அத்தியாயம் – 9
விடைபெறும் வெளிச்சம்!
அருவியின் சீற்றமும், பாறைகளில் மோதிச் சிதறும் நீர்த்துளிகளும் காட்டின் அழகைக் கூட்டியிருந்தாலும், சுனையாழியால் தன் ஏமாற்றத்தை என்ன முயன்றும் மறைக்க முடியவில்லை.
தன் தாத்தா அவர் காலம் வரை பாதுகாத்தும் தேடிக்கொண்டும் இருந்த ஒன்றைத் தான் கண்டுபிடித்துவிடலாம் என்று மகிழ்ச்சி கொண்டிருந்தாள். ஆனால், இந்த அருவியைப் பார்த்ததும், அது இல்லை என்றானதும் அந்த ஏமாற்றம் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
தாத்தாவின் அந்த ஏட்டுச் சுவடிக் குறிப்புகளை இறுக்கமாகப் பற்றியபடி, நீரலைகள் வந்து மோதும் ஒரு கரும்பாறையின் மீது சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
‘இவ்வளவு தூரம் ஆபத்துன்னு தெரிஞ்சும் காட்டுக்குள்ள தேடி வந்தோமே... கடைசியில இது வெறும் சாதாரணப் பூண்டையும் செடியையும் பார்க்கவும் தானா?’ என்ற எண்ணமே அவளது நெஞ்சை அடைத்தது.
அவளது கண்கள் கலங்கத் தொடங்கின.
காட்டின் அடர்ந்த மரங்களின் உச்சி வழியே தெரிந்த வானம் மெல்ல மெல்லத் தன் நிறத்தை மாற்றத் தொடங்கியது. மஞ்சள் நிற வெளிச்சம் மங்கி, காடு தன் இருண்ட போர்வையைப் போர்த்தத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அப்போது, முகிலின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த போன் திடீரென்று அதிர்ந்து ஒலித்தது.
அவர்கள் இருந்த மேடான பாறைப் பகுதியில் கிடைத்த அரைகுறை சிக்னலில் அம்மாவின் அழைப்பு வந்திருந்தது!
திரையைப் பார்த்ததும் முகிலின் உதட்டில் லேசான முறுவல் அரும்பியது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“முகில்... எங்கடா இருக்க? காலையில இருந்து கூப்பிட்டுட்டே இருக்கேன். நாட் ரீச்சபிள்னே வருது! திருநெல்வேலி கல்யாணத்துக்குப் போனவன் இன்னும் என்ன பண்றடா அங்க? இல்லை, அங்க இருந்து கிளம்பிட்டியா?” என்று மறுமுனையில் அம்மாவின் குரல் அதட்டலாக ஒலித்தது.
“நான் நல்லா இருக்கேன்மா... கல்யாண மண்டபத்துல இருந்து ஒரு மலையைப் பார்த்தேன்...” என்றவனின் பேச்சை இடைமறித்தார் அமுதவல்லி.
“மலையைப் பார்த்ததும் அதுமேல ஏறிப் பார்க்கணும்னு ஆசை வந்திருக்குமே உனக்கு!” என்றார் நக்கலாக.
“எஸ் ம்மா... அதேதான்! காலையில இருந்து காட்டுக்குள்ளதான் இருக்கேன். அதான் சிக்னல் இல்லை. அதனாலதான் உங்களுக்கு ரீச் ஆகியிருக்காது,” என்றான் முகில், அம்மாவின் நக்கலை ரசித்தபடி சன்னமான சிரிப்புடன்.
அடுத்த நொடியே மறுமுனையில் அம்மா பெருமூச்சு விடுவது தெளிவாகக் கேட்டது.
“அப்படி என்னதான் கிடைக்குதோ இப்படி மலையை ஏறிப் பார்க்கறதுல...”
முகில் லேசாகச் சிரித்துக்கொண்டே,
“அம்மா... இங்க வந்ததும் சும்மா இருக்க முடியலமா. அதான் கிளம்பிட்டேன். தனியா இல்லை, கூட வழிகாட்ட ஆள் இருக்காங்க. இப்போதான் நாங்க அடிவாரத்துக்குத் திரும்பக் கிளம்புறோம். நான் கீழ போயிட்டு நைட் நிதானமாகக் கூப்பிடுறேன்மா,” என்று அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு போனை வைத்தான்.
போனைப் பாக்கெட்டில் போட்டுவிட்டு, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் முகில். மணி மாலை 3:30-ஐத் தொட்டிருந்தது.
இன்னமும் சுனையாழி அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், மாறன் எங்கே என்று சுற்றிப் பார்த்தான்.
அந்த நேரம் மாறன் அருவியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘போன முறை வந்தபோது இவ்வளவு செடிகொடிகள் இல்ல. இந்த முறை மழை அதிகம் போல. அதான் தண்ணியும் அதிகமா இருக்கு...’ என்று மனதில் எண்ணியபடியே இருந்தவனைத் தொந்தரவு செய்யாமல், முகில் மெதுவாகச் சுனையாழியின் அருகே சென்றான்.
அவளின் ஏமாற்றத்தைப் பார்த்தவன்,
“சுனையாழி... இப்பதான் முதல் முறை ஏமாறீங்களா என்ன? இதுக்கு முன்னையும் தேடிட்டுத்தானே இருந்தீங்க? இப்பவும் நீங்க முயற்சி பண்ணீங்க. கிடைக்கல. ஆனா, காடு நமக்கு எல்லா நேரமும் ஏமாற்றத்தைத் தராது. நிச்சயம் ஒரு நாள் நாம தேடுறதைக் கொடுக்கும்.
