அத்தியாயம் - 37
நினைவின் இரண்டாம் வாசல்!
“இது… ஃபர்ஸ்ட் டைம்.”
முகில்வர்மன் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தைகள், இளமாறனின் காதுகளில் விழுந்த அடுத்த நொடியே…
அவனுடைய பார்வை தன்னிச்சையாக அருவியை நோக்கித் திரும்பியது.
இந்த நீரின் சத்தம்…
அதே ஆர்ப்பரிப்பு…
சில நிமிடங்களுக்கு முன்பு முகில்வர்மன் அதற்குள் மறைந்திருந்த விதமும்…
இளமாறனின் மனம் அவன் சொன்ன வார்த்தையை ஏற்க மறுத்தது.
‘ஃபர்ஸ்ட் டைம்…?’
இப்போது அவன் கண்கள் நீரின் மீது நிலைத்தன.
‘இல்லை…’
அவனுக்குள் இருந்து ஒரு குரல் உரக்க எழுந்தது.
‘இது முதல் முறை இல்லை…’
அவனுடைய நெற்றியில் மீண்டும் வலி மெல்லப் பரவியது.
அருவியின் நீர் விழும் ஓசை…
சுற்றிலும் படர்ந்திருந்த மரங்கள்…
ஈரமான பாறைகள்…
எல்லாமே திடீரென்று அவனுக்குப் புதிதாகத் தெரியவில்லை.
மாறாக…
பல ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய ஓர் இடத்தைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு.
அவன் இமைக்காமல் நீரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்த நொடி…
அவனுடைய கண்களுக்கு முன்னால் இருந்த நிகழ்காலம் மெல்ல மங்கத் தொடங்கியது.
அந்த இடத்தில் வேறொரு காட்சி தோன்றியது.
அதே அருவி.
ஆனால்…
காலம் பின்னோக்கிச் சென்றது போல இருந்தது.
மரங்கள் இன்னும் அடர்த்தியாக இருந்தன.
அருவியைச் சுற்றிலும் மனிதர்களின் காலடித்தடங்கள் அதிகம் தென்பட்டன.
அருவியின் கரையில் ஒருவன் நின்றிருந்தான்.
அவனுடைய பார்வை முழுவதும் நீரின் மீதே இருந்தது.
“இளவரசே…”
என்று மெதுவாக அழைத்தான்.
பதில் இல்லை.
அவன் இன்னும் சில அடிகள் நீரில் முன்னேறினான்.
நீருக்குள் பார்த்தான்.
அங்கேயும் அவனைக் காணவில்லை.
“இளவரசே…”
இந்த முறை அவனுடைய குரலில் பதற்றம் கலந்திருந்தது.
அவன் நீருக்குள் இறங்கினான்.
நீரின் அடிப்பகுதியை நோக்கிக் கூர்ந்து பார்த்தான்.
அவனுடைய நெஞ்சம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
“இளவரசே…!”
இப்போதோ அவனுடைய குரல் அருவியின் ஓசையையே தாண்டிச் சென்றது.
அந்த நொடியில்தான்—
நீரின் நடுவே ஒரு அசைவு.
அவன் உறைந்து நின்றான்.
நீருக்குள் இருந்து மெல்ல ஒரு முகம் மேலெழுந்தது.
அந்த முகத்தைப் பார்த்தவுடன், அவனுடைய கண்களில் இருந்த பயம் ஒரே நொடியில் மறைந்துபோனது.
நீரிலிருந்து மேலெழுந்தவனின் முகத்தில் வழிந்த நீரை கைகளால் வழித்தபடியே, எதிரில் நின்றவனைப் பார்த்தான்.
“ஏன் இவ்வளவு பதட்டம், நம்பியா?”
நம்பியான் சில நொடிகள் அவனைப் பார்த்தபடியே நின்றான்.
“வேள்வியாளரே…”
அவனுடைய குரல் நடுங்கியது.
அந்த அழைப்பே எதிரில் நிற்பவன் எத்தனை உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான் என்பதை வேள்வியாளனுக்கு உணர்த்தியது.
வேள்வியாளனின் முகத்திலும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது.
“நான் இங்கேதானே இருக்கின்றேன்…”
அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக அவன் மெதுவாகக் கூறினான்.
