அத்தியாயம் – 34
பழகிய நீரின் உணர்வு!
முகில்வர்மன் சில நொடிகள் அமைதியாக இளமாறனைப் பார்த்தான்.
“மாறன், ஆர் யூ ஓக்கே? உங்களால நடக்க முடியுமா? மரத்தோட வேர் உங்களைத் தட்டி விட்டுச்சே... நடக்க முடியுமா?” எனவும்...
இளமாறன் முன்னால் நடந்தபடியே, “இப்போ ஓக்கேதான், முகில் சார். வாங்க.” என்றான்.
அவன் கால்கள் பாதையைத் தேடவில்லை.
பாதையே அவன் கால்களை அழைத்துச் செல்வதைப் போலிருந்தது.
சில நொடிகளுக்கு முன்பு அவன் மனதுக்குள் தோன்றிய அந்தக் குழப்பமான காட்சிகள் இன்னும் முழுமையாக மறையவில்லை. ஆனால், அவற்றைப் பற்றி யாரிடமும் பேசாமல், எதுவும் நடக்காதது போலவே அவன் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தான்.
அவனைப் பின்தொடர்ந்தான் முகில்வர்மன்.
அவனை அடுத்து சுனையாழியும், யாழ்வேந்தனும் நடந்தனர். இவர்களை முன்னே விட்டு கவனித்தபடியே, அவர்களுக்குப் பின்னால் வசீகரனும் வந்துகொண்டிருந்தான்.
அவனுடைய மனதிலும் சில நொடிகளுக்கு முன்பு கேட்ட அந்தப் பெயர் இன்னும் அலைமோதிக்கொண்டிருந்தது.
வேள்வியாளன்.
அந்தப் பெயர் ஏன் அவனுக்குள் இவ்வளவு ஆழமாக இறங்கியது என்று அவனுக்கே புரியவில்லை.
சுனையாழியும் அமைதியாகவே நடந்தாள்.
மூலிகையைத் தொட்ட அந்த நொடியில் பார்த்த காட்சியும், கேட்ட அந்தப் பெண்ணின் குரலும் இன்னும் அவள் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.
ஆனால், முகத்தில் அதை வெளிப்படுத்தவில்லை.
அவர்களுக்குள் யாரும் எதையும் கேட்கவில்லை.
அவர்கள் நடந்துகொண்டே இருந்தார்கள்.
அவர்களோடு வந்திருந்த யாழ்வேந்தன் மட்டும் மற்றவர்களைவிட வேறொரு மனநிலையில் இருந்தான்.
அவன் இந்தக் காட்டை முதன்முறையாகப் பார்க்கிறான்.
அதனால் தான் அவனுடைய பார்வையில் வியப்பும் ஆர்வமும் இருந்தது.
அந்த நேரத்தில்—
அருவியின் ஓசை அவர்களை நெருங்க நெருங்க, காட்டின் அமைதி மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இளமாறனை அடுத்து வந்த முகில்வர்மனின் பார்வைக்கு விருந்தானது அந்த அருவி!
முகிலை அடுத்து வந்த சுனையாழிக்கு ஒரு நொடி மூச்சே நின்றுபோனது... அத்தனை அருகில் அருவியைப் பார்க்கவும்...
யாழ்வேந்தனைச் சொல்லவே வேண்டாம். கண்ணே முகமானதைப் போல, அத்தனை பெரியதாய் மலர்ந்திருந்தன அவன் கண்கள்!
வசீகரனுக்கும் அப்படியே இருந்தது. ஆனால், நொடியில் அவனது மூளை நிகழ்காலத்துக்கு வந்து, அவன் முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டியலிட்டது.
முன்பு அங்கிருந்து பார்த்தபோது, அருவி சற்றுத் தொலைவில் இருப்பது போலவும், அதன் கீழ்ப்பகுதியை நேராக அடைய முடியாதது போலவும் இருந்தது.