இப்ப எழுந்திருங்க. வெளிச்சம் குறையத் தொடங்கிடுச்சு. நாம இங்க தங்குற பிளான்லயும் வரல. இந்த இருட்டுல தெரியாத காட்டுக்குள்ள இருக்கிறது ஆபத்து. இப்போதைக்கு வந்த வழியிலேயே கீழே இறங்குறதுதான் புத்திசாலித்தனம்,” என்றான்.
அதே நேரம் மாறனும் இவர்களிடம் வந்தான்.
“சார்... நாம இப்ப கிளம்பினாதான் கீழே இறங்க சரியா இருக்கும்.”
“ம்ம்... மாறன், கிளம்பலாம்,” என்றவன், சுனையாழியைப் பார்த்தான்.
“கிளம்பலாம் சார்... என்ன தாத்தா சொன்ன அந்த மூலிகையைக் கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்னு நம்பினேன். இந்தக் காட்டையும் அருவியையும் பார்த்ததும் நம்பிக்கை வந்தது. ஆனா, இப்படி வெறும் கையோட திரும்புவோம்னு நினைக்கல...” என்றவள், ஒரு பெருமூச்சோடு மெல்ல எழுந்து தன் தோள்பையைச் சரி செய்தாள்.
“ம்ம்... நீங்க சொல்றதுதான் சரி. இருட்டுறதுக்குள்ள கீழே இறங்கிடலாம்.”
“சரிங்க சார்... இருட்டுறதுக்குள்ள நாம அந்த கட்டுப் பண்ணிப் பார்த்த இடத்தைத் தாண்டியாகணும். வாங்க, வேகமா நடப்போம்,” என்று மாறன் முன்னால் செல்ல, மூவரும் வந்த வழியிலேயே அடிவாரத்தை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினர்.
அதே நேரம்...
முகிலும் குழுவினரும் மறைந்ததை உறுதி செய்துகொண்ட வசீகரன், மெதுவாகத் தான் மறைந்திருந்த அடர்ந்த புதருக்குப் பின்னிருந்து வெளிப்பட்டான்.
அவனுக்கு இந்தக் காடு புதியது இல்லை என்றாலும், இந்த அருவியை இப்போதுதான் அவனும் பார்க்கிறான்.
அவன் வைத்திருக்கும் வரைபடத்திலும் ஒரு நீர்நிலை இருந்தது. ஆனால், அது அருவியைப் போல அவனுக்குத் தோன்றவில்லை.
இது மிகப் பிரமாண்டமான அருவி இல்லை என்றாலும், மிகச் சிறியதும் கிடையாது. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
‘அடுத்தமுறை வரும்போது நிச்சயம் குளிக்கறதுக்காகவே வரணும்...’ என்று நினைத்தபடியே அந்த அருவியைச் சுற்றிப் பார்த்தான்.
மெதுவாக அடியெடுத்து வைத்து அருவியின் பாறை இடுக்குகளுக்கு அருகே சென்றவன், தன் கையிலிருந்த பழமையான மஞ்சள் நிற வரைபடத்தையும், தன் கண்ணெதிரே ஆர்ப்பரிக்கும் அருவியின் பாறை அமைப்புகளையும் மீண்டும் ஒருமுறை கூர்ந்து கவனித்தான்.
வரைபடத்தில் இருக்கும் அடையாளங்கள் இந்த அருவியோடு ஒத்துப்போகவில்லை என்பதைத் தன் தொல்லியலாளன் அறிவால் துல்லியமாக உணர்ந்துகொண்டான்.
‘ம்ம்... இந்த அருவி வரைபடத்துல இருக்குற இடம் இல்லை! ஆனா, இங்க வந்து பார்த்ததால எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருச்சு...’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
‘இந்நேரம் அந்த மூணு பேரும் மலையடிவாரத்தை நெருங்கியிருப்பாங்க... இப்போ நாம கிளம்பினா கரெக்ட்டா இருக்கும். இவனுங்களுக்குச் சந்தேகமும் வராது. நாமளும் இருட்டுறதுக்குள்ள காட்டை விட்டு வெளியேறிடலாம்!’
வசீகரன் தன் வரைபடத்தைப் பத்திரமாகப் பைக்குள் திணித்துவிட்டு, வந்த வழியிலேயே காட்டினூடாக ஊடுருவியபடி அமைதியாகக் கீழே இறங்கத் தொடங்கினான்.
முன்னால் நடந்துகொண்டிருந்த முகில்வர்மனின் கண்கள், தாங்கள் நடந்து வந்த பாதையை மீண்டும் கூர்ந்து கவனித்துக்கொண்டே வந்தன.
விடைபெறும் அந்த மாலை வெளிச்சத்தில், காட்டின் ஒவ்வொரு மரமும் பாறையும் புன்னகைத்தபடி அவர்களை வழியனுப்புவதைப் போல அவனுக்குத் தோன்றியது...
அந்த நால்வரையும் பார்த்து அந்தக் காடு இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அவர்களின் தேடலுக்கான வழியைக் காட்டியிருக்கும்...
தொடரும்...