நம்பியான் எதுவும் சொல்லவில்லை.
அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
அவனுடைய உயிர் மீண்டும் உடலுக்குள் வந்தது போல இருந்தது.
“மாறன்…”
என்ற முகில்வர்மனின் குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்திற்குள் இழுத்தது.
இளமாறன் திடீரென்று கண்களைத் திறந்தான்.
அவன் மூச்சு சற்றே வேகமாக இருந்தது.
முகில்வர்மன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்னாச்சு?”
இளமாறன் பதில் சொல்லவில்லை.
அவனுடைய பார்வை மீண்டும் முகில்வர்மனின் முகத்தில் நிலைத்தது.
அந்த முகம்…
சில நொடிகளுக்கு முன்பு நீரிலிருந்து மேலெழுந்த அந்த முகத்தோடு ஒன்றாகிப் போனது.
அவனுடைய உதடுகள் மெல்ல அசைந்தன.
“நம்பியா…”
முகில்வர்மனுக்குப் புரியவில்லை.
“என்ன சொன்னீங்க?”
இளமாறன் தன்னையும் அறியாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய மனதிற்குள் ஒரு பெயர் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
வேள்வியாளன்.
அதே நேரத்தில்…
முகில்வர்மனின் மிக அருகே நீரில் நின்றிருந்த வசீகரன் மனதிலும் ஒருவிதமான மாற்றம் நிகழ்ந்தது.
சில நிமிடங்களாக முகில்வர்மனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய கண்களுக்கு முன்னால் இருந்த காடு மறைந்து…
மிகப் பிரமாண்டமான ஓர் அரண்மனை விரியத் தொடங்கியது.
உயர்ந்த மதில்கள்.
நீண்ட தூண்கள்.
அரண்மனையின் முற்றத்தில் பதற்றத்துடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த ஓர் இளைஞன்.
அவனுடைய நடையிலும் முகத்திலும் வெளிப்படையாகக் கவலை தெரிந்தது.
“காவலனே!”
என்றவனின் குரலுக்கு ஒரு வீரன் விரைந்து வந்து தலைவணங்கினான்.
“அரசே…”
“இளவரசரை விடியற்காலையிலிருந்து கண்டீரோ?”
என்று கேட்டான்.
காவலன் தலைகுனிந்தான்.
“இல்லை, அரசே.”
என்றவனின் குரலில் சிறு பதட்டம் ஒட்டிக்கொண்டது.
“காலை உணவின்போதும் இளவரசர் அரண்மனையில் இல்லையே?”
“ஆம், அரசே.”
என்றவனின் குரலில் இப்போது பயம் ஒட்டிக்கொண்டது.
“நண்பகல் உணவிற்கும் வரவில்லை… கவனித்தீர்களா?”
என்றவனின் குரலில் இப்போது கடுமை ஏறியிருந்தது.
“ஆம், அரசே.”
என்றவனின் குரல் பயத்தில் நடுங்கியது.
அரசனாகப்பட்டவனின் முகத்தில் இருந்த கடுமை மேலும் அதிகரித்தது.
“இப்போது பொழுது சாய்கின்றது. இன்னும் இளவரசரைப் பற்றிய செய்தி ஏதும் இல்லையா?”
என்றவனின் குரலில் அப்பட்டமான அரச அதிகாரம் வெளிப்பட்டது.
“இல்லை, அரசே…”
என்றவனின் குரல் நடுக்கத்திற்கு ஏற்ப, இப்போது அவனுடைய உடலும் நடுங்கத் தொடங்கியது.
அந்த அரண்மனையின் விசாலமான அறை முழுவதும் சில நொடிகள் அமைதி நிலவியது.
அரசனாகப்பட்டவன் வேகமாகத் திரும்பினான்.
மன்னரும் அரசியாரும் இருந்த மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கியவனின் குரல், தந்தையை அழைக்கத் தொடங்கியது.
“தந்தையாரே…”
மன்னர் அவனை நோக்கினார்.
“என்ன ஆயிற்று, பெருவேள்தாத்தா?”
“இளவரசர் இன்றும் விடியற்காலையிலிருந்து காணவில்லை.”
