Harini Vinoth
Writer
வெள்ளை சோளம் பால் கொழுக்கட்டை..Dear Harini, Please share the recipe. We will also try.
தேவையான பொருட்கள்
Whole வெள்ளை சோளம் – 250gm
பால் – 750 ml
சர்க்கரை – ¾ கப்
ஏலக்காய் – 3
அரிசி கொழுக்கட்டை மாவு 1 கப்
லேசாக மணம் வரும் வரை சோளம் வறுத்து ஆறவிடனும்
மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்து மாவை தனியாக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் 3கப் தண்ணீர் சேர்த்து 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் சோளம் மாவு 1கப் அரிசி மாவை சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறி கொதிக்கும் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவை பிசையவும்.
நன்கு பிசைந்து soft ஆக வேண்டும்.
பிறகு சிறு சிறு உருண்டை செய்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் 3கப் பால் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சிறிது குங்கும பூ சேர்த்தால் நிறம் அருமையாக இருக்கும்.
ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும் போது மிதமான தீயில் வைத்து கொதிக்கும் பாலில் உருண்டைகளை போடவும்.
10-12 நிமிடம் வேகவிடவும்.
மேலே மிதந்தால் வெந்துவிட்டது.
சற்று சுண்டவிடவும்.
உருண்டை மேலே வந்ததும் ஒரு உருண்டை எடுத்து கட் செய்து வெந்து விட்டதா பார்த்து, சக்கரை சேர்த்து 5நிமிடம் வேக விடவும்.
1sp அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். பால் திக்காக வரும்.
அவ்ளோ தான்... சுவையான பால் கொழுக்கட்டை தயார்...