இப்போதோ அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து பார்த்தபோது, அருவி அவர்களுக்கு மிகவும் அருகில் இருப்பது போலத் தெரிந்தது.
அதுமட்டுமல்ல—
இந்தப் பக்கத்திலிருந்து கீழே இறங்கி தண்ணீரை அடைவதற்கே இயற்கையான பாதை ஒன்று இருந்தது.
முகில்வர்மன் மெதுவாக அந்தப் பாதையை நோக்கி நடப்பது அவன் கவனத்தில் பதிந்தது.
“வியூவே வேற மாதிரி இருக்கு இல்ல, மாறன்?” என்று மாறனிடம் கேட்டான்.
அவன் சொன்னது சுனையாழிக்குக் கேட்க, அவள் அவன் அருகில் வந்து நின்றபடியே,
“எஸ். முன்னாடி பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.” என்றாள்.
“அப்போ நாம பார்த்தது அருவியோட ஒரு பக்கம் மட்டும்தான்.” என்றான் மாறன்.
முகில்வர்மன் நீர்த்தாரையை உற்றுப் பார்த்தபடி இருக்க,
இளமாறனும் சுற்றிலும் பார்த்தான்.
“இந்தப் பக்கம் இருந்து தண்ணிக்குள்ள இறங்கவும் வசதியா இருக்கு, சார்.”
“ஆமா.”
முகில்வர்மன் அதை கவனித்தது போல, ஆம் என்பதுபோல தலையசைத்தான்.
“அந்தப் பக்கம் இருந்து இறங்கவே முடியாது. இப்ப இந்தப் பக்கம் நாம இருக்கிற இடத்துல இருந்து நேரா தண்ணீர்ல இறங்குறதுக்கு இங்க இயற்கையாவே ஒரு பாதை இருக்கு.”
யாழ்வேந்தன் எதுவும் பேசாமல் அந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தான்.
அவன் நிச்சயம் இப்படி ஒரு அருவியை இந்தக் காட்டுக்குள் எதிர்பார்க்கவில்லை. சுனையாழி சொன்னபோதும், ஏதோ சின்னதா இருக்கும்னுதான் நினைத்தானே தவிர, இப்படி ஒரு பிரமாண்டத்தை கற்பனை கூட பண்ணியதில்லை.
அதனால் அவன் பார்வையில் இருந்த வியப்பு மட்டும் அதிகமாகியபடியே இருந்தது.
முகில்வர்மன் மீண்டும் அருவியைப் பார்த்தான்.
“முன்னாடியைவிட இப்போ தண்ணியும் அதிகமா வர்ற மாதிரி தெரியுது.”
“மழையால இருக்குமோ?”
சுனையாழி கேட்டாள்.
“இருக்கலாம். மேல மலைப்பகுதியில் நல்ல மழை பெய்திருந்தா, நீரோட்டம் இப்படி அதிகமா இருக்கலாம்.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே யாழ்வேந்தன் தண்ணீரை நோக்கி இறங்கத் தொடங்கிவிட்டான்.
“யாழா, பார்த்து இறங்கு!”
சுனையாழி சிரித்தபடி சொல்லவும்...
“எல்லாம் எனக்குத் தெரியும்.”
என்று சொல்லிவிட்டு அவன் தண்ணீருக்குள் இறங்கினான்.
அடுத்த சில நொடிகளில் முகில்வர்மனும், இளமாறனும், சுனையாழியும் தண்ணீரை நோக்கி இறங்கினர்.
வசீகரன் மட்டும் சற்று பின்னால் அவர்களைக் கவனித்தபடி நின்றுகொண்டிருந்தான்.
அவனுடைய கண்கள் மட்டும் அவர்களிடம் ஒரு பார்வையும், அவன் கையில் இருந்த பழைய வரைபடத்தில் ஒரு பார்வையுமாக இருந்தன.
அவர்களின் கவனத்தை ஈர்க்காதபடி வரைபடத்தை விரித்தவன், அதைச் சுற்றியிருந்த இயற்கை அமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தான்.
