அத்தியாயம் – 10
இருளின் ஒளி!
மலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி மூவரும் வந்து சேர்ந்தபோது, காட்டின் அடர்ந்த மரங்களுக்குள் இருள் முழுமையாகக் குடியேறியிருந்தது.
நீண்ட தூர மலையேற்றத்தின் சோர்வு மூவரின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தாலும், சுனையாழியின் முகத்திலிருந்த ஏமாற்றத்தின் சுவடு இன்னும் மிச்சம் இருந்தது. காட்டை விட்டு இருட்டுவதற்குள் வெளியேறிய திருப்தி மாறனின் முகத்தில் தெரிய, அவன் காரின் சாவியை எடுத்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
சுனையாழி எவ்வித மறுப்பும் இன்றி கதவைத் திறந்து முன் இருக்கையில் அமர, முகில் பின் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான். காரின் இன்ஜின் மெல்லிய சீறலுடன் உயிர்பெற்றது. காரின் முகப்பு விளக்குகள் (Headlights) அடர்ந்த இருளைக் கிழித்துக்கொண்டு, தார்ச் சாலையில் மஞ்சள் வெளிச்சத்தைப் பாய்ச்ச, மாறன் காரை நிதானமாக அடிவாரச் சாலையில் செலுத்தத் தொடங்கினான்.
ஆனால், இயற்கையின் விசித்திரமான விளையாட்டு அப்போதுதான் தொடங்கியது.
ஆகாயத்தின் ஒரு பகுதியில் சாம்பல் நிற மழை மேகங்கள் திரண்டு, காட்டின் மீது மெல்லிய சாரல் தூறலைப் போடத் தொடங்கின. அதே நேரத்தில், வானத்தின் மறுபகுதியில் இருந்த மேகப் பொந்துகளை விலக்கிக்கொண்டு, முழுப் பௌர்ணமி நிலவு தன் பிரகாசமான வெள்ளியொளியைப் பூமிக்குத் தாரை வார்த்துத் தந்தது.
ஒரு பக்கம் லேசான மழைச் சாரல்... மறுபக்கம் மேகங்களை ஊடுருவிப் பாயும் பௌர்ணமி நிலவொளி!
சாலையின் இருபுறமும் அடர்ந்து நின்ற காட்டின் மரக்கிளைகளின் வழியே கசிந்து வந்த அந்த நிலவொளி, காரின் ஜன்னல் கண்ணாடிகளில் விசித்திரமான வெளிச்சக் கீற்றுகளை வரைந்தது. காரின் முன் கண்ணாடியில் சொட்டுச் சொட்டாக மழைத்துளிகள் வந்து விழ, நிலவொளியின் வெளிச்சத்தில் அந்த நீர்த்துளிகள் குட்டி வைரங்களைப் போலப் பளபளத்தன.
மாறன் காரின் வைப்பரை இயக்க, ரப்பர் பிளேட் கண்ணாடியைத் துடைக்கும்போதெல்லாம், அந்த நிலவொளியும் சாரல் மழையும் இணைந்து காட்டை ஒரு மாய உலகமாகவே மாற்றியமைத்திருந்த காட்சி பேரழகாகத் தெரிந்தது.
சுனையாழி தன் பக்க ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கிவிட்டாள். ஈரமான மண்ணின் வாசமும், காட்டின் குளிர்ந்த காற்றும் காரின் உள்ளே நுழைந்து நாசியை நிறைத்தது.
வெளியே தெரிகின்ற அந்த அற்புதக் காட்சியைப் பார்த்தபடி, சுனையாழி தற்காலிகமாகத் தன் ஏமாற்றத்தை மறந்தாள்.
மாறன், இங்க பாருங்க... முகிலன், நீங்களும் இங்க பாருங்க. காடு இருக்கும் பகுதியில மட்டும் மழை பெய்யுது... அதுவே இந்தப் பக்கம் பாருங்க, நிலாவெளிச்சத்தை! என்று காருக்கு மறுபக்கம் இருந்த காட்டைக் காட்டினாள்.
முகிலும் மாறனும் ஒன்றுபோலவே,
"அட, ஆமா..."என்றனர்.