மன்னரின் முகத்தில் அப்பட்டமான கடுமை தோன்றியது.
“எங்கு சென்றிருப்பான்?”
பெருவேள்தாத்தன் சில நொடிகள் அமைதியாக நின்றான்.
“ஆம், மன்னா… அந்தக் காட்டருவிக்குச் சென்றிருக்கக்கூடும்.”
மன்னர் உடனே எழுந்தார்.
“காவலரை உடன் அழைத்துச் செல்.”
“வேண்டாம், தந்தையாரே. நான் சென்று அழைத்து வருகின்றேன்.”
அவன் விரைந்து வெளியே வந்தான்.
அரண்மனை வாயிலில் காத்திருந்த குதிரையின் மீது ஏறினான்.
குதிரை வேகமாகப் புறப்பட்டது.
குதிரையின் குளம்பொலி…
காட்டுப்பாதை…
மரங்களுக்கிடையே பாய்ந்த காற்று…
எதுவுமே அவனை அமைதிப்படுத்தவில்லை.
‘எனக்கு இளையவனாகப் பிறந்துவிட்டு, இவன் மட்டும் ஏன் இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறான் என்றே புரியவில்லை… இளவரசனாகவா நடந்துகொள்கிறான்?
சாதாரண குடிமக்களைப் போல அவர்களுடன் பழகுவதும்…
அவர்களோடு சாப்பிடுவதும்…
அவர்களின் அருகில் தோளில் கைபோட்டபடி அமர்வதும்…’
பெருவேள்தாத்தனின் மனதில் இந்த எண்ணங்கள், அவன் வந்த குதிரையின் வேகத்தோடு பயணித்தபடியே கூடவே வந்தன.
சிறிது நேரத்தில் அருவியின் ஓசை அவனுடைய காதுகளில் விழுந்தது.
அவன் குதிரையிலிருந்து இறங்கினான்.
சுற்றிலும் பார்த்தபடி,
“வேள்வியாளா…”
என்று குரல் கொடுத்தான்.
பதில் இல்லை.
மீண்டும் அழைக்கப் போன அந்த நொடியில்—
அவன் தோள்மீது ஒரு கை பதிந்தது.
பெருவேள்தாத்தனின் நெஞ்சுக்குள் இருந்த பாரம் மெல்ல விலகுவதை அவன் உணர்ந்தான்.
“அண்ணா…”
அவனுடைய காதில் விழுந்த அந்த ஒரு வார்த்தையும்
அந்தக் குரலும் கேட்டதும் வசீகரனின் கண்கள் கலங்கின.
அவன் சில அடிகள் முன்னேறினான்.
அந்த முகத்தைப் பார்த்தபடியே நின்றான்.
அவன் மனதில் இருந்த பயம்…
அன்பு…
பாசம்…
எல்லாமும் ஒரே நேரத்தில் எழுந்தன.
“அண்ணா…”
மீண்டும் அந்தக் குரல் எதிரொலிப்பதைப் போல இருக்க…
வசீகரன் திடீரென நிகழ்காலத்திற்குத் திரும்பினான்.
அவன் கண்களுக்கு முன்னால் இப்போதும் அந்த அருவிதான்.
ஆனால்…
அவனுடைய பார்வை நேராக முகில்வர்மனின் முகத்தில் நிலைத்திருந்தது.
முகில்வர்மன் எதேச்சையாக அவனைப் பார்த்தான்.
அந்தப் பார்வை…
வசீகரனின் நெஞ்சுக்குள் வேள்வியாளனை முன் நிறுத்தியது.
வேள்வியாளன்.
அந்தப் பெயர் அவனுடைய நினைவுக்குள் மீண்டும் மின்னியது.
அதனுடன் சேர்ந்து…
அந்த அரண்மனை.
அரச குடும்பம்.
‘அண்ணா’ என்றழைத்த வேள்வியாளன்.
அவனுக்கு அண்ணனாக இருக்கும் நான்…
அவர்களுக்குள் இருந்த பாசம்.
அண்ணனைத் தேடி ஓடிய நாட்கள்.
தம்பியுடன் கழித்த தருணங்கள்.
அவனுடைய கண்கள் கலங்கின.