மலைச்சரிவு.
பாறைகளின் அமைப்பு.
நீர்வீழ்ச்சி விழும் திசை.
அருவியின் கீழ்ப்பகுதி.
எல்லாமே அவன் வைத்திருந்த குறிப்புகளோடு பெருமளவுக்கு பொருந்தியது.
ஆனால்—
ஒரு விஷயம் மட்டும் சரியாக அமையவில்லை.
வரைபடத்தைச் சற்றுத் திருப்பிப் பார்த்தான்.
மீண்டும் அருவியைப் பார்த்தான்.
அவனுடைய புருவங்கள் சுருங்கின.
“இது இருக்கணுமே...” என்று சில சின்னங்களைத் தேடியபடி தனக்குள்ளாகவே முனுமுனுத்தான்.
அந்த நேரத்தில் அவனுடைய கைப்பேசி ஒலித்தது.
மதன்.
வசீகரன் உடனே அழைப்பை ஏற்றான்.
“சொல்லு.”
“சார், நீங்க இருக்குற இடத்துல டவர் சரியா கிடைக்கல. நான் பேசுறது கேக்குதா?”
“கொஞ்சம் கேக்குது. சொல்லு.”
“சுனையாழியைப் பற்றி கேட்ட தகவல்கள் கிடைச்சிருக்கு, சார்.”
வசீகரன் சுற்றிலும் பார்த்தான்.
அருகில் இருந்தவர்கள் யாரும் அவனை கவனிக்கவில்லை.
நால்வரும் தண்ணீருக்குள் இறங்கி, ஒருவருக்கொருவர் தண்ணீரை வாரி விளையாடிக்கொண்டிருந்தனர்.
வசீகரன் சற்றுத் தள்ளிச் சென்றான்.
“இங்க டவர் சரியா வரல. கொஞ்சம் மேல போறேன்.”
என்று சொல்லிவிட்டு, அருவியை ஒட்டியிருந்த உயரமான பாறைப் பகுதியை நோக்கி நடந்தான்.
சில அடிகள் மேலே சென்றதும் கைப்பேசியைப் பார்த்தான்.
ஒரு கோடு.
அழைப்பு துண்டிக்கப்படாமல் இருந்தது.
“இப்ப சொல்லு.”
மதன் மறுபுறம் தொடர்ந்தான்.
“சார், சுனையாழியோட குடும்பத்துக்கு மூலிகைகளோட தொடர்பு ரொம்பப் பழையது.”
வசீகரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“அவங்க குடும்பம் முதல்ல ஒரு மலைக்கிராமத்துல இருந்திருக்காங்க. தலைமுறை தலைமுறையா நாட்டுவைத்தியம் பார்த்த குடும்பம். காலம் போகப் போக படிப்பும் மருத்துவ அறிவும் வளர்ந்திருக்கு.”
வசீகரனின் பார்வை கீழே தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சுனையாழியின் மீது சென்றது.
“அவங்க அப்பா?”
“வைத்தியநாதன். அவரும் டாக்டர்தான். பாரம்பரிய மருத்துவத்துல இருந்து ஆங்கில மருத்துவத்துக்கு மாறியிருக்காரு.”
“அம்மா?”
“அமுதரசி. டாக்டர் இல்ல.”
“அண்ணன் யாழ்வேந்தனும் டாக்டர்... சுனையாழியும் டாக்டர்ன்னு எனக்கே தெரியும்.” என்ற வசீகரனுக்கு,
“ஆமாம், சார்.” என்றான் மதனும்.
சில நொடி வசீகரன் அமைதியாக இருந்தான்.
“குடும்பம் இப்போ எங்கே இருக்கு?” எனவும்,
“திருச்செந்தூர்ல இருக்காங்க, சார்.” என்றான்.
“மூலிகை தேடின்னு அந்தப் பொண்ணு சொன்ன விஷயம்?”