முகில், இந்த மலையில பார்த்த அருவியை இங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல... இப்ப இப்படி ஒரு விஷுவல் ட்ரீட்... நிலா ஒளி இவ்வளவு பிரைட்டா இருக்கறதைப் பார்த்தா, இன்னைக்கு பௌர்ணமியா இருக்கும் போல!என்றான், கண்முன்னே தெரிந்த இருவேறு சூழ்நிலைகளையும் ரசித்தபடி.
மாறனும், ஆமாம் சார்... இந்த விதமா மழையும் நிலாவெளிச்சமும் ஒண்ணா இருக்கறதை இப்பதான் நானும் பார்க்கறேன்,என்றான்.
மூவரும் அடுத்து எதுவும் பேசாமல், காணக்கிடைக்காத அந்த அழகை ரசிக்கத் தொடங்கினர். மாறனின் கையில் கார் நிதானமாகப் பயணித்துக்கொண்டே இருந்தது.
அந்த அழகு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்து மறைந்து போனது. நிலா தன் ஒளியை இன்னும் இன்னும் பிரகாசமாகப் பூமிக்கு அனுப்பத் தொடங்கியது.
சுனையாழியின் மனம் தானாகவே பின்னோக்கிச் சென்றது. இன்றைய நாளை அசைபோடத் தொடங்கினாள்.
இப்படி இருவரைச் சந்திப்பாள் என்றோ, காட்டில் விலங்கையும் அருவியையும் பார்ப்பாள் என்றோ அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
எப்பொழுதும்போல ஒரு குறிப்பிட்ட தூரம் பார்ப்பாள். அவளுடன் வேந்தன் வந்தால் இன்னும் கொஞ்சம் தூரம்... அவ்வளவுதான்.
அருவியை இன்று பார்த்ததும், தான் தேடிய மூலிகை கிடைத்துவிடும் என்று அதிகமாகவே நினைத்துவிட்டாள் போல. அதனால்தான் ஏமாற்றமும் அவளுக்கு அதிகமாக இருந்தது.
இப்போது அவளது சிந்தனை நிதானமடையத் தொடங்கவும், ஏமாற்றமும் விலகத் தொடங்கியது.
'இவ்வளவு தூரம் தேடியும் அந்த ஏட்டில் இருந்ததுபோல இலையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே... தாத்தா எழுதி வச்ச சுவடியை நாம சரியாப் படிச்சுப் புரிஞ்சுக்கலையா? நான் ஏதாச்சும் இடத்தை மிஸ் பண்ணிட்டேனா... இல்ல, சுவடியோட வரிகளுக்கு நான் நினைச்ச அர்த்தமே தப்பா?' என்று அவளுக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
காரை ஓட்டிக்கொண்டிருந்த மாறன் சாலையில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தியிருக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்த முகில்வர்மனின் கூர்மையான பார்வைகள் காரின் ஜன்னல் வழியே வெளியே பரவியிருந்த காட்டை அலசிக்கொண்டிருந்தன.
கார் மலைப்பாதையின் ஒரு கூர்மையான வளைவைக் கடந்து, தார்ச் சாலையின் நேர்ப் பகுதிக்கு வந்தது.
அப்போதுதான் முகிலின் கண்கள் சாலையோர நிழலில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தின் மீது விழுந்தன!
அடர்ந்த மரங்களின் நிழலில், சாலையின் ஓரப் பகுதியில் ஒரு பழைய கார் தனியாக நிறுத்தப்பட்டிருந்தது. மாறன் அந்தக் காரைக் கவனிக்காமல் கடந்து செல்ல, முகில் ஜன்னல் வழியே தன் தலையைச் சற்றுச் சாய்த்து அந்தக் காரைக் கூர்ந்து கவனித்தான்.
அடுத்த நொடியே முகிலின் மூளையில் ஒரு மின்சாரப் பொறி தட்டியது!
'இந்த கார்...'
முகிலின் மனதுக்குள் மெல்லிய அதிர்வு எழுந்தது.
காலையிலும் இந்த இடத்தைக் கடக்கும்போது இந்தக் கார் இதே இடத்தில்தான் நிறுத்தப்பட்டிருந்தது!