“தம்பி…”
இந்த முறை அந்த வார்த்தை மிகத் தெளிவாக வெளிவந்தது.
முகில்வர்மன் உறைந்து நின்றான்.
அவனுடைய மனதிலும் ஏதோ ஒன்று உடைந்தது.
‘தம்பி…’
அந்த வார்த்தை அவனுடைய நினைவுக்குள் விழுந்தது.
கலங்கலாக அவனைத் தேடி ஓடிய அந்த முகம்.
அவன் மீது அந்த முகம் கொண்டிருந்த பாசம்.
எல்லாம்…
சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் போல ஒன்றன்பின் ஒன்றாக அவனுடைய நினைவுக்குள் விழத் தொடங்கின.
முகில்வர்மன் தன் நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.
“தம்பி…”
அவனுடைய வாயிலிருந்து தன்னிச்சையாக அந்த வார்த்தை வெளிவந்தது.
வசீகரன் அவனைப் பார்த்தான்.
இருவருக்கும் இடையே சில நொடிகள் எந்த வார்த்தையும் இல்லை.
ஆனால்…
அவர்களின் கண்கள் மட்டும் பேசின.
ஒருவன் தன் அண்ணனைப் பார்த்தான்.
மற்றொருவன் தன் தம்பியைப் பார்த்தான்.
வசீகரனுக்கு நினைவுகள் பெரும்பாலும் திரும்பி வந்திருந்தன.
ஆனால்…
அந்த வாழ்க்கையின் இறுதியில் இருந்து மீண்டு வந்த முகில்வர்மனுக்கு இப்போதுதான் நினைவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவப்பட்டன.
இன்னும் இருளுக்குள் மறைந்திருந்த சில உண்மைகள் வெளிவந்தன.
கடைசிச் சுவடு மொத்தமாக விழித்துவிடும்…
அந்த இருளைத் தொட முயன்ற ஒவ்வொரு முறையும் அவர்களின் மனம் தன்னிச்சையாகப் பின்வாங்கியது.
அதே நேரத்தில்…
சுனையாழி அருவியின் கரையில் நின்றிருந்தாள்.
அவளுடைய பார்வை நீரின் மீது இருந்தது.
அவளுக்கும் அந்த இடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது.
“நான்…”
அவள் மெதுவாகத் தன் நெஞ்சைத் தொட்டாள்.
“இந்த இடத்துக்கு முன்னாடியே வந்திருக்கேனா…?”
அவளுக்கே அந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை.
அடுத்த நொடி…
அவளுடைய கண்களுக்கு முன்னால் இருந்த காட்சி மாறியது.
அதே அருவி.
ஆனால் வேறொரு காலம்.
அருவியின் கரையில் ஒரு பெண் நின்றிருந்தாள்.
நீண்ட கூந்தல்.
பழங்கால அணிகலன்கள்.
மென்மையான முகம்.
அவள் அருவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுனையாழியின் மூச்சு நின்றது.
அந்தப் பெண் மெதுவாகத் திரும்பினாள்.
முதலில் அவளுடைய கண்கள் தெரிந்தன.
பிறகு முகம்.
அடுத்த நொடி முழு முகமும் தெளிவாகத் தெரிந்தது.
சுனையாழி உறைந்து நின்றாள்.
அந்த முகம்…
வேறு யாருடையதும் இல்லை.
அவளுடையதே.
அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணின் கண்களும்…
அவளுடைய கண்களே.
அந்த முகமும்…
அவளுடைய முகமே.
அந்த நொடி சுனையாழியின் உள்ளுக்குள் ஒரு பெயர் மின்னியது.
காந்தள்மங்கை…
அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.
அவள் தன் முன்னால் தெரிந்த அந்தப் பெண்ணை நோக்கி ஒரு அடியெடுத்து வைக்க…
அந்தக் காட்சி மெல்ல மங்கத் தொடங்கியது.
சுனையாழி அசையாமல் நின்றாள்.
அவளுடைய கண்களில் இன்னும் அந்த முகமே இருந்தது.
அவளுடைய சொந்த முகம்.
அந்த அருவிக்கரையில்…
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு…
நின்றிருந்த அந்தப் பெண்…
வேறு யாருமல்ல.
அவளே.
தொடரும்…