“அது உண்மைதான், சார். அவங்க குடும்பத்துல பழைய குறிப்புகள் சில இருக்கிறது. அவங்க முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் பற்றிய தகவல்களும் இருக்கிறது. அது ஓலைச்சுவடி வடிவத்துல... உங்களுக்கு உதவுமா என்று நீங்களே பாருங்க. இப்பவும் அந்தப் பெட்டி அந்தப் பொண்ணுகிட்டதான் இருக்கு.”
வசீகரனின் பார்வை உடனே அருவியை நோக்கித் திரும்பியது.
“ஓ!?”
“உங்களுக்கு உதவும்னு நிச்சயம்னு சொல்ல முடியாது, சார். ஆனா அந்த மலைப்பகுதியில் நீங்க தேடறது போலத்தான் அந்தப் பொண்ணும் தேடுது. அதுல உங்களுக்கு வாய்ப்பு இருக்கான்னு அந்தப் பழைய குறிப்புகள் தேடிப் பாருங்க.”
வசீகரன் பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
மதன் மீண்டும் பேசினான்.
“இன்னொரு விஷயம், சார்.”
“என்ன?”
“சுனையாழிக்கு வீட்டுல வரன் பார்த்துட்டு இருக்காங்க.”
வசீகரனின் கண்கள் சற்றுக் குறுகின.
“அப்புறம்?”
“சுனையாழிக்கு கல்யாணம் முடிச்சதுக்கப்புறம் யாழ்வேந்தனுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு குடும்பத்துல பேசிக்கிட்டு இருக்காங்க.”
“சரி. வேற ஏதாவது?”
“இப்போதைக்கு இதுதான், சார். இன்னும் தகவல் கிடைச்சா உடனே சொல்றேன்.”
“சரி.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
வசீகரன் கைப்பேசியை மடக்கி வைத்தான்.
சில நொடிகள் அங்கேயே நின்றான்.
பின்னர் கீழே அருவியை நோக்கிப் பார்த்தான்.
யாருக்கும் அவன் பேசியது தெரியவில்லை.
நால்வரும் இன்னும் தண்ணீரில் இருந்தனர்.
யாழ்வேந்தன் தண்ணீரை வாரி இளமாறன் மீது ஊற்ற, இளமாறன் சிரித்தபடி அதைத் திருப்பி அவன் மீது வாரி அடித்தான்.
சுனையாழி அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
முகில்வர்மனும் தண்ணீருக்குள் இறங்கி அவர்களோடு சேர்ந்திருந்தான்.
வசீகரன் மெதுவாகக் கீழே இறங்கினான்.
அவன் இன்னும் ஒருமுறை தன் வரைபடத்தைப் பார்த்தான்.
பின்னர் சுற்றிலும் பார்த்தான்.
அவன் தேடிய இடம் இதுவாக இருக்கலாம்.
வரைபடத்தில் இருந்த பல அடையாளங்கள் இங்கே இருந்தன.
ஆனால்—
அவன் தேடிக்கொண்டிருந்த அந்த ஒரு குறிப்பு மட்டும் இன்னும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
அது எங்கே?
என்ன அது?
என்று அவன் பார்வை சுற்றிலும் தேடிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் முகில்வர்மன் தண்ணீருக்குள் சற்று ஆழமாகச் சென்றான்.
அவன் நீச்சலில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவன்.
மற்றவர்களைப் போல தண்ணீரின் போக்கைக் கணித்துக்கொண்டு இறங்க வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லை.
ஆனால் அவன் அடுத்ததாகச் செய்த ஒரு விஷயம் இளமாறனின் கவனத்தை ஈர்த்தது.
“அந்தப் பக்கம் போகாதீங்க.”
முகில்வர்மன் திடீரென்று சொன்னான்.
யாழ்வேந்தன் திரும்பிப் பார்த்தான்.
“ஏன்?”
“அங்கே ஆழம் அதிகம்.”
முகில்வர்மன் இயல்பாகவே பதில் சொன்னான்.
அவன் சுற்றிப் பார்த்து இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்டினான்.