இப்பவும் கார் இங்கேயேதான் நிக்குது!
'ஒருவேளை கார் ரிப்பேரா இருக்குமோ... மாடலும் பழைய மாடல் போல இருக்கு... அப்படி இல்லனா, என்னைப் போலவே வேற யாராவது ட்ரெக்கிங் வந்து இருப்பாங்களோ!'
முகிலின் யோசனை தீவிரமடைந்த அதே கணத்தில், அவனுக்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத உள்மன உந்துதல் ஏற்பட்டது.
அவன் காரின் பின்னோக்குக் கண்ணாடியின் (Rear-view mirror) வழியே அவர்கள் கடந்து வந்த அந்த அடர்ந்த காட்டுப் பாதையைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தான்.
சாரல் மழை நின்று, நிலவொளியின் பிரகாசத்தில் அந்தப் பாதையின் வளைவில், அடர்ந்த மரச் செறிவுகளுக்கு நடுவே... சற்றுத் தொலைவில்... ஏதோ ஒரு சிறு ஒளி 'பளீச்' என மின்னி மறைந்தது!
முகிலின் புருவங்கள் கடுமையாகச் சுருங்கின.
'நாங்க மூணு பேர் மட்டும் தான் இந்தக் காட்டுக்குள்ள இருந்தோம்னு நினைச்சேனே... ஆனா அப்படி இல்லை போல. எங்களையும் தாண்டி, எங்களுக்குத் தெரியாம இன்னும் யாரோ கூடவே இந்தக் காட்டுக்குள்ள இருந்திருக்காங்க... ஒருத்தரா? இல்ல பலபேரா?'
என்று முகில் யோசிக்கத் தொடங்கினான்.
அதே நேரம்...
காட்டின் அடர்ந்த பகுதியிலிருந்து மெதுவாக அடிவாரத்தை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தான் 'வசீகரன்'.
தன் கை மின்விளக்கின் வெளிச்சத்தைச் சுற்றிலும் அடிக்காமல், தரைப்பகுதியில் மட்டுமே அடித்து, கவனமாக அடியெடுத்து வைத்தான். அவனது கை மின்விளக்கின் அந்தச் சிறிய மஞ்சள் வெளிச்சக் கீற்றுதான், அடர்ந்த மரங்களின் இடுக்கு வழியே வெளியே ஒரு நொடி மின்னி மறைந்திருந்தது.
அடிவாரத்தைச் சேர்ந்ததும், தன் பழைய கார் அதே இடத்தில் பத்திரமாக நிற்பதைக் கண்டு, அவனது உதடுகளில் ஒரு திருப்தியான புன்னகை அரும்பியது.
வந்தவனுங்க பேச்சைக் கேட்டு, அவனுங்களைப் பின்தொடர்ந்ததுல இங்க ஒரு அருவியைக் கண்டுபிடிச்சதுதான் மிச்சம்...
ஒரு பொண்ணுவேற தனியா வந்திருந்தா... ஏதோ மூலிகையைத் தேடின்னு...
தேடிய மூலிகை கிடைக்கலன்னு ஏமாந்து கிளம்பிட்டானுங்க...
ஆனா, எனக்கு அந்த அருவியைப் பார்த்ததும் ஒரு தெளிவு கிடைச்சிருச்சு.. என்று முணுமுணுத்த வசீகரன், காரின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தான்.
தன் தோள்பையிலிருந்த பழமையான மஞ்சள் நிற வரைபடத்தைப் பத்திரமாக எடுத்து, காரின் டேஷ்போர்டில் வைத்தான்.
'இன்னைக்கு ராத்திரிக்கு ஹோட்டலில் தங்கிட்டு, நாளைக்குக் காலையிலேயே ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான். இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேல ஓடிப்போச்சு... இப்ப போயிட்டு இன்னும் கொஞ்ச நாள் அந்த வரைபடத்தை அலசிப் பார்க்கணும்.'
என்று நினைத்தபடியே, இன்ஜினை ஸ்டார்ட் செய்து, முகிலின் கார் சென்ற அதே திசையை நோக்கித் தன் காரையும் நிதானமாகச் செலுத்தத் தொடங்கினான் வசீகரன்!
தொடரும்...