• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கேள்விக் குறிக்கு என் கேள்வி

அங்காள்

SH Crystal Member
கேள்விக் குறியே
உன் கேள்விக்கு பதில் கூற
என்னிடம் விடை இல்லை !

உன் குறியீட்டிற்கு விடை என்னவென்று
உன்னை நீ வினவியதுண்டோ ?

கேள்வியில்லாது விடை ஏதும்
உன்னிடம் உண்டோ ?

சிவன் முதல் சீவன் வரை விளக்கம் தேடிய நீ
உன் விளக்கம் யாதென்று அறிவாயோ ?

விடை தேடும் வினாவே
விடை சொல்லி வேர்த்ததுண்டோ ?

நினைவில் இருக்கட்டும் எல்லா
கேள்விகளும் பதிலுடன் பிறப்பதில்லை !
 

Attachments

  • 15.webp
    15.webp
    156.7 KB · Views: 1
Back
Top
Developed and maintained by – Akeshya