“இந்தப் பக்கம் வாங்க. இங்கே ஆழம் கம்மி.”
சுனையாழி அவனைப் பார்த்தாள்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
முகில்வர்மன் ஒரு கணம் அமைதியாக இருந்தான்.
அவனுக்கும் எப்படி என்று தெரியவில்லை.
ஆனால் அந்த இடத்தைப் பற்றி அவனுடைய உடல் தயக்கமின்றி முடிவு செய்தது.
“தெரியல... ஆனா அந்தப் பக்கம் போக வேண்டாம்.”
அவன் மீண்டும் சொன்னான்.
“அந்தக் கல்லுக்கு அப்புறம் நீரோட்டம் வேகமா இருக்கு.”
இளமாறன் முகில்வர்மனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய உள்ளத்தில் மீண்டும் அந்தப் பழக்கமான உணர்வு எழுந்தது.
இவன் யார்?
என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
ஆனால் இவன் தனக்கு ஏதோ ஒரு விதத்தில் மிகவும் நெருக்கமானவன் என்ற உணர்வு மட்டும் அவனை விடவில்லை.
முகில்வர்மனோ அதை கவனிக்கவில்லை.
அவன் தண்ணீரை நோக்கி நீந்திச் சென்றான்.
சில நொடிகளில் அவன் உடல் முழுவதும் நீருக்குள் மறைந்தது.
அருவியிலிருந்து விழுந்த நீர் அவனைச் சுற்றிச் சுழன்றது.
அவன் இன்னும் ஆழமாகச் சென்றான்.
அங்கே—
எதுவும் தோன்றவில்லை.
எந்தக் காட்சியும் இல்லை.
எந்த உருவமும் இல்லை.
எந்தச் சொல்லும் இல்லை.
ஆனால் அந்தத் தண்ணீருக்குள் அவன் உடல் மட்டும் ஒரு வித்தியாசமான இயல்பை உணர்ந்தது.
இந்த இடம் அவனுக்கு புதிதாக இல்லை.
தண்ணீரின் குளிர்ச்சி புதிதாக இல்லை.
நீரோட்டத்தின் அழுத்தம் புதிதாக இல்லை.
அவன் உடல் அந்த நீரை ஏற்கனவே அறிந்திருந்தது போலிருந்தது.
எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று அவன் யோசிக்கவில்லை.
எந்த இடத்தில் ஆழம் அதிகம் என்று தேடவில்லை.
எந்தப் பாறையைத் தவிர்க்க வேண்டும் என்று கணக்கிடவில்லை.
அவை அனைத்தும் அவனுக்குள் இயல்பாகவே இருந்தன.
அந்த உணர்வுக்குள் இன்னொரு உணர்வு மெதுவாகத் தெளிந்தது.
மிகவும் இயல்பாக.
மிகவும் உறுதியாக.
இந்த அருவியில் நான் ஏற்கனவே குளித்திருக்கிறேன்.
அவன் அசையாமல் இருந்தான்.
அந்த எண்ணம் அவனைப் பயமுறுத்தவில்லை.
அவன் அதிர்ச்சியடையவும் இல்லை.
ஆனால்—
அது வெறும் கற்பனை போலவும் இல்லை.
நிச்சயம்.
இந்த அருவியில் அவன் ஏற்கனவே குளித்திருக்கிறான்.
ஒருமுறை அல்ல.
பலமுறை.
அந்த உணர்வு மட்டும் அவனுக்குள் முழுமையாகத் தெளிவாக இருந்தது.
மேலிருந்து விழுந்துகொண்டிருந்த நீரின் அழுத்தத்துக்குள், அந்தப் பழக்கமான உணர்வு இன்னும் ஆழமாக அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது.
அவன் அறியாமலேயே—
அந்த அருவி அவனை ஏற்கனவே அறிந்திருந்தது. ஆர்ப்பரித்து அவனைத் தன்னுள் வரவேற்றது...
தொடரும்...