் ஓசை திரும்ப வரும் வரை நான் இங்க தான்…
என் ஹ்ருதயாவுக்காக…”


அந்த இரவும் மட்டுமல்ல அடுத்து வந்த இரவுகளும் சூர்யா அவள் கையைப் பிடிச்சே தூங்கினான்.​
 
Wow...surya nambikaya thaya kappathuvala .. illa surya ninaiva maranthiduvalo...so exiting next ep konjam sikkiram podunga sis♥️
Kandipa sis... என்ன நம்பி இவ்வளவு ஆர்வமா நீங்க updt கேக்கும் போது, ஆளே இல்லாத டீ கடைல உங்க ஒருத்தருக்காவே spl டீ போட்டு updt தர தோணுதுபா🤣🤣🤣
 
Next ud kanom sis♥️
Friday kandipa varum sis.. konjam health issue.. புது வருஷம் ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா fever hospital அப்டின்னு போச்சு... Recover aaga konjam naal eduthuchu.. திரும்பி பார்த்தா போகி பொங்கல் cleaning vela 🫧 🧼 🧹... Apdiye antha weekend ஓடிருச்சு. Husband um ✈️ கிளம்பிட்டாரு.. இனி கண்டிப்பா பதிவு போட்டு விடறேன்...
மன்னிச்சு...🙏🙏🙏
 
Back
Top
Developed and maintained by – Akeshya