சாந்தி உடையப்பன்
Writer
வீட்டுத் திண்ணைகள்
விளக்கும் உண்மைகள்
பாட்டனின் பகுத்தறிவும்
அரசியலும் அறிவியலும்
அவதரித்த கருவூலம்
பாட்டியின் பாசமும்
பாக்கும் வெற்றிலையும்
இடிகல்லின் மடிபிடித்து
பண் இசைத்த நன்னிலம்
உட்கார்ந்த திண்ணையெல்லாம்
உளுத்து நாளாச்சு
நுகர்வோர் இல்லாது
நூற்றாண்டுக் கணக்காச்சு
வயோதிக மூச்சுக்களை
காப்பகத்தில் கட்டிப் போட
கண்ணீர் சுரந்தன - நாகரிகத்தில்
களவு போன திண்ணைகள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்- 28 (1)
கருவாராதனம்-28 (2)
விளக்கும் உண்மைகள்
பாட்டனின் பகுத்தறிவும்
அரசியலும் அறிவியலும்
அவதரித்த கருவூலம்
பாட்டியின் பாசமும்
பாக்கும் வெற்றிலையும்
இடிகல்லின் மடிபிடித்து
பண் இசைத்த நன்னிலம்
உட்கார்ந்த திண்ணையெல்லாம்
உளுத்து நாளாச்சு
நுகர்வோர் இல்லாது
நூற்றாண்டுக் கணக்காச்சு
வயோதிக மூச்சுக்களை
காப்பகத்தில் கட்டிப் போட
கண்ணீர் சுரந்தன - நாகரிகத்தில்
களவு போன திண்ணைகள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்- 28 (1)
கருவாராதனம்-28 (2)